என் மலர்
நீங்கள் தேடியது "Shankar"
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் 'இந்தியன் 2'.
- இப்படத்தில் மீண்டும் நடிப்பதாக நடிகை காஜல் அகர்வால் சில தினங்களுக்கு முன்பு உறுதிப்படுத்தினார்.
கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' படம் இயக்கப் போவதாக ஷங்கர் அறிவித்து, அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது. பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அதன்பின் ஷங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர். 'விக்ரம்' பட வெற்றிக்குப் பிறகு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், இந்தியன்-2 நிச்சயம் தொடங்கும்' என தெரிவித்திருந்தார்.

இந்தியன் 2
இந்த படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட காஜல் அகர்வால் விலகி விட்டதாக கூறப்பட்டது. இதனை காஜல் அகர்வால் மறுத்து, படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது என்றும் தெரிவித்தார்.

கார்த்திக்
இந்த நிலையில் இந்தியன்-2 படத்தில் நடிக்கவிருக்கும் முக்கிய நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த நடிகர் கார்த்திக் இந்தியன்-2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கார்த்திக் சமீபகாலமாக படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் 'இந்தியன் 2'.
- இப்படத்தில் மீண்டும் நடிப்பதை நடிகை காஜல் அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் 'இந்தியன்-2' படம் இயக்கப் போவதாக ஷங்கர் அறிவித்து, அதன்பின் படப்பிடிப்பு பணிகளும் தொடங்கியது. பின்னர் பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் ஷங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர். 'விக்ரம்' பட வெற்றிக்குப் பிறகு, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்ஹாசன், 'இந்தியன்-2 நிச்சயம் தொடங்கும்' என தெரிவித்திருந்தார்.

இந்தியன் 2
'இந்தியன்-2' படத்தில் காஜல் அகர்வால் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். அதன் பின் காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால் அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. சமீபத்தில் குழந்தை பெற்றெடுத்த காஜல் அகர்வால் 'இந்தியன்-2' படம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வந்தார். இதனால் அவருக்கு மாற்றாக வேறொரு கதாநாயகி நடிப்பார் என்று கருதப்பட்டது.

காஜல் அகர்வால்
இந்நிலையில் சமூக வலைதளத்தில் காஜல் அகர்வால் ஒரு புதிய தகவலை பதிவிட்டு இருக்கிறார். அதில், 'இந்தியன்-2 படத்தில் நான் நிச்சயம் நடிக்கிறேன். படப்பிடிப்பு செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் தொடங்குகிறது', என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வந்த வதந்திகளுக்கு காஜல் அகர்வால் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். 'இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் மீண்டும் தொடங்க உள்ளதையொட்டி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
- ஜென்டில்மேன், இந்தியன், காதலன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குனர் ஷங்கர்.
- இவருக்கு பிரபல பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்றவர் ஷங்கர். இவர் ஜென்டில்மேன், இந்தியன், காதலன், ஜீன்ஸ், சிவாஜி, எந்திரன், 2.0 உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து 'ராம்சரண் 15' என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதி, தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஷங்கர்
இந்நிலையில் முன்னணி பல்கலைகழகமான வேல்ஸ் நிறுவனம் இயக்குனர் ஷங்கருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே டாக்டர் பட்டம் பெற இருக்கும் இயக்குனர் ஷங்கருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
- தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர்.
- இவர் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ஷங்கர். சமீபத்தில், 'இந்தியன்-2' படம் இயக்குவதாக ஷங்கர் அறிவித்து, படப்பிடிப்பு பணிகளும் நடந்தன. ஆனால் பல்வேறு சிக்கல்கள் காரணமாக அந்த படத்தின் படப்பிடிப்பு நிலுவையில் இருக்கிறது. இதற்கிடையில் தெலுங்கில் ராம் சரணுடன் ஒரு படம், இந்தியில் ரன்வீர் சிங்குடன் ஒரு படம் என ஷங்கர் 'பிஸி'யாக இருக்கிறார். இந்த படங்களை தொடர்ந்து 'இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
ஷங்கருக்கு, நீருக்கடியில் அறிவியல் கலந்த ஒரு படத்தை இயக்குவது என்பது கனவு. இதற்கான முன்னோட்டமாக தான் 'எந்திரன்' படத்தை அவர் இயக்கினார். தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு தனது கனவு படத்தை இயக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதன்படி ரூ.1,000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் இந்தி சினிமா உலகின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தெலுங்கு பட உலகின் முன்னணி கதாநாயகன் ராம்சரண் ஆகியோர் இப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ராம்சரண் - ஹிருத்திக் ரோஷன்
இந்த படத்தை அடுத்த ஆண்டு எடுத்து முடித்து விட ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. நீருக்கடியில் எடுக்கப்படும் இந்த படம் சர்வதேச அளவில் இந்திய சினிமாவுக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தரும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிவுள்ளது.
- இப்படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்கியுள்ளார்.
தர்மதுரை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் 'மாமனிதன்'. இந்த திரைப்படத்தை ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பாக யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். மேலும், இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். தர்மதுரை படத்தை தயாரித்த ஆர்.கே.சுரேஷ், மாமனிதன் படத்தின் வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறார். மாமனிதன் திரைப்படம் இன்று ஜூன் 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

ஷங்கர்
இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் ஷங்கர் நெகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். விஜய் சேதுபதி, சீனுராமசாமி உள்பட படக்குழுவினர்களுக்கு தனது பாராட்டுக்களை அவர் தெரிவித்துள்ளார். அதில், ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி மாமனிதன் படம் மூலம் கிடைத்தது, இயக்குனர் சீனுராமசாமி அவரது இதயத்தையும் ஆன்மாவையும் வைத்து இப்படத்தை ஒரு யதார்த்த படமாக மாற்றியுள்ளார். விஜய் சேதுபதியின் சிறப்பான நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது. மேஸ்ட்ரோ இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்துடன் ஆத்மார்த்தமாக கலந்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
#Maamanithan Got the satisfaction of watching a good film,Dir @seenuramasamy put his heart &soul and made this a realistic classic👏 @VijaySethuOffl 's brilliant performance deserves a national award.Music from Maestro @ilaiyaraaja & @thisisysr blended soulfully with the film.
— Shankar Shanmugham (@shankarshanmugh) June 23, 2022
- ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் இந்தியன்-2.
- இந்தியன்-2 படத்தின் வேலைகள் ஆரம்பிக்க இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13-ந்தேதி வெளியான திரைப்படம் 'டான்'. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற டான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
இந்த நிலையில், படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக சென்னையில் டான் வெற்றிக்கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் எம்.எல்,.ஏ., டான் படம் வெற்றியடைந்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். அப்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படம் குறித்து முக்கிய தகவலை அவர் வெளியிட்டார். அதாவது இந்தியன் 2 படத்தின் வேலைகள் ஆரம்பிக்க இருக்கிறாம் என்று கூறினார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரமிட்டனர். இந்தியன் 2 படத்தின் அப்டேட் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Dear Friends.. our new journey.. with all your love and support!!
— Chimbu Deven (@chimbu_deven) May 20, 2019
Thanks @vp_offl bro!! 🙏🙏👍@tridentartsoffl and my whole team & friends! 🙏🙏🙏🙏🙏 pic.twitter.com/0NJir3FaAV


