தலைவர் 171 படத்தின் புதிய அப்டேட்

ஜெயிலர் படத்தை தயாரித்த 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது.வேட்டையன்' படத்துக்கு பிறகு ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார்.
தலைவர் 171 படத்தின் புதிய அப்டேட்
Published on

கடந்த ஆண்டு நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்தார். இப்படம் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.

அதைத் தொடர்ந்து ரஜினி தற்போது இயக்குனர் டி.ஜே.ஞானவேலின் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டின் இறுதியில் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்டையன்' படத்துக்கு பிறகு ரஜினி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' படத்தில் நடிக்க உள்ளார்.

ரஜினிகாந்த். படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. ஜெயிலர் படத்தை தயாரித்த 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளது. சில வாரங்களுக்கும் முன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது.

அதில் ரஜினிகாந்தின் கை, தங்க கைக்கடிகாரங்களால் வடிவமைக்கப்பட்ட விலங்கில் மாட்டி இருக்கும். அவருக்கும் பின்னால் ஒரு பெரிய கடிகார வடிவமைக்கிபட்டிருக்கும்.

அந்தப் போஸ்டரை பார்த்த ரசிகர்களுக்கு பல்வேறு யூகங்கள் தோன்றின. இப்படம் லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ  கதைக்களத்தில் ஒரு அங்கமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உருவாகியுள்ளது.

மேலும் அந்த படத்தில் ரஜினிகாந்த் 'தாதா' வேடத்தில் நடிக்கிறார் என்ற தகவல் பரவியது. ரஜினியின் தலைவர் 171 படத்துக்கு 'கழுகு' என்று டைட்டில் பெயர் சூட்டப்பட்டு இருக்க்கிறது என தகவல் வெளியாகியது.

இந்நிலையில் அடுத்த சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஸ்ருதிஹாசன் ரஜினிக்கு மகளாக நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் மோகன் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

படத்தின் ப்ரொமொ வீடியோ படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. அடுத்த வாரத்தில் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com