search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    • 7291 ஏக்கர் அந்த வகையில் நடப்பு ஆண்டில் 7,291 ஏக்கர் நிலப்பரப்பில் 9 ஆயிரம் விவசாயிகள் முருங்கை சாகுபடி செய்தனர்.
    • மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்டத்தை பெரும்பாலான கூலித் தொழிலாளர்கள் விரும்புகிறார்கள்.

    கரூர்:

    தமிழகத்தில் முருங்கை சாகுபடியில் கரூர் மாவட்டம் புகழ்பெற்று விளங்குகிறது. இங்குள்ள பருவநிலை மற்றும் மண்ணின் தன்மை முருங்கைக்கு உகந்ததாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் முருங்கைக்காய் ருசியாகவும், சதை பிடிப்பு அதிகமாகவும் இருக்கும்.

    இந்த முருங்கைக்காய்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இங்கு அரவக்குறிச்சி, மூலனூர், சின்னதாராபுரம், பள்ளப்பட்டி, க. பரமத்தி ஆகிய பகுதிகளில் அதிகம் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 6 மாதங்கள் முருங்கைக்காய்கள் அறுவடை செய்ய இயலும் என்பதால் விவசாயிகளும் முருங்கை சாகுபடி செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    7291 ஏக்கர் அந்த வகையில் நடப்பு ஆண்டில் 7,291 ஏக்கர் நிலப்பரப்பில் 9 ஆயிரம் விவசாயிகள் முருங்கை சாகுபடி செய்தனர். வறட்சியை தாங்கும் பயிராக கருதப்படும் முருங்கைக்காய் கூட கடந்த இரண்டு மாதங்களாக மழை பெய்யாததாலும், வரலாறு காணாத வெப்பத்தாலும் விளைச்சல் பாதியாக குறைந்துள்ளது. இது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.

    இதுபற்றி அரவக்குறிச்சி ஈசநத்தம் பகுதியைச் சேர்ந்த முருங்கை விவசாயி செல்வராஜ் கூறும்போது, நான் 2 ஏக்கர் நிலத்தில் முருங்கை பயிரிட்டேன். வழக்கமாக மார்ச் முதல் ஜூன் வரையிலும் அக்டோபர் முதல் நவம்பர் வரையிலும் நல்ல மகசூல் கிடைக்கும். ஆனால் இந்த முறை மழை இல்லாத காரணத்தினால் விளைச்சல் 70 சதவீதம் சரிந்து விட்டது. ஒரு சில மரங்கள் ஓரளவு மகசூல் கொடுத்தாலும் தரம் குறைந்து விட்டதால் விலை கிடைக்கவில்லை என்றார்.

    கரூர் லிங்கம நாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணியன் கூறும்போது, அமராவதி மற்றும் குடகனாறு தண்ணீரை நம்பி நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் இந்த இரண்டு ஆறுகளும் இந்த ஆண்டு வறண்டு விட்டன.

    எனவே நிலத்தடி நீரை பயன்படுத்தி பயிர்களுக்கு நீர் பாசனம் செய்து முயற்சி செய்து பார்த்தோம். ஆனால் மரங்களை பாதுகாக்க முடியவில்லை. இந்த முறை எல்லா மரங்களும் பலன் தரவில்லை. பொதுவாக நல்ல மகசூல் காலத்தில் ஒரு ஏக்கருக்கு ஒன்றரை டன் முருங்கை கிடைக்கும். ஆனால் தற்போது கோடை வெப்பத்தால் 60 சதவீத இழப்பை சந்தித்துள்ளோம்.

    ஒரு பருவத்தில் ஒரு மரத்திலிருந்து 300 முதல் 400 வரை முருங்கைக்காய் கிடைக்கும். சுவை மற்றும் சதைப்பற்று அடிப்படையில் விலை கிடைக்கும். ஆனால் இப்போது சதைப் பற்று சுருங்கி விட்டது. இதனால் விலையும் குறைந்து விட்டது. மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்டத்தை பெரும்பாலான கூலித் தொழிலாளர்கள் விரும்புகிறார்கள்.

    இதனால் வேலை ஆட்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதே போன்று மயில் மற்றும் பூச்சிகளின் தாக்கமும் அதிகம் உள்ளது. வெப்ப காலங்களைத் தவிர விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதற்கு இவையும் ஒரு காரணமாக உள்ளது என்றார்.

    அரவக்குறிச்சி மொத்த முருங்கை விற்பனை வியாபாரி கே.ஆர்.கே.குப்புசாமி கூறும்போது, இந்த ஆண்டு விளைச்சல் குறைந்ததால் சந்தைக்கு முருங்கைக்காய் வரத்து மிகவும் மோசமாக உள்ளது. அரவக்குறிச்சியில் இருந்து கேரளா, சத்தீஸ்கர், ஐதராபாத், பெங்களூரு போன்ற இடங்களுக்கு இந்த சீசனில் மார்ச் முதல் ஜூன் வரை நாங்கள் முருங்கைக்காய் கொண்டு செல்வோம். இருப்பினும் குறைந்த அளவு கிடைப்பதால் எங்களால் வணிகத்தை வழக்கம்போல் நடத்த முடியவில்லை.

    பொதுவாக சந்தைகளுக்கு ஒரு நாள் 300 டன் முருங்கை வரும். ஆனால் இந்த ஆண்டு 150 முதல் 200 டன்னாக குறைந்துள்ளது என்றார்.

    வேளாண் வணிகம் மற்றும் சந்தைப்படுத்துதல் துறையின் அதிகாரி ஆர்.கண்ணன் கூறும்போது, பருவநிலை மாற்றத்தால் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு 70 சதவீதம் வரை மகசூல் இழப்பு ஏற்ப ட்டுள்ளது. அரவக்குறிச்சி பகுதியில் முருங்கை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இப்போது ரூ. 4 கோடி செலவில் முருங்கை பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    கிட்டத்தட்ட இந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. மகசூல் அதிகமாகும்போது பச்சை முருங்கைக்காய்க்கு குறைந்த விலை கிடைப்பதால், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக உற்பத்தி செய்வதற்கான விருப்பங்களை ஆராய விவசாயிகளை ஊக்குவித்து வருகின்றோம் என்றார்.

    • வேறு அறைக்கு மாற்ற வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டுவிடம் சவுக்கு சங்கர் கோரிக்கை விடுத்தார்.
    • ஜாமின் மனு மீதான விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    கோவை:

    போலீஸ்அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மீது சென்னையில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவானதால் சென்னை பெருநகர காவல்துறை சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது.

    இதற்கிடையே சவுக்கு சங்கருக்கு ஏற்பட்ட விபத்தில் அவருடைய வலது கையில் காயம் ஏற்பட்டு உள்ளதால் அதற்காக கையில் கட்டு போடப்பட்டு உள்ளதுடன் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க கோவை சைபர் கிரைம் போலீசார் கோவை 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

    அந்த மனு மீது விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு சரவணபாபு, சவுக்கு சங்கரை ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார். இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையின்போது, காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் மீது அவதூறாக பேசியதற்கு ஆதாரம் உள்ளதா? தூண்டுதலின் பேரில் பேசினாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    பின்னர் விசாரணை முடிந்ததும் நேற்று மாலையில் போலீசார் பலத்த பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை கோவை கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் மாஜிஸ்திரேட்டு சரவணபாபு முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது சவுக்கு சங்கர், தன்னை கோவை மத்திய சிறையில் தனி அறையில் அடைத்து உள்ளனர். என் கையில் காயம் ஏற்பட்டு உள்ளதால் சிரமமாக இருக்கிறது. எனவே என்னை வேறு அறைக்கு மாற்ற வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டுவிடம் கோரிக்கை விடுத்தார்.

    அதை கேட்ட மாஜிஸ்திரேட்டு, உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள், சட்ட உதவி மையம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து சவுக்கு சங்கரை வருகிற 28-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு சரவணபாபு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    முன்னதாக இந்த வழக்கில் இருந்து தனக்கு ஜாமின் கேட்டு சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு, மாஜிஸ்திரேட்டு சரவணபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, அந்த மனு மீதான விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில் பெலிக்ஸின் யூ டியூப் சேனலில் முத்துராமலிங்க தேவர் பற்றி சவுக்கு சங்கர் அவதூறு கருத்து தெரிவித்ததாக வழக்கறிஞர் முத்து என்பவர் அளித்த புகாரின் பேரில் கோவை மாநகர பந்தய சாலை காவல் நிலையத்தில், சவுக்கு சங்கர், பெலிக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையத்தில் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி நீதிமன்றத்திற்கு சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்படுகிறார்.

    போலீஸ்அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை திருச்சிக்கு அழைத்துச்செல்லும் போலீஸ் வாகனத்தில் காவலுக்காக முழுவதும் மகளிர் போலீசார் மட்டுமே உடன் சென்றது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அட்சய திருதியையொட்டி தங்கம் விலை ஒரே நாளில் 3 முறை உயர்ந்து காணப்பட்டது.
    • தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 725 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடனேயே நீடித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 10-ந்தேதி அட்சய திருதியையொட்டி தங்கம் விலை ஒரே நாளில் 3 முறை உயர்ந்து காணப்பட்டது. விலை உயர்ந்திருந்தாலும், அன்றைய தினம் தங்கம் விற்பனை அதிகமாகவே இருந்தது. அதற்கு மறுநாளில் இருந்து விலை குறையத் தொடங்கியது.

    அதன்படி, 11, 13 (நேற்று முன்தினம்) மற்றும் 14-ந்தேதி (நேற்று) என 3 நாட்களாக விலை சரிந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து 53 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 725 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு அதிகரித்து 91 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • அ.தி.மு.க.வால் வளர்ந்த ரகுபதி தி.மு.க.வில் சேர்ந்த பிறகு தன்னை வளர்த்த கட்சி மீது விஷத்தை கக்குகிறார் என்றார்.
    • எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட கழகத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை:

    தேர்தல் முடிவு வெளியான பிறகு அ.தி.மு.க.வுக்குள் பிளவு ஏற்படலாம். கட்சியின் முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார்கள் என்று கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    அதை உறுதிப்படுத்தும் வகையில் எஸ்.பி.வேலு மணி ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த வைத்தி லிங்கத்தை சந்தித்து பேசி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க கடந்த 12-ந் தேதி சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தனது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல பலரும் திரண்டு சென்றார்கள். ஆனால் எஸ்.பி.வேலுமணி செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வேலுமணி பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அரசல் புரசலாக அ.தி.மு.க.வுக்குள் பேசப்பட்ட இந்த விவகாரம் தி.மு.க. அமைச்சரான ரகுபதி கொளுத்திப் போட்ட கருத்துக்கு பிறகு சூடு பிடித்தது.

    அவர் கூறும் போது, தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க.வுக்கு தலைமை தாங்க போவது செங்கோட்டையனா? வேலுமணியா? என்பது தெரிய வரும். பெரிய பிளவு ஏற்படும் என்று கூறினார். அவரது இந்த கருத்துக்கு ஆர்.பி.உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்தார்.

    அ.தி.மு.க.வால் வளர்ந்த ரகுபதி தி.மு.க.வில் சேர்ந்த பிறகு தன்னை வளர்த்த கட்சி மீது விஷத்தை கக்குகிறார் என்றார்.

    சொன்னால் நம்புங்க..

    இந்த நிலையில் தனது எக்ஸ் வலைத்தளத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ள எஸ்.பி.வேலுமணி, சொன்னால் நம்புங்க நான் ஒரு போதும் அ.தி.மு.க.வில் பிளவை ஏற்படுத்த மாட்டேன் என்பது போல் குறிப்பிட்டுள்ளார்.

    அதாவது எம்.ஜி.ஆரால் தோற்றுவிக்கப்பட்டு, ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்ட கழகத்தை எடப்பாடி பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

    அதே போல் செங்கோட்டையனும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். தான் கட்சி தலைமைக்கு விசுவாசமாக இருப்பேன் என்றார். ஆனால் என்னதான் நடக்குது பார்ப்போம் என்பது போல் தொண்டர்கள் பரிதாபமாக பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவை மாநகர பந்தய சாலை காவல் நிலையத்தில், சவுக்கு சங்கர், பெலிக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோவை:

    சவுக்கு சங்கர் மீது சென்னையில் அடுத்தடுத்து பல வழக்குகள் பதிவானதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய்ரத்தோர் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சவுக்குசங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    மேலும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு மே 28ம் தேதி வரை நீதிமன்றம் காவலில் வைக்க கோவை 4வது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் பெலிக்ஸின் யூ டியூப் சேனலில், முத்துராமலிங்க தேவர் பற்றி சவுக்கு சங்கர் அவதூறு கருத்து தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    வழக்கறிஞர் முத்து என்பவர் அளித்த புகாரில் கோவை மாநகர பந்தய சாலை காவல் நிலையத்தில், சவுக்கு சங்கர், பெலிக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சவுக்கு சங்கர் மீது, ஏற்கனவே பல்வேறு காவல் நிலையத்தில் 7 வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு வழக்கு தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கிற்காக, தற்போது சவுக்கு சங்கர் திருச்சி அழைத்து செல்லப்படுகிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கழிவுகளை பயோ கேஸாக மாற்றி மருத்துவமனைக்கும், கேன்டீனில் சமைக்கவும் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பு இருக்க வேண்டும்.
    • மழை நீர் வடிகால் வசதி, குழந்தைகள் விளையாடுவதற்கான இடம் போன்றவை உறுதி செய்யப்பட வேண்டும்.

    சென்னை:

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என தமிழக அரசுக்கு மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

    கட்டுமானப்பணியில் 'எய்ம்ஸ்' நிர்வாகத்துக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ள மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரைகள்:

    * கழிவுகளை பயோ கேஸாக மாற்றி மருத்துவமனைக்கும், கேன்டீனில் சமைக்கவும் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பு இருக்க வேண்டும்.

    * மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும், தரமான ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைக்க வேண்டும்.

    * மழை நீர் வடிகால் வசதி, குழந்தைகள் விளையாடுவதற்கான இடம் போன்றவை உறுதி செய்யப்பட வேண்டும்.

    * எலெக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் செய்ய வசதிகள் ஏற்படுத்துதல், கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்தும் கட்டமைப்பு அமைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நேற்று முன்தினம் முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் மொத்தம் 13,484 விண்ணப்பங்கள் ‘எமிஸ்' தளத்தில் பதிவிடப்பட்டுள்ளன.

    சென்னை:

    நடப்பு கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பம் உள்ள ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அறிவித்து இருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 17-ந்தேதி(வெள்ளிக்கிழமை) ஆகும். இந்த நாட்களுக்குள் விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

    கடந்த 2 நாட்களில் தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ், இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 3 ஆயிரத்து 33, பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 1,790, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 891, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 155 என 5,869 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    இதேபோல், பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கு 168, பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 4,375, முதுகலை பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கு 2,748, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 178, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதலுக்கு 146 என 7,615 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருக்கின்றன. ஆக தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் மொத்தம் 13,484 விண்ணப்பங்கள் 'எமிஸ்' தளத்தில் பதிவிடப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் போட்டிப்போட்டு விண்ணப்பிப்பதால், எமிஸ் தளம் நேற்று முடங்கியதாகவும் தகவல்கள் வெளியாகின.

    • கல்லூரி வளாகம் முழுவதுமே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பில் இருந்து வருகிறது.
    • அரசியல் கட்சி முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல்லடம் சாலை எல் ஆர் ஜி அரசு கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு , கோபி , அந்தியூர் , பவானி , பெருந்துறை ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும் தனித்தனியாக ஸ்ட்ராங் ரூம் அமைத்து போலீசார் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி வளாகம் முழுவதுமே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பில் இருந்து வருகிறது.

    இந்தநிலையில் நேற்று இரவு பவானி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் மின்சாரம் தடை ஏற்பட்டது. சுமார் 20 முதல் 25 நிமிடங்களுக்குள்ளாக மின்தடை நீடித்ததால் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை.

    இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் எல் ஆர் ஜி கல்லூரிக்கு சென்றனர். மின்வாரிய சிறப்பு குழுவினர் பழுதை சீரமைத்தனர். ஆட்டோமேட்டிக் ஜெனரேட்டர் மூலம் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ஆன் செய்யப்பட்டது.

    மழையின் காரணமாக மின்தடை ஏற்பட்டதாகவும் , 20 நிமிடங்களுக்குள்ளாக உடனடியாக சரி செய்யப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதனால் எல்.ஆர்.ஜி கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் கோடை மழை ஆங்காங்கே பெய்யத் தொடங்கி இருப்பதால், பல்வேறு இடங்களில் வெப்பம் குறைந்துள்ளது.
    • நேற்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் நிலவி வரும் அதிக வெப்ப அலை காரணமாக தொழிலாளர்களின் உடல்நலம் பாதிப்படைவதை தடுக்கும் பொருட்டு, திறந்த வெளியில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமான பணிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளக்கூடாது என கட்டுமான நிறுவனங்களுக்கு சென்னை தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்குனர் நேற்று அறிவுறுத்தி இருந்தார்.

    இந்நிலையில் தமிழகத்தில் கோடை மழை ஆங்காங்கே பெய்யத் தொடங்கி இருப்பதால், பல்வேறு இடங்களில் வெப்பம் குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகும் இடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. அந்தவகையில் நேற்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கட்டுமான நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கும்படி, இணை இயக்குனர்களுக்கு, தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

    • சென்னை சென்ட்ரல் மற்றும் விமான நிலையம் இடையே செல்லும் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • தொழில்நுட்பக் கோளாறால் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரெயில் சேவை மிகவும் கை கொடுத்து வருகிறது.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து புறநகர் ரெயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற வற்றை இணைக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் தினமும் 3.25 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரெயிலில் பயணிகள் எளிதாக செல்ல பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் நாளுக்கு நாள் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் மீனம்பாக்கம்-விமான நிலையம் மெட்ரோ ரெயில் நிலையங்கள் இடையே இன்று அதிகாலையில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமான நிலையத்தில் இருந்து சென்ட்ரலுக்கு நேரடியாக மெட்ரோ ரெயில்களை இயக்க முடியவில்லை. ஆலந்தூர்-விமான நிலையம் இடையே சேவை முடங்கியது.

    தொழில்நுட்ப வல்லுனர்கள் கோளாறை சரி செய்வதற்கு நீண்ட நேரம் தேவைப்படும் என்று கூறியதால் அந்த வழித்தடத்தில் சேவை இன்று முழுவதும் ரத்து செய்யப்படுவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    பயணிகள் விமான நிலையத்திற்கு பச்சை நிற வழித்தடம் வழியாக செல்ல ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இறங்கி மாறிச் செல்ல வேண்டும். பச்சை மற்றும் நீல நிற வழித்தடத்தில் வழக்கம் போல மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    விம்கோ நகர் டெப்போவில் இருந்து விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் நிலையத்தில் இருந்து பரங்கிமலை நிலையம் வரை வழக்கம் போல் இயக்கப்படுகிறது.

    சென்ட்ரல்-விமான நிலையம் இடையே நேரடி சேவை ரத்து செய்யப்பட்டதால் மக்கள் ஆலந்தூரில் மாறி செல்ல வேண்டியது இருந்தது. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். வழக்கமாக காலை நேரத்தில் மெட்ரோ ரெயில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒரு பகுதி சேவை ரத்து செய்யப்பட்டதால் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    • மாடு மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை இடதுபுறமாக திருப்பியபோது சாலையோரம் இருந்த மரத்தின் மீது கார் அதிவேகமாக மோதியது.
    • விபத்தில் காரில் பயணம் செய்த ராஜேஷ், ஏழுமலை, விக்னேஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    கல்பாக்கம்:

    சென்னை வடபழனி அழகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது நண்பர்களான சூளைப்பள்ளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ராஜேஷ் (வயது 22), ஏழுமலை (30), மேற்கு மாம்பலத்தை சேர்ந்த யுவராஜ் (20) உள்ளிட்ட 5 பேர் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சென்றுவிட்டு நேற்று காரில் சென்னை திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூர் பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் கார் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் திடீரென பசுமாடு ஒன்று சாலையின் குறுக்கே ஓடியது. மாடு மீது மோதாமல் இருக்க டிரைவர் காரை இடதுபுறமாக திருப்பிய போது சாலையோரம் இருந்த மரத்தின் மீது கார் அதிவேகமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ராஜேஷ், ஏழுமலை, விக்னேஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இந்த விபத்தைக் கண்ட வாயலூர் பகுதி மக்கள் அப்பளம் போல் நொறுங்கிய காரில் சிக்கிக்கொண்டிருந்தவர்களை மீட்க இரும்பை அறுக்கும் எந்திரம் மூலம் காரை அறுத்து படுகாயம் அடைந்தவர்களை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே யுவராஜ் (20) மற்றும் மற்றொரு வாலிபர் என 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சதுரங்கப்பட்டினம் போலீசார் உயிரிழந்த 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து கிழக்கு கடற்கரை சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம்.
    • ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

    தமிழகத்தில் வாரயிறுதி நாட்களையொட்டி, வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளை இயக்கு உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    17/05/2024 (வெள்ளிக்கிழமை) 18/05/2024 (சனிக்கிழமை) மற்றும் 19/05/2024 (ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்தம் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில். கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 17/05/2024 (வெள்ளிக் கிழமை) அன்று 555 பேருந்துகளும் 18/05/2024 (சனிக்கிழமை) அன்று 645 பேருந்துகளும், 19/05/2024 (ஞாயிற்றுக் கிழமை) 280 பேருந்துகளும் கோயம்பேட்டிலிருந்து நாகை. வேளாங்கண்ணி. ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 17/05/2024, 18/05/2024 மற்றும் 19/05/2024 ( வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை) அன்று 195 திட்டமிடப்பட்டுள்ளது.

    பேருந்துகளும் இயக்க எனவே, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 17/05/2024 (வெள்ளிக் கிழமை) அன்று 555 பேருந்துகளும் 18/05/2024 (சனிக்கிழமை) அன்று 645 பேருந்துகளும், 19/05/2024 (ஞாயிற்றுக் கிழமை) 280 பேருந்துகளும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 17/05/2024 வெள்ளிக் கிழமை அன்று 65 பேருந்துகளும் 18/05/2024 சனிக்கிழமை அன்று 65 பேருந்துகளும் மற்றும் 19/05/2024 ஞாயிற்றுக் கிழமை அன்று 65 பேருந்துகளும், மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க

    திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×