search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சவுக்கு சங்கர்"

    • நீதிமன்ற உத்தரவை மீறி சவுக்கு சங்கர் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வந்ததாக வழக்கு.
    • இனி கருத்துக்களை பதிவிடும்போது எச்சரிக்கையுடன் இருக்கும்படி நீதிபதி அறிவுறுத்தினார்.

    சென்னை:

    சவுக்கு சங்கர் தன்னைப்பற்றி தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதாக செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சவுக்கு சங்கர் இவ்வாறு அவதூறு கருத்து தெரிவிக்க தடை விதிக்கவேண்டும், சவுக்கு சங்கர் மான நஷ்ட ஈடாக ரூ.2 கோடி வழங்க உத்தரவிடவேண்டும் என்றும், செந்தில் பாலாஜி தனது மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான கருத்துக்களை சவுக்கு சங்கர் பதிவு செய்வதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

    ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி சவுக்கு சங்கர் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வந்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதற்காக சவுக்கு சங்கருக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து இன்று தீர்ப்பளித்தார். மேலும், தனது பதிவு குறித்து சவுக்கு சங்கர் எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை எனக் கூறிய நீதிபதி, இனி கருத்துக்களை பதிவிடும்போது எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து சவுக்கு சங்கர் செயல்பட்டு வருகிறார்.
    • சவுக்கு சங்கருக்கு எதிராக கிரிமினல் அவதூறு சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    சவுக்கு சங்கருக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்து உள்ளார்.

    அந்த வழக்கு மனுவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருப்பதாவது:-

    நான் 25 ஆண்டு காலமாக அரசியலில் உள்ளேன். கரூர் மற்றும் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகளில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 5 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு உள்ளேன். தமிழ்நாடு அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறேன். அரசியல் வாழ்க்கையில் நேர்மையாகவும், பொது மக்களுக்கு பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறேன்.

    இதனால், எனக்கு பொது மக்கள் மத்தியில் நற்பெயர் உள்ளது. அந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக தொடர்ந்து சவுக்கு சங்கர் செயல்பட்டு வருகிறார்.

    இவர் லஞ்ச ஒழிப்புத்துறையில் ஊழியராக வேலை செய்து வந்தார். பின்னர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

    தற்போது யூடியூப் சேனலில் எனக்கு எதிராக தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்.

    என்னைப் பற்றி மட்டுமல்ல உயர் அதிகாரிகளையும் தொடர்ந்து அவதூறு செய்து வருகிறார்.

    கடந்த ஜூலை மாதம் ஒரு யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுபான பார்களை நான் நடத்தி வருவதாகவும், இதனால் கட்சி தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறி பொய்யான குற்றச்சாட்டை கூறியுள்ளார். எனக்கு எதிரான வழக்கில் முதல் குற்றவாளி என சேர்க்கப்பட்ட பாஸ்கர் மர்மமான முறையில் இறந்ததாகவும் பொய்யான தகவலை கூறியுள்ளார்.

    இதுபோல பல்வேறு குற்றச்சாட்டுகள் எனக்கு எதிராக அவர் சுமத்தி வருகிறார். எனவே சவுக்கு சங்கருக்கு எதிராக கிரிமினல் அவதூறு சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த நிபந்தனையின் அடிப்படையில் மதுரை வந்த சவுக்கு சங்கர் இன்று காலை மாவட்ட 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு தனது வக்கீலுடன் வந்தார்.
    • கோர்ட்டு அலுவலகத்தில் இருந்த பதிவேட்டில் சவுக்கு சங்கர் கையெழுத்திட்டு சென்றார்.

    மதுரை:

    சமூக வலைதளங்களில் நீதித்துறை குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக யூ-டியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து கடந்த செப்டம்பர் மாதம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் கைதாகி, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    பின்னர் மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும், தண்டனையை ரத்து செய்யக்கோரியும் சவுக்கு சங்கர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

    மேலும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி சவுக்கு சங்கருக்கு ஜாமீன் நிபந்தனைகளை மதுரை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் பிறப்பித்தது. அதில், மதுரை மாவட்ட 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தினமும் காலை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் இடம் பெற்றிருந்தது. இதனை ஏற்று சவுக்கு சங்கர் சிறையில் இருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.

    மதுரை ஐகோர்ட்டு பிறப்பித்த நிபந்தனையின் அடிப்படையில் மதுரை வந்த சவுக்கு சங்கர் இன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு தனது வக்கீலுடன் வந்தார். கோர்ட்டு அலுவலகத்தில் இருந்த பதிவேட்டில் சவுக்கு சங்கர் கையெழுத்திட்டு சென்றார்.

    • சவுக்கு சங்கர் கடலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது பத்திரிகையாளர்கள் ஏராளமானோர் திரண்டனர்.
    • சவுக்கு சங்கர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

    கடலூர்:

    நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியதாக சமூக ஆர்வலர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதனால் அவரை பார்ப்பதற்காக ஆதரவாளர்கள் ஏராளமானோர் வந்ததாக கூறி பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

    பார்வையாளர்களை அனுமதிக்ககோரி சவுக்குசங்கர் கடலூர் சிறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். அப்போது சிறை அதிகாரிகள் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    இதனிடையே 6 மாத சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் சவுக்குசங்கர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் சவுக்குசங்கருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடைவிதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    எனவே சவுக்குசங்கர் எந்த நேரத்திலும் விடுதலையாகலாம் என பேசப்பட்டது. ஆனால் இவர் மீது 4 வழக்குகள் இருந்ததால் ஜாமீனில் வெளிவருவதில் சிக்கல் எழுந்தது. இதனைத்தொடர்ந்து அவர் மீண்டும் சென்னை நீதிமன்றத்தை அணுகினார். அப்போது 4 வழக்கிலும் ஜாமீன் கிடைத்தது.

    ஆனால் ஏற்கனவே பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்ததால் சவுக்குசங்கர் விடுதலையாவதில் தாமதம் ஆனது.

    இதனைத்தொடர்ந்து சவுக்கு சங்கர் சென்னை நீதிமன்றத்தில் ஆஜரானார். இதனைத்தொடர்ந்து சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் சவுக்கு சங்கர் கடலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது பத்திரிகையாளர்கள் ஏராளமானோர் திரண்டனர். ஆனால் அவர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

    • அடுத்த விசாரணை வரை சவுக்கு சங்கர் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    • மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி டுவிட்டர், பேஸ்புக், யுடியூப் நிறுவனங்களுக்கு உத்தரவு

    புதுடெல்லி:

    நீதித்துறையை விமர்சனம் செய்ததாக, தானாக முன்வந்து பதிவு செய்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த செப்டம்பர் மாதம் 15-ந் தேதி உத்தரவிட்டது. இதைடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவும், ரத்து செய்யக்கோரியும் சவுக்கு சங்கர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. அப்போது மனுவை பரிசீலித்த நீதிபதிகள், சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். சிறையில் இருந்து வெளியே வந்தபின் அடுத்த விசாரணை வரை சவுக்கு சங்கர் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.

    மேலும், சவுக்கு சங்கரின் மேல்முறையீட்டு மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர், டுவிட்டர், ஃபேஸ்புக், யுடியூப், மத்திய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தனர். 

    • பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க கோரி தொடர்ந்து 3-வது நாளாக உண்ணாவிரதம்.
    • சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.

    கடலூர்:

    சமூக வலைதளத்தில் நீதித்துறை குறித்து, அவதூறாக பதிவிட்டது தொடர்பாக யூடியூப் பிரமுகர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மதுரை மத்திய சிறையில் அடைக்கபட்ட அவர், பின்னர் நிர்வாக காரணங்களுக்காக கடந்த 16-ந் தேதி கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

    அவரை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் கடலூர் மத்திய சிறைக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் பார்வையாளர்கள் சிறையில் சவுக்கு சங்கரை பார்ப்பதற்கு ஒருமாதம் தடை விதித்து சிறை அலுவலகம் உத்தரவிட்டிருந்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தன்னை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்க கோரியும் தொடர்ந்து 3-வது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதனால் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறைசாலையில் உள்ள மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    • அவரை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு ஒருமாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடலூர் :

    நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் யூடியூப் பிரமுகர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை பார்ப்பதற்காக ஏராளமான பார்வையாளர்கள் கடலூர் மத்திய சிறைக்கு வந்ததாக தெரிகிறது.

    இதனால் அவரை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு ஒருமாதம் தடை விதித்து சிறை அலுவலகம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தன்னை பார்வையாளர்கள் பார்ப்பதற்கு மீண்டும் அனுமதி வழங்க கோரியும் சவுக்கு சங்கர் நேற்று காலை முதல் சிறை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    முன்னதாக இதுதொடர்பாக அவர் மனு ஒன்றை சிறை கண்காணிப்பாளரிடம் கொடுத்ததாகவும், அதை அவர் வாங்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    • 2008-ம் ஆண்டு அரசு ஆவணங்களை கசியவிட்ட புகாரில் சிக்கி பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
    • பிழைப்பூதியமாக மாதம் ரூ.43 ஆயிரம் வீதம் என 14 ஆண்டுகளில் ரூ.65 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை :

    நீதித்துறை குறித்து 'யூடியூப்' சமூக வலைத்தளத்தில் சவுக்கு சங்கர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதையடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    சவுக்கு சங்கர், தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு ஊழல் தடுப்பு துறையில் அலுவலகராக பணியாற்றி வந்தார். 2008-ம் ஆண்டு அரசு ஆவணங்களை கசியவிட்ட புகாரில் சிக்கி பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

    தொடர்ந்து பணியிடை நீக்கத்திலேயே இருந்து வந்த அவருக்கு பிழைப்பூதியமாக மாதம் ரூ.43 ஆயிரம் வீதம் என 14 ஆண்டுகளில் ரூ.65 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை இதனை கண்டித்திருந்தது.

    இந்த நிலையில் சவுக்கு சங்கர் அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவருக்கு இந்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டதாகவும், அதனை அவர் வாங்க மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்தது.
    • கடந்த முறை விசாரணை நடந்தபோது, சவுக்கு சங்கரிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர்

    மதுரை:

    அரசியல் மற்றும் பொது விவகாரங்கள் தொடர்பாக தொடர்ந்து கருத்துக்களை பதிவிட்டு வரும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளதாக யூடியூபில் விமர்சித்திருந்தார் சவுக்கு சங்கர். அவர் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்தது.

    கடந்த 8ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சவுக்கு சங்கரிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகள் எழுப்பியதுடன், ஒரு வாரத்திற்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

    அதன்படி இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கர் விசாரணைக்கு நேரில் ஆஜராகியிருந்தார். மதியம் வரை விசாரணை நீடித்தது. வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று மாலை தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, சவுக்கு சங்கரை 6 மாதம் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், நீதித்துறை மற்றும் நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் அவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட கருத்துக்களை அந்த பக்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

    • ஆறு வார கால அவகாசம் தேவை என சவுக்கு சங்கர் தரப்பில் பதில் தரப்பட்டது.
    • எவ்வித பதிவையும் பதிவிடமாட்டேன் என உறுதி அளித்தால் கால அவகாசம் வழங்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மதுரை:

    ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளதாக யூடியூபில் விமர்சித்த சவுக்கு சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

    விசாரணைக்காக நேரில் ஆஜரான சவுக்கு சங்கர், தான் பேசிய வீடியோ பதிவு அல்லது தட்டச்சு பதிவை வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'வீடியோவை வெளியிட்டது, பேசியது நீங்கள்.. உங்களுக்கு அவற்றின் நகல் தேவையா?' என கேள்வி எழுப்பினர். சவுக்கு சங்கர் தரப்பில், ஆம் என பதில் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வீடியோவின் நகல்களை வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    தொடர்ந்து வாதாடிய சங்கர் தரப்பு சார்பில், இது எந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு? புதியதா, பழையதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், நீங்கள் பேசியது உங்களுக்கு நினைவில்லையா? என கேள்வி எழுப்பினர். அதற்கு, தான் பல பேட்டிகளை வழங்கி உள்ளதாகவும், அனைத்தையும் நினைவில் கொள்ள இயலாது என்பதால் ஆறு வார கால அவகாசம் தேவை என சவுக்கு சங்கர் தரப்பில் பதில் தரப்பட்டது.

    இதுகுறித்து எவ்வித பதிவையும் பதிவிடமாட்டேன் என உறுதி அளித்தால் கால அவகாசம் வழங்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் உறுதி வழங்க இயலாது என சவுக்கு சங்கர் தரப்பில தெரிவிக்கப்பட்டது.

    கடந்த வாரங்களிலும் இன்றும் நீதிமன்றம் மீது நம்பிக்கை இல்லை என சவுக்கு சங்கர் குறிப்பிட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அத்துடன், ஒரு வாரத்திற்கு (செப்டம்பர் 15ம் தேதி) வழக்கை ஒத்திவைத்தனர்.

    ×