என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட விவகாரம்... அதிமுகவின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர் அப்பாவு
- சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சவுக்கு சங்கர் வீடு, சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
தமிழக சட்டசபையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
சவுக்கு சங்கர் வீடு தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளோம், அது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கைக்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, "இவ்விவகாரம் சிபிசிஐடி விசாரணையில் இருக்கிறது; நாளாகி விட்டது என்பதால், இப்போது அதை எடுக்க வேண்டிய அவசியமில்லை"
எனக்கூறி நிராகரித்தார்.
Next Story






