search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு பேருந்துகள் இயக்கம்"

    • தருமபுரியில் இருந்து திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் சிறப்பு பேருந்துகளில் பயணித்த வண்ணம் உள்ளனர்.
    • தருமபுரியில் மட்டும் 55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தருமபுரி மண்டல நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

    தருமபுரி, 

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.

    அதேபோல், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு உள்ள கிரிவலப் பாதையில் கிரிவலம் சுற்றி வந்து அண்ணாமலையாரை வழிபட்டு செல்கின்றனர்.

    ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமியை விட சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக அண்ணாமலையார் கோவிலுக்கு சித்ரா பவுர்ணமியான இன்றும், நாளையும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கிரிவலம் செல்கின்றனர்.

    அதன்படி, சேலம் கோட்டம் தருமபுரி மண்டலம் சார்பில் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேற்று காலை முதல் இன்று இரவு 12 மணி வரை 188 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    தருமபுரியில் இருந்து திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்கள் சிறப்பு பேருந்துகளில் பயணித்த வண்ணம் உள்ளனர்.

    தருமபுரியில் மட்டும் 55 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தருமபுரி மண்டல நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

    இதனால் இன்று தருமபுரி பஸ் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    • பொது தேர்வு முடிந்த நிலையில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பெற்றோருடன் ஊர் திரும்புகின்றனர்
    • அனைத்து பள்ளிகள் வழியாக சென்று வரும் அனைத்து அரசு பஸ்களும் பள்ளி அருகே நின்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்திலிருந்து கோடை விடுமுறை மற்றும் பொது தேர்வுக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து அரசு போக்குவரத்து கழக தருமபுரி மண்டல பொது மேலாளர் ஜீவரத்தினம் கூறியதாவது:-

    தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட தனியார் பள்ளிகளில் வெளியூர்களிலிருந்து வந்து தங்கி படித்து வந்த பிளஸ் 1 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவியர் தற்போது பொது தேர்வு முடிந்த நிலையில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பெற்றோருடன் ஊர் திரும்புகின்றனர் . அவர்களின் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் பயணிகள் வருகைக்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும் விடுமுறையில் வெளி மாவட்டங்களில் இருந்து ஒகேனக்கல் சுற்றுலா தளத்துக்கு வருபவர்களுக்காக தருமபுரி மண்டலத்திலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    தற்போது பொது தேர்வு உட்பட அனைத்து வகுப்புகளுக்கும் நடந்து வரும் தேர்வை ஒட்டி தேர்வு மையங்கள் மற்றும் அனைத்து பள்ளிகள் வழியாக சென்று வரும் அனைத்து அரசு பஸ்களும் பள்ளி அருகே நின்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×