என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக போக்குவரத்து துறை"

    • மாதாவரத்திலிருந்து 13/06/2025 மற்றும் 14/08/2025 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
    • பயணத்திற்கு www.tristc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    13/06/2025 (வெள்ளிக்கிழமை) 14/06/2025 (சனிக்கிழமை) 15/06/2025 (ஞாயிறு) விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 13/06/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 385 பேருத்துகளும், 14/06/2025(சனிக்கிழமை) 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒருர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 13/06/2025 வெள்ளிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் 14/06/2025 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு உங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து 13/06/2025 மற்றும் 14/08/2025 அன்று 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

    மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருத்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6,158 பயணிகளும் சனிக்கிழமை 2,652 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 6,469 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

    இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tristc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 42 சேவைகள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லாமல் பொதுமக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது முன் மொழியப்பட்டுள்ள 42 சேவைகளில் 22 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் உரிமம் தொடர்பானவை ஆகும்.

    சென்னை:

    தமிழக போக்குவரத்து துறை தனது டிஜிட்டல் சேவையை மென்மேலும் விரிவுபடுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் மோட்டார் வாகன சட்டம் மற்றும் நிர்வாகம் தொடர்பான மானிய கோரிக்கைக்கு கடந்த மார்ச் 23-ந்தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலளித்து பேசினார்.

    அப்போது அவர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு மக்கள் செல்லாமல் ஆன்லைன் வாயிலாக தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மேலும் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக அறிவித்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து இப்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலக சேவைகளில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    அதன்படி 42 சேவைகள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லாமல் பொதுமக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது முன் மொழியப்பட்டுள்ள 42 சேவைகளில் 22 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் உரிமம் தொடர்பானவை ஆகும். மீதமுள்ளவை மோட்டார் வாகனங்கள் மற்றும் அனுமதி பத்திரங்கள் தொடர்பானவை ஆகும்.

    ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ்களில் பெயர், முகவரி போன்றவற்றை மாற்றவும், நகல் எல்.எல்.ஆர். உரிமங்கள் பெற்றிடவும், மோட்டார் வாகனங்களின் தற்காலிக பதிவு பெறவும், வாகன பதிவுக்கு தடையில்லா சான்றிதழ் பெறவும், மொபைல் எண்ணை புதுப்பிக்கவும், வாகனங்களை மற்ற இடங்களுக்கு மாற்றும்போது நகல் மோட்டார் வாகன ஆவணங்கள் அல்லது தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கும் இனிமேல் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களை நாட வேண்டிய அவசியம் இல்லை.

    மேலும் மோட்டார் வாகனங்களின் தற்காலிக பதிவுக்கான விண்ணப்பம் நகல், பதிவு சான்றிதலுக்கான விண்ணப்பம், ஆர்.சி.க்கு என்.ஓ.சி. வழங்குதல், ஆர்.சி.யில் முகவரி மாற்றம், புதிய அனுமதி வழங்கல், நகல் அனுமதி மற்றும் பரிமாற்றம் ஆகியவை ஆன்லைனில் செய்து கொள்ளலாம்.

    இது தரகர்கள் அல்லது முகவர்களின் செல்வாக்கை குறைப்பதோடு லஞ்சத்தையும் குறைக்கும் என போக்குவரத்து ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய திருத்தம் தமிழக முழுவதும் இந்த வாரம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புகழ்பெற்ற பஸ் பாடி கட்டும் நிறுவனங்களும் பாடி கட்டுவதற்கு டெண்டரில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • தரமான, வசதியான போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக புதிய பஸ்களை வாங்கும் பணி விரைந்து செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 21 ஆயிரம் பஸ்கள் இயங்கி வரும் நிலையில் 10 ஆயிரம் பஸ்கள் 15 ஆண்டுகளை கடந்து விட்டன.

    மத்திய அரசு 15 ஆண்டுகள் உபயோகித்த பஸ்களை பயன்படுத்த கூடாது என்று அறிவித்துள்ளதால் தமிழக அரசின் போக்குவரத்து துறை பழைய பஸ்களுக்கு பதில் புதிய பஸ்களை வாங்குவதற்கு நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

    சட்டசபையில் கடந்த நிதி நிலை அறிக்கையில் 1000 புதிய பஸ்கள் வாங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து இப்போது முதல் கட்டமாக 600 பஸ்களை கொள்முதல் செய்ய அரசு ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது.

    இதில் 150 பஸ்கள் முழுமையான தாழ்தள பஸ்களாக வாங்கப்படுகிறது. புகழ்பெற்ற பஸ் பாடி கட்டும் நிறுவனங்களும் பாடி கட்டுவதற்கு டெண்டரில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தரமான, வசதியான போக்குவரத்து சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக புதிய பஸ்களை வாங்கும் பணி விரைந்து செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சாலையோர பயணவழி உணவகங்களில் அரசுப் பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன.
    • உணவகத்தின் பெயருடன் அனுப்பினால் நடவடிக்கை எடுக்க எளிதாக இருக்கும்.

    சென்னை:

    பயணவழி உணவகங்களின் பெயரைக் குறிப்பிட்டு புகார் அளிக்க வேண்டும் என பயணிகளை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் கூறியதாவது:-

    திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலமாகத் தேர்வு செய்யப்பட்ட சாலையோர பயணவழி உணவகங்களில் அரசுப் பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் உணவின் தரம், கழிப்பறை வசதி, பராமரிப்பு போன்றவை குறித்து அவ்வப்போது பயணிகளிடம் இருந்து வரும் புகார்களின் அடிப்படையில் போக்குவரத் துக்கழக அலுவலர்கள் உணவகங்களில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய உணவக உரிமையாளர்களை அறிவுறுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதை மேம்படுத்தும் வகையில் உணவகங்கள் குறித்த புகார்களை தெரிவிக்க முன்பதிவு செய்யும் பயணிகளின் கைப்பேசிக்கு லிங்க் ஒன்று பயணத்தின் முன்பாக அனுப்பப்படும். இந்த இணைப்பில் பயணிகள் உணவகங்களில் உள்ள குறை, நிறைகளைப் பதிவிட்டு அனுப்ப வழிவகை செய்யப் பட்டுள்ளது.

    கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதியில் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வரப்பெறுகின்றன. ஆனால் தெளிவாக இல்லை. வரும் காலங்களில் உணவகங்கள் எந்த முறையில் விதிமீறவில் ஈடுபடுகின்றன என்பதை தெளிவாக உணவகத்தின் பெயருடன் அனுப்பினால் நடவடிக்கை எடுக்க எளிதாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    • சொகுசு கார்கள் உள்பட அனைத்து வகை கார்களையும் வாடகைக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ஆடம்பர கார்களையும் வாடகைக்குப் பயன்படுத்தி பதிவு செய்யலாம்.

    சென்னை:

    தமிழக போக்குவரத்து துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    சொகுசு கார்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கார்களையும் பொதுப் போக்குவரத்து வாகனங்களாக (மஞ்சள் போர்டு) பதிவு செய்து இயக்க போக்குவரத்து துறை ஆணையர் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்

    குறிப்பிட்ட கார் வகைகளை மட்டுமே வாடகை கார்களாக பயன்படுத்த முடியும் என்ற விதி மாற்றப்படுகிறது.

    மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் அனைத்து வகை கார்களையும் பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தலாம்.

    சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ஆடம்பர கார்களையும் வாடகைக்குப் பயன்படுத்தி பதிவு செய்யலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

    • தமிழக அரசு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.
    • ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்.

    தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி முன்னிட்டு இரண்டு நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை காரணமாக மக்கள் தங்களது சொந்த ஊருக்க படையெடுக்க திட்டமிட்டுள்ளனர்.

    இதற்காக, தமிழக அரசு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்து வருகிறது.

    இதுதொடர்பாக, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    பண்டிகைக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பேருந்துகளை தொடர்ந்து நடத்துகின்ற ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதுபோன்று கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை.

    தனியார் செயலிகள் மூலமாகவும், புதிதாக பேருந்து இயக்குபவர்களும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் தொடர்பில் இல்லாதவர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.

    அவர்கள் மீதான புகார்கள் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக அரசு தரப்பில் கட்டணமில்லா எண் வெளியிடப்பட்டுள்ளது.

    ஆம்னி பேருந்துகளுக்கான பணிமனை கட்டுமான வேலை இன்னும் முடிவடையாமல் இருக்கிறது. விரைவில் முடிவடையும். அதுவரை, ஆம்னி பேருந்துகள் அவர்களின் சொந்த பணிமனையில் இருந்து இயக்குவார்கள். அந்த பேருந்துகள் 400 அடி புறவழிச்சாலை வழியாக செல்லும்.

    அரசுக்கு சில கடமைகள் இருக்கிறது. பொது மக்களுக்கு தேவையான வசதிகளை செய்திக் கொடுக்கும் கடமை. அரசு கூடுதலாக எத்தனை பேருந்துகள் இயக்குகிறது என்பதை ஏற்கனவே சொல்லி இருக்கிறோம்.

    அந்த கூடுதல் பேருந்துகளில் அரசு பேருந்துகள் மட்டுமல்லாமல் தனியார் பேருந்துகளையும் ஒப்பந்தம் அடிப்படையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு செயலிகளையும் அரசு கண்காணிக்க முடியாது. மக்களின் பிரச்சினைகளை கவனிக்க வேண்டிய இடத்தில்தான் இந்த துறை இருக்கிறது. செயலிகளில் குறிப்பிட்ட பிரச்சினை இருக்கிறது என்று சொன்னால் நடவடிக்கை எடுக்கப்படும்.

    விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தனியார் பேருந்துகள் இயக்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×