என் மலர்

  நீங்கள் தேடியது "Madurai AIIMS Hospital"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • முதல்-அமைச்சர் தமிழகத்தில் உள்ள மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
  • டெல்லியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகள் போல தமிழகத்திலும் மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  மதுரை:

  மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கொட்டாம்பட்டி கிராமத்தில் பொது சுகாதாரத் துறையின் சார்பாக 31-வது கொரோனா தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

  பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

  மதுரை மாவட்டத்தில் இதுவரை 12 வயது முதல் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணை தடுப்பூசி 87.7 சதவீதம் பேர்களும், 2-ம் தவணை தடுப்பூசி 55.9 சதவீதம் பேர்களும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

  15 வயது முதல் 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணை தடுப்பூசி 89.4 சதவீதம் நபர்களும், 2-ம் தவணை தடுப்பூசி 74.4 சதவீதம் நபர்களும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

  மேலும் 65 ஆயிரத்து 253 நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 910 தடுப்பூசிகள், தமிழ்நாடு மாநில அளவில் 76 லட்சத்து 89 ஆயிரத்து 40 தடுப்பூசிகள் என போதிய கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

  முதல்-அமைச்சர் தமிழகத்தில் உள்ள மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகள் போல தமிழகத்திலும் மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  முதல் கட்டமாக மாநகராட்சி பகுதிகளில் கட்டப்பட்டு வரும் இந்த மருத்துவமனைகள் விரைவில் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்படும். அதேபோன்று புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 25 நகர்ப்புற சுகாதார நிலையங்களும் கட்டுவதற்கான பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பொறுத்தவரையில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 50 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

  எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட வரைபடம் விரைவில் வெளியிடப்பட்டு 5 மாதங்களுக்குள் கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட உள்ளன.

  தமிழ்நாட்டில் தற்போது நாளொன்றுக்கு 2,500 முதல் 2,700 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் கடந்த மாதங்களாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை.

  மருத்துவத் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செப்டம்பர் மாத இறுதிக்குள் 1,021 மருத்துவர்கள் உள்பட மொத்தம் 4,308 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம், மதுரை பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு வருகிற 27-ந் தேதி அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி, அன்றைய தினம் மதுரை-சென்னை இடையே அதிநவீன தேஜஸ் ரெயில் போக்குவரத்தையும் தொடங்கி வைக்கிறார். #MaduraiAIIMSHospital #PMModi
  மதுரை:

  மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ரூ.1,258 கோடியில், அனைத்து வசதிகளுடன் பிரமாண்டமாக அமையும் இந்த ஆஸ்பத்திரியின் அடிக்கல் நாட்டு விழா எப்போது? என தென்மாவட்ட மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

  இந்த நிலையில் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி, மதுரை வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்றைய தினம் அவர், எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைக்க இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  தென் மாவட்ட பயணிகளிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அதிநவீன, முற்றிலும் குளிரூட்டப்பட்ட தேஜஸ் சொகுசு ரெயில் மதுரை- சென்னை இடையே இயக்கப்பட உள்ளதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. 27-ந் தேதி நடைபெறும் விழாவில் தேஜஸ் ரெயில் போக்குவரத்தையும் பிரதமர் தொடங்கி வைக்க இருப்பதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.  மேலும் அந்த ரெயில் குறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

  தேஜஸ் ரெயில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 6 மணிக்கு புறப்பட்டு, மதியம் 1 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் சென்றடையும். மறுமார்க்கத்தில் மதுரையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு சென்னை வந்து சேரும்.

  இந்த ரெயில் வியாழக்கிழமையை தவிர பிற நாட்களில் இயக்கப்படும்.

  இவ்வாறு அவர்கள் கூறினர்.  #MaduraiAIIMSHospital #PMModi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் மூன்றாவது வாரம் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். #MaduraiAIIMS #PMModi
  மதுரை:

  டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை போன்று தமிழ்நாட்டிலும் அதிநவீன வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.

  இதற்காக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டன. இறுதியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது.

  மதுரை புறநகர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு உரிய அனைத்து வசதிகளும் இருப்பதால் மத்திய அரசும் அதை ஏற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மத்திய அரசு ரூ.1264 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்தது.

  அடுத்த ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ளன. மூன்று ஆண்டுகளுக்குள் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

  "அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம்" என்றழைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் செயல்பட தொடங்கினால் தென் மாவட்ட மக்களுக்கு மிகப்பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

  இத்தகைய சிறப்புடைய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா அடுத்த மாதம் (ஜனவரி) மூன்றாவது வாரம் நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி விழாவில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட இருப்பதை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் உறுதி செய்தனர்.  ஆனால் ஜனவரி மூன்றாவது வாரத்தில் எந்த தேதியில் பிரதமர் மோடி மதுரை வருவார் என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. இது தொடர்பாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் தமிழக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு ஆலோசித்து வருகிறார்கள்.

  அனேகமாக ஜனவரி 26 அல்லது 27-ந்தேதி பிரதமர் மோடி மதுரை வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

  மதுரை வரும் பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பிறகு மதுரையில் கட்டப்பட்டுள்ள சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியை தொடங்கி வைக்க உள்ளார். இந்த சிறப்பு மருத்துவமனை ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

  இதே போன்று திருநெல்வேலியிலும் மற்றொரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையையும் மதுரையில் நடக்கும் விழாவில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

  மதுரை மருத்துவமனை நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு அன்றே பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தையும் தொடங்க உள்ளார். அன்றைய தினம் முதல் கட்டமாக அவர் சென்னை, வேலூர், கோவை நகரங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிலும், 3 நகரங்களில் நடக்கும் தேர்தல் பிரசார கூட்டங்களிலும் ஹெலிகாப்டரில் பயணம் செய்து பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அவரது பயணத் திட்ட விவரங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. #MaduraiAIIMS #PMModi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று நன்றி தெரிவித்துள்ளார். #MaduraiAIIMS #NirmalaSitharaman
  புதுடெல்லி:

  தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதுகுறித்த அறிவிப்பு உறுதிபடுத்தப்படாமலேயே இருந்து வந்தது.

  கடந்த ஜூன் 20-ம் தேதி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் உள்ள தோப்பூரில் அமைய இருப்பதாக தகவல் வெளியானது. 

  இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆயிரத்து 258 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.  மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இதுதொடர்பாக, பாதுகபபு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் கூறுகையில், தமிழகத்தின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு நன்றி.

  மேலும், பிரதமர் மோடி, மத்திய மந்திரி ஜெ.பி.நட்டா மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். #MaduraiAIIMS #NirmalaSitharaman
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பது தகவல் அறியும் உரிமை மனுவில் தெரிய வந்துள்ளது. #AIIMS #AIIMSinMadurai

  மதுரை:

  தமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூர் மற்றும் குஜராத், பீகார், இமாசலபிரதேசம், ஜம்மு-காஷ்மீர் உள்பட 13 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

  இந்த அறிவிப்பின் தற்போதைய நிலவரம் குறித்து தகவல் தெரிவிக்கும்படி தனியார் நிறுவனம் ஒன்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு தாக்கல் செய்தது.

  அதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிலில் மத்திய அரசு அனுமதித்த 13 எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழகம், குஜராத், பீகார், இமாசலபிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் அமைய உள்ள மருத்துவமனைகளுக்கு இதுவரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இவற்றுக்கு கால நிர்ணயமும் நியமிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

  ஆனால் உத்தரபிரதேசம், ஆந்திரா, மேற்குவங்காளம், மராட்டியம், அசாம், ஜார்கண்டில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளுக்கு குறைந்த அளவு நிதி வழங்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #AIIMS #AIIMSinMadurai

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி வருகிறார் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
  சென்னை:

  பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வருகை, கட்சியின் வளர்ச்சிப் பணிகள், எதிர்கால திட்டங்கள் போன்றவை குறித்து ஆலோசிக்க பா.ஜனதா உயர்மட்டக்குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அமைப்பு செயலாளர் கேசவமூர்த்தி, தேசிய செயலாளர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.  கூட்டம் முடிந்ததும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

  சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மிகப்பெரிய அளவில் இயற்கை சீரழிவு இல்லாமல் தான் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. காவிரி ஆணையம் அமைத்தல், நீட் தேர்வை அந்தந்த மாவட்டங்களில் எழுதுதல் என தொடர்ந்து மத்திய அரசு பல நல்ல திட்டங்களை கொண்டுவந்தாலும் இங்குள்ள பல கட்சிகள் விமர்சனம் மட்டுமே செய்துவருகின்றன.

  கவர்னரின் சுற்றுப்பயணத்தை தி.மு.க. தேவையில்லாமல் அரசியலாக்குகிறது. கவர்னர் சட்டத்தில் உள்ள சரத்துக்களை அறிவித்து இருக்கிறார். ஆனால் அவர் எங்களை மிரட்டுகிறார் என்கிறார்கள். எவ்வளவோ மக்கள் பிரச்சினைகள் இருக்க இதனை மட்டும் கையில் எடுப்பதால், இவர்கள் மக்கள் திட்டங்களுக்காக பேசமாட்டார் கள் என்று மக்களுக்கே புரிந்துவிட்டது.

  மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி வருகைதர இருக்கிறார். தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.

  பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தான் மட்டுமே அதிபுத்திசாலி என்றும் மற்ற கட்சி தலைவர்கள் எல்லாம் புத்திசாலி இல்லை என்ற வகையில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். 20 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் அறிவாற்றலும், உழைப்பாற்றலும், தேசிய பண்பும் பெற்று இருப்பதால் தான் இன்று ஒரு தேசிய கட்சியின் தலைவராக இருக்கிறேன்.

  எனக்கு தலைவராக இருக் கும் தகுதி இருக்கிறதா? என்பதை சொல்வதற்கு அன்பு மணிக்கு தகுதி இருக்கிறதா? என்பது வேறு விஷயம். இவர் மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தபோது அவரால் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்துக்கு கொண்டுவர முடியவில்லை. யார் சுயமுயற்சியில் தலைவரானார்கள்? யார் அவர்களின் தந்தையின் முயற்சியில் தலைவரானார்கள்? என்பது குறித்து விவாதிக்க அன்புமணி ராமதாஸ் தயாரா?

  பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார். ஒரு தொலைக்காட்சியில் என்னிடம் கேள்வி கேட்கும்போது, மரம்வெட்டுவதை பற்றி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சொல்கிறார் என்று கேட்கிறார்கள். அதற்கு நான், மரம் வெட்டுவதை பற்றி அவர்கள் பேசலாமா? என்று கேள்வி மட்டும் தான் கேட்டேன். உங்களுக்கு குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது? அதற்கு நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்?

  இவ்வாறு அவர் கூறினார். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் தொடர்பாக பா.ஜனதா அலுவலகத்தை பா.ம.க.வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். #BJP #PMK

  சென்னை:

  மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையை மோடி அரசு கொண்டு வந்துள்ளதற்கு நன்றி தெரிவித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்தார்.

  இதற்கிடையில், இம்மருத்துவமனை அமைவதற்கு பா.ம.க.தான் காரணம் என அன்புமணி ராமதாசும் டுவிட்டரில் பதிவு செய்து இருந்தார். இதனால் டுவிட்டர் தளத்தில் அன்புமணிக்கும், தமிழிசைக்கும் காரசார கருத்து மோதல் வெடித்தது.

  டாக்டர் தமிழிசையை கண்டித்து தமிழக பா.ஜனதா அலுவலகத்தை பா.ம.க. வினர் முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர். இதனால் தி.நகர் வைத்தியராமன் தெருவில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் போலீசார் குவிக்பபட்டனர்.

  சாலையின் 2 பக்கங்களிலும் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பா.ம.க. தொண்டர்கள் இந்தி பிரசார சபா அருகே முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி தலைமையில் திரண்டனர்.

  அவர்கள் அங்கிருந்து பா.ஜனதா அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக புறப்பட்டனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். அவர்களை பஸ்களில் ஏற்றிச் சென்றனர்.

  அப்போது பா.ஜனதா தொண்டர்கள் 20 பேர் ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் பஸ்சில் இருந்த பா.ம.க. தொண்டர்கள் கீழே இறங்கினர். இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

  போலீசார் சிரமப்பட்டு இரு தரப்பினரையும் ஆங்காங்கே தள்ளி விட்டனர். பா.ஜனதாவை சேர்ந்த மூர்த்தி என்பவரை போலீசார் பிடித்து வேனில் ஏற்றினர்.


  இதைத் தொடர்ந்து மற்ற தொண்டர்கள் கலைந்து சென்றார்கள். பின்னர் பா.ம.க.வினரை பஸ்சில் ஏற்றி அழைத்து சென்றனர்.

  ஏ.கே.மூர்த்தி தலைமையில் சுமார் 150 பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெளியில் களேபரம் நடந்து கொண்டிருந்தபோது பா.ஜனதா அலுவலகத்தில் கட்சியின் மையக்குழு கூட்டம் தேசிய செயலாளர் முரளிதரராவ் தலைமையில் நடந்தது.

  மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச் செயலாளர்கள் வானதி சீனிவாசன், நரேந்திரன், தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் கேசவ விநாயகம், மோகன்ராஜுலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

   ஏ.கே.மூர்த்தி தலைமையில் பா.ஜனதா அலுவலகம் நோக்கி பா.ம.க.வினர் ஊர்வலமாக சென்ற காட்சி. #BJP #PMK

  ×