search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker"

    • நேற்று முன்தினம் காலையில், ரமேஷ் அவரது மோட்டார் சைக்கிளில் நாமகிரிப்பேட்டையில் தேங்காய் உரிப்பதற்காக சென்றார்.
    • ஆத்தூர் - ராசிபுரம் சாலையில் ஆயில்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள சில்லி கடை எதிரில் சென்றபோது, அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கமாக மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா தாண்டாக்கவுண்டம் பாளையம் அம்பேத்கார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 31). தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலையில், ரமேஷ் அவரது மோட்டார் சைக்கிளில் நாமகிரிப்பேட்டையில் தேங்காய் உரிப்பதற்காக சென்றார். வேலையை முடித்துவிட்டு இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அவர் ஆத்தூர் - ராசிபுரம் சாலையில் ஆயில்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள சில்லி கடை எதிரில் சென்றபோது, அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கமாக மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது.

    இதில் ரமேஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த ரமேஷின் மனைவி தமிழரசி (28), ரமேஷின் தம்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த ரமேஷை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையொட்டி, விபத்தில் இறந்த ரமேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சவக்கிடங்கில் வைத்தனர்.

    விபத்து பற்றி ரமேஷின் மனைவி தமிழரசி ஆயில்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆயில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சிவா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் இறந்த ரமேஷுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    • தொழிலாளியின் கூரை வீடு எரிந்து நாசமானது.
    • கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்.

    மயிலாடுதுறை:

    சீர்காழி அருகே எடமணல் ஊராட்சிக்கு உட்பட்ட ஆமபள்ளம் கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முகேஷ்குமார் (வயது38).

    கூலித் தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு முகேஷ்குமார் குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    நேற்று முன்தினம் இவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

    அப்போது பலத்த காற்று வீசியதால் வீடு முழுவதும் எரிந்து நாசமானது.

    இதில் வீட்டில் இருந்த பீரோ, நகை, பணம், உடைகள், உணவுப் பொருள்கள், கட்டில், மெத்தை, சைக்கிள், டிவி, ப்ரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமானது.

    இது குறித்த தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து கூரை வீட்டில் எப்படி தீப்பிடித்தது? என விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ராஜ்குமார் தூத்துக்குடி கே.வி.கே நகரை சேர்ந்த மாரிசெல்வம் மற்றும் முத்துகுமார் ஆகியோருடன் சிப்காட் வளாகத்தின் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றனர்.
    • இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அவரது தாய் பேச்சியம்மன் (68) சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அண்ணா நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30). தூத்துக்குடி கே.வி.கே நகரை சேர்ந்த மாரிசெல்வம் மற்றும் முத்துகுமார் ஆகியோருடன் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தின் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றனர்.

    அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் போது 30 அடி உயரத்தில் இருந்து சீட்டு உடைந்து ராஜ்குமார் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கு இருந்த டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அவரது தாய் பேச்சியம்மன் (68) சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அதில் சிப்காட்டில் உள்ள நிறுவனத்தில் 30 அடி உயரத்தில் பழைய மேற்கூறைகளை அகற்றி புதிததாக மற்றும் பணியில் எனது மகன் ராஜ்குமார் நண்பர்களுடன் ஈடுபட்டி ருந்த போது பாதுகாப்பு உபகரணங்களான ஏணி, ஹெல்மட், ரோப் ஆகியவற்றை கேட்டுள்ளார். அதற்கு நிறுவனத்தினர் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் கிடையாது, விருப்பம் இருந்தால் வேலை செய்யும் படி கூறியுள்ளனர்.

    குடும்ப சூழ்நிலை காரண மாக எனது மகனும் மற்றும் 2 நபர்களும் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இல்லாமல் 30 அடி உயரத்தில் வேலை செய்துள் ளார்கள்.அப்போது எனது மகன் சீட் உடைந்து கீழே விழுந்து இறந்துள்ளார். எனவே சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் மீது நடவடி க்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார்.

    இதுகுறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ராஜா (வயது 38). இவர் சிவதாபுரத்தில் உள்ள குமரேசன் என்பவருக்கு சொந்தமான வெள்ளி பட்டறையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
    • மாலை 7 மணி அளவில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற ராஜா, இரவு 8 மணி அளவில் மீண்டும் வெள்ளி பட்டறைக்கு வந்துள்ளார். இந்த நிலையில், சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி ராஜா மயங்கி விழுந்தார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சேலத்தம்பட்டி மாரியம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் கோவிந்தராஜ். இவரது மகன் ராஜா (வயது 38). இவர் சிவதாபுரத்தில் உள்ள குமரேசன் என்பவருக்கு சொந்தமான வெள்ளி பட்டறையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    நேற்று மாலை 7 மணி அளவில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற ராஜா, இரவு 8 மணி அளவில் மீண்டும் வெள்ளி பட்டறைக்கு வந்துள்ளார். இந்த நிலையில், சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி ராஜா மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், உடனடியாக ராஜாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜாவை பரிசோதித்த டாக்டர்கள் ராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் கொண்ட லாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகிறார்கள்.

    • திருமணமான 9 மாதத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது.

    விருதுநகர்

    ராஜபாளையம் அருகேயுள்ள தொட்டியப்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி(வயது31). தொழிலாளியான இவருக்கும், லட்சுமி என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பால்பாண்டிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாகவில்லை.

    இதனால் விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்துகொள்ள முடியவு செய்தார். சம்பவத்தன்று இரவு மனைவிக்கு சாப்பாடு வாங்கி கொடுத்துவிட்டு வீட்டின் தனியறைக்கு சென்ற பால்பாண்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சுமார் 40 வயது மதிக்கத்தக்க தொழிலாளி சாலையை கடக்க முயன்றார்.
    • அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி, எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்திவேலூர் பகுதியில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க தொழிலாளி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி, எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை, அப்பகுதியினர் மீட்டு பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய மினி லாரி டிரைவர் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே மலயகவுண்டம் பட்டியை சேர்ந்த கார்த்திக் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபருக்கு சுமார் 40 வயது இருக்கும். தாடியுடன் இருந்த அவர் கருப்பு நிறத்தில் சட்டை அறிந்திருந்தார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, எதற்காக பரமத்திவேலூர் வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொளத்தூர் அருகே யானை தாக்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி படுகாயடைந்தார்.
    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சின்னதண்டா பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 55). 

    இவர் ஆடு மேய்க்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார். நேற்று லக்கம்பட்டி கிராமத்தை கிராமத்தைச் சேர்ந்த ரங்க போ என் கார்டு அருகே வனப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். மாலையில் வீடு திரும்பி வரும்போது ஒரு ஆண் யானை ஒன்று பின்பக்கமாக வந்து தந்தத்தால் கோவிந்தனை முதுகில் குத்தியது. 

    இதனால் மிரண்டு போன அவர் சுதாரித்துக்கொண்டு வனப்பகுதியில் இருந்து யானையிடம் தப்பி கிராமத்துக்கு வந்தார். கிராம மக்கள் ஆம்புலன்சை வரவழைத்து உடனடியாக கோவிந்தனை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    அங்கு அவருக்கு  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மேட்டூர் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கபிலர்மலை அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே உள்ள செம்மடைபாளையத்தை சேர்ந்தவர் பாபு (வயது27), கட்டிட தொழிலாளி.இவரது மனைவி சூர்யா (23). பாபு கடந்த இரண்டு வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் பாபுவின் சொந்த ஊரான பரமத்தி அருகே உள்ள பிள்ளைகளைத்தூரில் தனது பெரியப்பா வீடு அருகே வாடகை வீடு எடுத்து கடந்த 4 மாதங்களாக தங்கியிருந்தனர். 

    கடந்த 1-ந் தேதி பாபுவின் மனைவி சூர்யா வேலைக்கு சென்று விட்டு மீண்டும் மாலை வீட்டிற்கு வந்த போது தனது கணவர் வீட்டில் துப்பட்டாவால் தொங்கிக்கொண்டிருந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

    பின்னர் அவரை  வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பாபு ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    தகவல்‌ அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீசார் பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாரமங்கலம் அருேக வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம்  தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் பைப்பூர் பகுதியை சேர்ந்தவர் மணி ( வயது 57). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 20- ந்தேதி காலை சாலையோரம் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றதால் படுகாயம் அடைந்தார்.  

    மணியை மீட்டு உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மணி நேற்று  பரிதாபமாக இறந்தார். இது குறித்த  புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளி படுகாயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர்.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம்  குமாரபாளையம் அருகே உள்ள ஆனங்கூர் ரோடு பழைய அஞ்சல் அலுவலகம் அருகே வசிப்பவர் சுரேஷ் (வயது 30). கட்டிட கூலி தொழிலாளி. 

    இவர் தனது மொபட் வாகனத்தில் ஒட்டன்கோவில் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி திடீரென மொபட்  மீது மோதியது. இதில்  சுரேஷ் பலத்த காயமடைந்தார். 

    இதையடுத்து அவர் குமாரபாளையம்  அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரித்ததில் லாரி டிரைவர் திருச்சியை சேர்ந்த (சுரேஷ் 45), என்பது தெரியவந்தது. லாரி டிரைவர் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

    குமாரபாளையம் அருகே தொழிலாளியை பாட்டிலால் குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே சானார்பாளையத்தில் வசிப்பவர் மாரிமுத்து(வயது 50) கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர்  ராஜசேகரன்( 43).

     மாரிமுத்து, ராஜசேகரனுக்கு கடனாக பணம் கொடுத்துள்ளார்.  பின்னர் அதை  மாரிமுத்து  திருப்பி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த  ராஜசேகரன் தகாத வார்த்தையால் பேசி மது பாட்டிலை உடைத்து  மாரிமுத்துவை நெற்றி, பின் தலை, இடது நெஞ்சு, ஆகிய இடங்களில் குத்தியதாக தெரிகிறது. 

    இதில் மாரிமுத்து பலத்த காயம் ஏற்பட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து வழக்குபதிவு செய்த குமாரபாளையம் போலீசார்  ராஜசேகரனை கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
    பணகுடி நான்கு வழிச்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பணகுடி:

     நெல்லை மாவட்டம் பணகுடி நான்கு வழி சாலையில் இருந்து தண்டையார் குளம் செல்வதற்கு பிரிவு சாலை உள்ளது. இன்று காலை இந்த பிரிவு சாலையில் கீழ்புறம் இருந்து பணகுடி ஊருக்கு கரையடி காலனியை சேர்ந்த தொழிலாளி ஹரிகிருஷ்ணன் ( வயது 60)  என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது திருச்சியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
     இதில் ஹரி கிருஷ்ணன் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து பணகுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  போலீசார் விரைந்து சென்று ஹரிகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் லாரி மற்றும் மோட்டார் சைக்கிளை பணகுடி காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×