search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனம்"

    துர்கா காலனி பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு மேயரின் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
    திருப்பரங்குன்றம்,

    தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் நல்வாழ்வு மையம் அமைப்பதற்கான பூமி பூஜை மதுரை துர்கா காலனியில் இன்று நடந்தது. 

    மண்டலத் தலைவர் சுவிதா விமல் தலைமை வகித்தார். கவுன்சிலர் சிவசக்தி ரமேஷ் முன்னிலை வகித்தார் இதில் மாநகராட்சி மேயர் இந்திராணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். 

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏற்கனவே இந்தப்பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட கழிப்பறை பல ஆண்டுக ளாக பூட்டி கிடப்பதாகவும், அதனை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் குடிநீர், சாலை வசதி சரிவர இல்லை. 

    இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என கூறி மேயரின் வாகனத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் சமாதானம் பேசி கோரி க்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    தாரமங்கலம் அருேக வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம்  தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் பைப்பூர் பகுதியை சேர்ந்தவர் மணி ( வயது 57). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 20- ந்தேதி காலை சாலையோரம் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றதால் படுகாயம் அடைந்தார்.  

    மணியை மீட்டு உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மணி நேற்று  பரிதாபமாக இறந்தார். இது குறித்த  புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    இரும்புதலை பகுதியில் நாயின் தலையில் பிளாஸ்டிக் குடம் சிக்கியதால் உணவு உட்கொள்ள முடியாமல் அந்த நாய் உயிருக்கு போராடி வருகிறது.
    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை பகுதியில் தெருநாய் ஒன்று சாலையில் சுற்றி திரிந்தது. 

    அப்போது அந்த நாய் தண்ணீர் குடிக்க அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் வைத்திருந்த பிளாஷ்டிக் குடத்திற்குள் தலையை விட்டது. 

    தலையை மீண்டும் எடுக்க முடியாமல் போகவே நாய் பயந்து போய் அங்கும், இங்கும் ஓடி மோதி கொண்டதில் குடத்தின் அடிபாகம் உடைந்து போனது.

    ஆனால் குடத்தின் மேல்பாகம் நாயின் கழுத்தில் வசமாக மாட்டி கொண்டதால் அதனால் கழட்ட முடியவில்லை. இதனால் தலையில் குடம் மாட்டிய நிலையில் பல நாட்களாக சாலையில் சுற்றி திரிந்து கொண்டிருக்கிறது. 

    இதனால் அந்த நாயால் உணவு சாப்பிட கூட முடியாமல் அங்கும் இங்கும் சுற்றியபடி திரிந்து உயிருக்கு போராடி வருகிறது. கிராமத்தினர் சிலர் தலையில் சிக்கிய குடத்தை அகற்ற முயற்சித்தும் நாய் நிற்காமல் ஓடிவிடுவதாக கூறுகின்றனர்.

    ரோட்டில் செல்லும் வாகனத்தில் அடிபட்டு இறந்து போய் விடுமோ என பயத்தில் இருப்பதாக கிராம மக்கள் கூறினர். 

    உடனடியாக வனவிலங்கு பாதுகாப்புதுறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு பணியினர் எப்படியாவது நாயின் கழுத்தில் சிக்கிய பிளாஷ்டிக் குடத்தை அகற்றி நாயின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேட்டூர் காவிரி கிராஸ் அருகே கால்வாய் கரையில் இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது.
    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த காவிரிக்கரை பகுதியில் உள்ள கால்வாய் கரையில் ஒரு மோட்டார்சைக்கிள் கிடந்தது. அது தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. 

    அந்த வழியாக சென்றவர்கள் அதை பார்த்து மேட்டூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த மோட்டார்சைக்கிளை கைப்பற்றினர். 

    அதை தீவைத்து எரித்தவர்கள் யார்? அந்த மோட்டார்சைக்கிளில் வந்தவர் யார்? முன்விரோதத்தில் மோட்டார்சைக்கிளை  கடத்தி கொண்டு வந்து தீ வைத்தனரா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×