என் மலர்
நீங்கள் தேடியது "Youth kills"
- பலியான வாலிபர் இரும்பு வேலி அமைக்கும் பணிக்காக தினமும் தூத்துக்குடிக்கு சென்று வந்தார்.
- ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி இறந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
தூத்துக்குடி:
நெல்லை மேலப்பாளை–யத்தை சேர்ந்தவர் காதர்மைதீன் (வயது 25). இவர் தோட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இரும்பு வேலி அமைத்து கொடுக்கும் பணி செய்து வந்தார்.
தூத்துக்குடியில் இரும்பு வேலி அமைக்கும் பணிக்காக அங்கு தினமும் சென்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தூத்துக்குடி-மீளவிட்டான் இடையே ரெயில்வே தண்டவாளத்தில் காதர் மைதீன் ரெயிலில் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் விரைந்து சென்று பலியான காதர்மைதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அவர் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ரெயிலில் விழுந்து தற்கொலை செய்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சோலுடையான்பட்டியைச் சேர்ந்தவர் மருதுபாண்டியன் (வயது25). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். அதன் பின்னர் சொந்தமாக ஜே.சி.பி. எந்திரம் வாங்கி ஓட்டி வந்தார்.
மருதுபாண்டியன் தனது நண்பர்களான சக்தி (வயது18), ரவி (24) ஆகியோருடன் திருக்கோஷ்டியூர் சென்று அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றினார்.
அதன் பின்னர் ஜே.சி.பி. வாகனத்தை அங்குள்ள வாட்டர் சர்வீஸ் நிறுவனத்துக்கு கொண்டு சென்றார். அங்கு வாகனத்தை அவரே சுத்தம் செய்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரை மின்சாரம் தாக்கியது. மயங்கி விழுந்த அவரை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மருதுபாண்டியனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
கங்கைகொண்டான் அருகேயுள்ள பருத்தி குளத்தை சேர்ந்தவர் சண்முகராஜ்(வயது31). இவர் ஜே.சி.பி. ஆப்ரேட்டர். நேற்று இவர் கயத்தாறுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
4 வழி சாலையில் தனியார் பள்ளி அருகே வந்தபோது சண்முகராஜ் எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிளில் இருந்துதவறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சண்முகராஜ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி அறிந்ததும். பாரத்தின் உறவினர்களும், அப்பகுதி மக்களும் அங்கு திரண்டு வந்தனர். உடனே பஸ் டிரைவர், கண்டக்டர் அங்கிருந்து ஓடிவிட்டனர். ஆத்திரத்தில் இருந்த பொது மக்கள் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர்.
அப்போது டிரைவர் இருக்கைக்கு சிலர் தீவைத்தனர். இதில் இருக்கை தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ்சில் எரிந்த தீயை அணைத்தனர். இல்லையென்றால் தீ பஸ் முழுவதும் பரவி இருக்கும்.
பின்னர் பாரத் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
திண்டுக்கல்லை அடுத்துள்ள சிறுமலை சோதனைச்சாவடி அருகே வன விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக மிகப் பெரிய தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். விளையாட்டு பயிற்சிக்கு பயன்படுத்தும் பனியன் மற்றும் அரைக்கால் சட்டை அணிந்திருந்தார்.
அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆகி இருந்ததால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் உதவியுடன் அவரது உடலை மேலே கொண்டு வந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடிபோதையில் தவறி விழுந்தாரா? யாரேனும் அடித்து தொட்டியில் வீசிச் சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை, வல்லம் அருகே உள்ள நல்லதண்ணி கிணறு சாலையைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் அய்யப்பன் (வயது 30).
அவருக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே பஸ் பயணிகள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அய்யப்பன் நேற்று இரவு இறந்தார்.
இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






