search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mini bus accident"

    பொள்ளாச்சி அருகே மினி பஸ் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் கேரள எல்.ஐ.சி. முகவர் பலியானார். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
    பொள்ளாச்சி:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த 28 பேர் கடந்த 9-ந் தேதி மினி பஸ்சில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் அங்குள்ள பல்வேறு இடங்களை சுற்று பார்த்தனர்.

    நேற்று இரவு பொள்ளாச்சி வழியாக சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். இந்த மினி பஸ் நள்ளிரவு 11.15 மணியளவில் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம் பாளையத்தில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென பஸ்சின் வலது முன் பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் ரோடு ஓரம் தலை குப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் பஸ்சில் இருந்த எர்ணாகுளத்தை சேர்ந்த ஸ்ரீராஜ் (38) சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார். இவர் எல்.ஐ.சி. முகவர் ஆவார்.

    பஸ்டிரைவர் நோபி, நந்துலால் (19) யாது (18), அஜீஸ் (20), அரவிந்த் சியாம்பிரகாஷ் (26), விஷால் (24), அகில் விஸ்வநாத் (26), அம்ருத் (22), சாஜேஸ் (37), விநாயக் (26), ஜித்து26), விஷ்ணு, விமல், கிரிஷ் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களில் 14 பேர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இது குறித்து எர்ணாகுளத்தில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பொள்ளாச்சி விரைந்து வந்தனர்.

    விபத்து தொடர்பாக ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    மினி பஸ்சின் படிக்கட்டியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை, வல்லம் அருகே உள்ள நல்லதண்ணி கிணறு சாலையைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் அய்யப்பன் (வயது 30).

    இவர் கடந்த 12-ந் தேதி வல்லத்தில் இருந்து தஞ்சைக்கு மினி பஸ்சில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த படி சென்று கொண்டிருந்தார். அப்போது மேம்பாலம் அருகே மினி பஸ் செல்லும் போது எதிர்பாராத விதமாக பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    அவருக்கு உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே பஸ் பயணிகள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அய்யப்பன் நேற்று இரவு இறந்தார்.

    இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பேராவூரணி அருகே மினி பஸ்சில் ஏறும்போது தவறி விழுந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    பேராவூரணி:

    பேராவூரணியை அடுத்த மணக்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி வீரம்மாள் (வயது 62), கூலி தொழிலாளி.

    இவர் முடச்சிக்காட்டில் உள்ள தனது மகள் வீடு சென்று விட்டு, ஊர் திரும்புவதற்காக முடச்சிக்காடு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த வீரம்மாள், அவ்வழியே வந்த மினி பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது ஓட்டுநர் பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது. இதில் தவறி விழுந்த வீரம்மாளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீரம்மாள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, மேல்சிகிச்சைக்காக தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இதுகுறித்து வீரம்மாளின் மகன் தனபால் அளித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×