என் மலர்

  செய்திகள்

  பொக்லைன் எந்திரம் மூலம் மண் சாலை அமைக்கும் பணியை படத்தில் காணலாம்
  X
  பொக்லைன் எந்திரம் மூலம் மண் சாலை அமைக்கும் பணியை படத்தில் காணலாம்

  தென்பெண்ணை ஆற்றின் அருகே 13-வது நாளாக பெருமாள் சிலை நிறுத்தி வைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓசூர் தென்பெண்ணை ஆற்றின் அருகே மண்சாலை அமைக்கும் பணியின் காரணமாக 13-வது நாளாக பெருமாள் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
  ஓசூர்:

  திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா கொரக்கோட்டையில் செதுக்கப்பட்ட 350 டன் எடையுள்ள பிரமாண்ட கோதண்டராமர் சிலை, ஓசூர் வழியாக கர்நாடகா மாநிலம் ஈஜிபுராவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

  இந்த சிலை, திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வழியாக பல்வேறு இடையூறுகளை தாண்டி, ஓசூர் அருகே பேரண்டப்பள்ளிக்கு வந்தது.

  பேரண்டப்பள்ளி பகுதியில் ஓசூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே ஓடும் தென் பெண்ணையாற்றில் சிலை கடந்து செல்ல வசதியாக தற்காலிக மண்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது.

  கடந்த ஒரு வாரமாக கர்நாடக மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக, தென்பெண்ணை ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால், மண்பாலம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டு இருந்தது. அணைக்கு 400 கனஅடி முதல் 508 கனஅடி வரை தண்ணீர் வந்ததால், பணிகள் நடைபெறவில்லை. தற்போது 293 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதால், ஆற்றில் தண்ணீரின் அளவு குறைந்து உள்ளது.

  இதையடுத்து தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பாலம் அமைக்கப்பட்டு பொறியாளர்கள் ஆய்வு செய்த பின், சிலை ஆற்றை கடக்க உள்ளது. இதனிடையே, கடந்த 13-வது நாளான இன்றும் பெருமாள் சிலை அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிலையை காண, ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
  Next Story
  ×