search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளி"

    • ஆத்திரம் அடைந்த சந்திரசேகரன் இரும்பு கம்பியால் முத்துப்பாண்டியின் தலையில் தாக்கினார்.
    • செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

    வண்டலூர்:

    கூடுவாஞ்சேரி அருகே உள்ள காயரம்பேடு ஊராட்சி, மூலக்கழனி பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகரன். இவர் அப்பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டுக்கு தீபாவளியையொட்டி உறவினரான திருநெல்வேலி மாவட்டம், திசையன் விளையை சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 45) வந்து இருந்தார். கடந்த 14-ந் தேதி சந்திர சேகரனும், முத்துப்பாண்டியும் சேர்ந்து கடையில் இருந்த போது மதுகுடித்தனர். அப்போது மது போதையில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சந்திரசேகரன் இரும்பு கம்பியால் முத்துப்பாண்டியின் தலையில் தாக்கினார்.

    இதில் பலத்த காயம் அடைந்த முத்துப்பாண்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முத்துப்பாண்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து சந்திரசேகரனை நேற்று மாலை கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.

    கொளத்தூர் அருகே யானை தாக்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி படுகாயடைந்தார்.
    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சின்னதண்டா பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 55). 

    இவர் ஆடு மேய்க்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார். நேற்று லக்கம்பட்டி கிராமத்தை கிராமத்தைச் சேர்ந்த ரங்க போ என் கார்டு அருகே வனப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். மாலையில் வீடு திரும்பி வரும்போது ஒரு ஆண் யானை ஒன்று பின்பக்கமாக வந்து தந்தத்தால் கோவிந்தனை முதுகில் குத்தியது. 

    இதனால் மிரண்டு போன அவர் சுதாரித்துக்கொண்டு வனப்பகுதியில் இருந்து யானையிடம் தப்பி கிராமத்துக்கு வந்தார். கிராம மக்கள் ஆம்புலன்சை வரவழைத்து உடனடியாக கோவிந்தனை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    அங்கு அவருக்கு  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மேட்டூர் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கபிலர்மலை அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே உள்ள செம்மடைபாளையத்தை சேர்ந்தவர் பாபு (வயது27), கட்டிட தொழிலாளி.இவரது மனைவி சூர்யா (23). பாபு கடந்த இரண்டு வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் பாபுவின் சொந்த ஊரான பரமத்தி அருகே உள்ள பிள்ளைகளைத்தூரில் தனது பெரியப்பா வீடு அருகே வாடகை வீடு எடுத்து கடந்த 4 மாதங்களாக தங்கியிருந்தனர். 

    கடந்த 1-ந் தேதி பாபுவின் மனைவி சூர்யா வேலைக்கு சென்று விட்டு மீண்டும் மாலை வீட்டிற்கு வந்த போது தனது கணவர் வீட்டில் துப்பட்டாவால் தொங்கிக்கொண்டிருந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

    பின்னர் அவரை  வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பாபு ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    தகவல்‌ அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீசார் பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கள்ளிக்குடி அருகே கட்டித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    திருமங்கலம்

    திருமங்கலம் அருகே கள்ளிக்குடி, கல்லணையை சேர்ந்தவர் பழனியாண்டி(வயது35). இவர் கட்டித்தொழி லாளியாக பணிபுரிந்து வந்தார். 

    இந்தநிலையில் கடந்த சில தினங்களாக கணவன், மனைவிக்குள் குடும்பபிரச்னை ஏற்பட்டு உள்ளது. இதனால் மனவிரக்தியில் இருந்த பழனியாண்டி நேற்று மருதங்குடி கிராமத்திற்கு சென்று பெற்றோரை சந்தித்துபேசியுள்ளார். 

    பின்னர் மருதங்குடி ஊரணிக்கு சென்ற அவர் அங்கு விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மதுரை அரசுமருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். செல்லும் வழியில் பழனியாண்டி உயிரிழந்தார்.
    திருப்பூரில் போலீஸ் விசாரணைக்கு பயந்து மோதிரங்களை விழுங்கிய தொழிலாளிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    திருப்பூர்:

    திருப்பூரை அடுத்த வஞ்சிபாளையம் மேம்பாலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி காஜா(வயது45), சதாம் உசேன், உதயகுமார் உள்பட 4 பேர் மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த காஜா, உதயகுமார் மற்றும் அவருடைய நண்பர் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து சதாம் உசேனை கத்தி மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர்.

    இதில் படுகாயமடைந்த சதாம் உசேன் வலி தாங்க முடியாமல் கூச்சல் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அங்கு சென்ற அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட காஜா, உதயகுமார் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட 5 பேரை போலீசார் ஜீப்பில் ஏற்றி திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    அப்போது காஜா போலீஸ் விசாரணைக்கு பயந்து திடீரென தான் அணிந்திருந்த 2 மோதிரங்களை கழற்றி விழுங்கினார். சிறிது நேரத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாரமங்கலம் அருேக வாகனம் மோதி தொழிலாளி இறந்தார்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம்  தாரமங்கலம் அருகில் உள்ள ஆரூர்பட்டி கிராமம் பைப்பூர் பகுதியை சேர்ந்தவர் மணி ( வயது 57). கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 20- ந்தேதி காலை சாலையோரம் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றதால் படுகாயம் அடைந்தார்.  

    மணியை மீட்டு உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த மணி நேற்று  பரிதாபமாக இறந்தார். இது குறித்த  புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளி படுகாயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து டிரைவரை கைது செய்தனர்.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம்  குமாரபாளையம் அருகே உள்ள ஆனங்கூர் ரோடு பழைய அஞ்சல் அலுவலகம் அருகே வசிப்பவர் சுரேஷ் (வயது 30). கட்டிட கூலி தொழிலாளி. 

    இவர் தனது மொபட் வாகனத்தில் ஒட்டன்கோவில் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி திடீரென மொபட்  மீது மோதியது. இதில்  சுரேஷ் பலத்த காயமடைந்தார். 

    இதையடுத்து அவர் குமாரபாளையம்  அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரித்ததில் லாரி டிரைவர் திருச்சியை சேர்ந்த (சுரேஷ் 45), என்பது தெரியவந்தது. லாரி டிரைவர் சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

    ×