search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகை"

    சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீடு பயிற்சி வகுப்புகள் 4-ந் தேதி தொடங்குகிறது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்  கோ.ஜினு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் தொடர்பான பயிற்சி வகுப்பு சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வருகிற 4-ந் தேதி முதல் நடைபெறுகிறது. வாரத்திற்கு இரண்டு நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு) என மொத்தம் 17 நாட்கள் (100மணி நேரம்) பயிற்சி வகுப்பு நடைபெறும். 

    பயிற்சி கட்டணம் ரூ.4 ஆயிரத்து 543 ஆகும். பயிற்சியின் முடிவில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே பயிற்சியினை முடித்தவர்கள் அரசு வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் நகை மதிப்பீட்டாளாராக பணியில் உள்ளனர். 

    பயிற்சியில் சேர குறைந்த பட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி. ஆண், பெண் இருபாலரும் எந்த பகுதியில் இருந்தும் கலந்து கொள்ளலாம்.

    மேலும் விபரங்களுக்கு, சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை அணுகவும். மேலும் தொடர்ப்புக்கு 04575 - 243995, 79048 70745 மற்றும் 9786750554 ஆகிய தொலைபேசி எண்களிலும்   தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    குமாரபாளையம் அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    குமாரபாளையம்:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த சித்தார் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம்(வயது 33), விவசாயி. இவரது மனைவி சுதா. இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.

    இவர்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது குமாரபாளையம் கல்லூரி அருகே மோட்டார்சைக்கிளை பாலசுப்பிரமணியம் ஓட்டி வந்தார்.  பின்னால் அமர்ந்திருந்த குழந்தையுடன் சுதா அமர்ந்திருந்தார்.

    அப்போது அந்த வழியாக நம்பர் பிளேட் இல்லாத மோட்டார்சைக்கிளில்  மர்ம நபர்கள்  வந்தனர். அவர்கள் திடீரென  சுதாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியை  பறிக்க முயன்றனர். உடனே பாலசுப்ரமணி வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு சத்தம் போட்டார். 

    சத்தம் கேட்டு  அக்கம் பக்கம் உள்ளவர்கள் திரண்டு  நகை பறிக்க முயன்றவர்களை  மடக்கி பிடித்தனர். 

    விசாரணையில், அவர்கள் சேலம் மாவட்டம்  வெள்ளைக்கல்பட்டியை சேர்ந்த வினோத்(21), சின்னப்பம்பட்டியை சேர்ந்த குமார்(20) என்பது  தெரியவந்தது. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. 

    போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிள், 2 செல்போன்களையும்  பறிமுதல் செய்தனர்.
    சாத்தூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது என இணைப்பதிவாளர் தகவல் தெரிவித்தார்.
    விருதுநகர்

    விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சாத்தூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2022-23-ம் கல்வியாண்டில் பகுதி நேர நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களும் குறித்த பயிற்சிக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தை பற்றிய விபரம், தங்கத்தை உரசியும், உரசாமலும் தரம் அறியும் முறை, வங்கிகளில் நகைக்கடன் வழங்கும் முறை, ஹால்மார்க் முத்திரை, அடகு பிடிப்போர் நடைமுறை சட்டம் மற்றும் விதிகள் போன்ற பாடங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 

    பயிற்சியின் முடிவில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் தேர்வு நடத்தி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய ஏதுவாக சான்றிதழ் வழங்கப்படும். 

    இந்த பயிற்சியை முடித்தவர்கள் தேசிய வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றவும், அடகு மற்றும் ஆபரண கடை மற்றும் நகை வணிகம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளன.

    இந்த பயிற்சியில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அரசு தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களும் பயிற்சி பெறும் வகையில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. 

     பயிற்சியின் கால அளவு 100 மணி நேரம் (10 வாரங்கள்). இந்த பயிற்சியில் சேருவ தற்கு குறைந்த பட்ச கல்வித்தகுதி  10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்த பட்ச வயது 18. அதிக பட்ச வயது வரம்பு இல்லை.  ஆண், பெண் இருபாலரும் இந்த பயிற்சியில் சேரலாம். இதற்கான கட்டணம் ரூ. 4 ஆயிரத்து 543 ஆகும். 

    பயிற்சி பெறும் அனைவருக்கும் ரூ. 500 மதிப்புள்ள கிட் பாக்ஸ் (நகை மதிப்பீட்டாளர் பெட்டி) இலவசமாக வழங்கப்படும். 

    மேலும் விவரங்களுக்கு முதல்வர், தியாகி சங்கரலிங்கனார் கூட்டுறவு மேலாண்மை நிலையம்,  சிவசக்தி திருமண மண்டபம், எஸ்.ஆர். நாயுடு நகர், பி.ஆர்.சி. டெப்போ எதிர்புறம், சாத்தூர் என்ற முகவரியிலோ அல்லது 04562-260293, 8807159088 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வாலிபரிடம் நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
    மதுரை கரிமேடு, மோதிலால் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன் (33). சம்பவத்தன்று இவர் இரவு திலகர் திடல், நாயக்கர் புது தெருவில் நடந்து சென்றார்.   அங்கு வந்த ஒரு வாலிபர்   கத்தியை காட்டி மிரட்டி ரூ.3,420-ஐ  பறித்து தப்பினார். 

    இது குறித்த புகாரின் பேரில் திலகர் திடல்   போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து  விசாரணை நடத்தினர். அவர் கரிமேடு, ராஜேந்திரா மெயின் ரோடு, தக்காளி ராஜ்குமார் (35) என்பது தெரியவந்தது. அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். 

    இதனைத் தொடர்ந்து  அவரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை ஆனையூர், மல்லிகை நகர், ரேக்ளான் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர் நேற்று இரவு செல்லூர் கே.வி. சாலையில் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், கணேசனிடம் 1 பவுன் தங்க சங்கிலி மற்றும் செல்போனை  பறித்துக் கொண்டு தப்பினர்.

    இது குறித்த புகாரின் பேரில்,  செல்லூர்   போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழனி அருகே பைனான்சியர் வீட்டில் இன்று நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    பழனி:

    பழனி டவுன் குபேரபட்டினத்தைச் சேர்ந்தவர் பொன்ராம். பைனான்சியர்.  இவர் நேற்று இரவு குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
    இன்று காலை அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.  இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பொன்ராமுக்கு  தகவல் கொடுத்தனர்.
    இதனையடுத்து பொன்ராம் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில்  இருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.50,000 பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து அவர் பழனி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி டி.எஸ்.பி. சத்யராஜ், இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

    மேலும் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா மூலம் முதல்கட்ட விசாரணை துவக்கப்பட்டுள்ளது. பழனி பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பதால் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    ×