என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொள்ளை நடந்த வீட்டில் போலீசர் விசாரணை நடத்தினர்.
பழனி அருகே பைனான்சியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
பழனி அருகே பைனான்சியர் வீட்டில் இன்று நகை, பணம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பழனி:
இன்று காலை அவரது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து பொன்ராமுக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து பொன்ராம் வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.50,000 பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் பழனி டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனி டி.எஸ்.பி. சத்யராஜ், இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
Next Story






