என் மலர்
நீங்கள் தேடியது "Bicycle"
- கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
- பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை அமைச்சர் வழங்கினார்.
மங்கலம்
திருப்பூர் மங்கலம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மருத்துவ முகாமை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர்அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள், பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இந்த முப்பெரும் விழாவிற்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார். திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன், தி.மு.க. திருப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பி.விஸ்வலிங்கசாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகிஎபிசியண்ட்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் திருப்பூர் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜெகதீஷ்குமார், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சங்கவி, பெருமாநல்லூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நித்யா முருகேசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வரதராஜன், ஊராட்சி மன்ற 9-வது உறுப்பினர் முகமது இத்ரீஸ், தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ரபிதீன், தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ஜீனைத், திருப்பூர் தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சரவணக்குமார், முகமது ஜீனைத், மங்கலம் ஊராட்சி மன்ற 3-வது வார்டு உறுப்பினர் எச்.ரபிதீன், தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் அப்துல்பாரி, மாவட்ட பிரதிநிதி மா.சிவசாமி, மங்கலம் ஊராட்சி செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நேற்று இரவு நடந்த விபத்தில் முதியவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று இறந்துள்ளார்.
- மூலக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற நபரை தேடி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மூலக்கரைப்பட்டி திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மீரான் மைதீன்(வயது 80). இவர் நேற்று இரவு அந்த பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் மீரான் மைதீன் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவரை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மீரான் மைதீன் பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக மூலக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற நபரை தேடி வருகின்றனர்.
- ஜெயங்கொண்டத்தில் இருந்து சைக்கிளில் லடாக் சென்று திரும்பிய வாலிபர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- 8400 கி.மீ. சைக்கிள் பயணம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மகன் வினோத் (வயது18), இவர் பிளஸ்-2 முடித்துள்ளார். சூரியமணல் கிராமத்தை சேர்ந்த தச்சுத் தொழிலாளி ரவி மகன் ராசு (20) இவர் டிப்ளமோ முடித்துள்ளார். நண்பர்களான இவர்கள் இருவரும், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், ஜூன் 1-ந் தேதி ஜெயங்கொண்டத்திலிருந்து காஷ்மீர் லடாக் பகுதிக்கு சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். ஜூன்31-ந் தேதி லடாக்கை சென்றடைந்து, எல்லை பகுதியில் ஒரு நாள் தங்கினர். ஜூலை 2-ந் தேதி அங்கிருந்து சைக்கிளில் புறப்பட்டு, நேற்று ஜெயங்கொண்டத்தை வந்தடைந்தனர். 8400 கி.மீ. சைக்கிள் பயணம் செய்த இளைஞர்களை பொதுமக்கள், காவல் துறையினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிளஸ்-1 மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் தயார் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி பிளஸ்-1 படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் 11-ம் வகுப்பு தொடங்கியவுடன் இதனை அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது பள்ளிகள் தொடங்கி 15 நாட்களே ஆவதால் ஜூலை மாதத்தில் இலவச சைக்கிள் வழங்க அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிளஸ்-1 மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் தயார் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள்கள் தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். எவ்வித குறைபாடுமின்றி தரமான முறையில் சைக்கிள்களை வழங்கவேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
சென்னையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்தபின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உலக மிதி வண்டி தினம் நடைபெற்றது.
- மிதிவண்டி பேரணி கல்லூரி வளாகத்தில் தொடங்கி 7 கிலோ மீட்டர் தூரம் சென்றது.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் உலக மிதி வண்டி தினம் நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மனோஜ்குமார் வரவேற்று பேசினார். துணை முதல்வர் பாலமுருகன் மிதிவண்டி பேரணியை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார். அவர் பேசும்போது, தற்காலத்தில் மிதிவண்டியின் உபயோகத்தை அதி கரிப்பதால் ஏற்படும் பயன்கள் பற்றி விளக்கி பேசினார்.இந்த மிதிவண்டி பேரணி கல்லூரி வளாகத்தில் தொடங்கி 7 கிலோ மீட்டர் தூரம் சென்றது. இதில் 35 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பள்ளிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 7 அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவிகள் 1,694 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
இந்த விழாவிற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா வரவேற்றார். சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா வாழ்த்தி பேசினார். சிறப்பு அழைப்பாளராக மின்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசும்போது, குமாரபாளையத்தில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. மேலும் பொறியியல் கல்லூரி கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. நமது மாநிலத்தில் இவ்வாறு வழங்கப்படுவதை பார்த்து மற்ற மாநிலங்கள் இதை பின்பற்றுகின்றன. மாணவ, மாணவிகள் அரசின் உதவிகளை பெற்று பயனடைந்து தமிழகத்தை முன் மாதிரி மாநிலமாக திகழ செய்ய வேண்டும், என்றார்.
முடிவில் தலைமை ஆசிரியர் கருப்பண்ணன் நன்றி கூறினார்.
விழாவில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தங்கவேல், ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் செந்தில், நகராட்சி முன்னாள் தலைவர் வெள்ளிங்கிரி, டி.சி.எம்.எஸ். தலைவர் மூர்த்தி, நகராட்சி முன்னாள் துணை தலைவர் சுப்பிரமணியம், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.