என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஏற்காட்டில் இலவச சைக்கிள் வழங்கல்
- ஏற்காடு அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
- இதில் தி.மு.க.-அ.தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
ஏற்காடு:
ஏற்காடு அரசு மேல் நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் கலந்து கொள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.சித்ரா மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு அழைப்புகள் வழங்கப்பட்டது.
இரு தரப்பினரும் விழாவிற்கு வந்ததால் யாருக்கு முன்னுரிமை கொடுப்பது? யார் சைக்கிள் வழங்குவது? என வாக்குவாதம் ஏற்பட் டது. மேலும் மேடையில் தி.மு.க. மாவட்ட கவுன் சிலர் புஷ்பராணிக்கு பொன் னாடை அணிவித்தனர்.
மேலும் ஏற்காடு டவுன் அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்திக்கு பொன்னாடை அணிவிக்கவில்லை. இதனால் கோபமடைந்த அ.தி.மு.க.வினர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து தி.மு.க. வினரும் அவர்கள் தரப்பு நியாயத்தை முன்வைக்கவே இருதரப்புக்கும் காரசார விவாதம் ஏற்பட்டது.
இதன் காரணமாக சைக்கிள் பெற மாணவ-மாணவிகள் வெயிலிலேயே காத்திருந்து அவதிப்பட்டனர். இதை தொடர்ந்து சித்ரா எம்.எல்.ஏ. எங்களை ஒரு மணிநேரம் காக்கவைத்து அவமானப்படுத்தும் வகையில் நடப்பதா என பள்ளி தலைமை ஆசிரியை மாலதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் உடனடியாக அங்கிருந்த மாணவர்களை அழைத்து சைக்கிளை கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனைத் தொடர்ந்து தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் தாங்கள் இல்லாமலேயே விழாவை நடத்தி இருக்க லாம் எனவும், தங்களுக்கு அழைப்பு விடுத்து அவமான ப்படுத்தி யதாகவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுப ட்டனர்.
இதனால் பள்ளி வளாகத் தில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இருதரப்பினர் பிரச்சினை காரணமாக பள்ளி மாணவர்கள் அவதிக் குள்ளாகினர்.