என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவிலில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
    X

    உத்தமபாளையம் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விலையில்லா சைக்கிள் வழங்கிய போது எடுத்த படம்.

    வெள்ளகோவிலில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் விழா நடைபெற்றது.
    • வெள்ளகோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு 198 மிதிவண்டிகளையும் வழங்கினார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் உத்தமபாளையம், வெள்ளகோவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவில் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கலந்து கொண்டு உத்தமபாளையம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 101 மிதிவண்டிகளும், வெள்ளகோவில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு 198 மிதிவண்டிகளையும் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் வெள்ளகோவில் நகர் மன்ற தலைவி மு.கனியரசி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சேடன்குட்டை பழனிச்சாமி, கவிதா, திமுக ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே. சந்திரசேகரன், நகரச் செயலாளர் சபரி எஸ்.முருகானந்தன், ஒன்றிய அவைத் தலைவர் தண்டபாணி. சிவக்குமார். அன்பரசன்.ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் லோகநாதன், பள்ளி தலைமையாசிரியர்கள் குணசேகரன், மனோன்மணி உட்பட நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள்,தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×