search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
    X

    பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி

    • முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி ஈரோ ட்டில் நடத்தப்பட உள்ளது.
    • இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

    ஈரோடு, செப். 11-

    மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி ஈரோ ட்டில் நடத்தப்பட உள்ளது.

    இதில் 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டரும், 15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டரும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டரும் போட்டி நடத்தப்படுகிறது.

    இதில் பங்கேற்க விரும்பும் மாணவ-மாணவிகள் இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த போட்டி வருகிற 15-ந் தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது.

    ஈரோடு பெருந்துறை ரோடு வீரப்பம்பாளையம் பிரிவில் இருந்து தொடங்கி நந்தா கலை அறிவியல் கல்லூரி வரை சென்று விட்டு மீண்டும் வீரப்பம் பாளையம் பிரிவுக்கு வரவேண்டும்.

    இந்த போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் மாணவ-மாணவி களுக்கு தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வீதமும், 4-வது முதல் 10-வது இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.250 பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அதிகாரியை தொடர்பு கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ -மாணவிகள் தங்களது பள்ளியில் இருந்து வயது சான்றிதழ் பெற்று வரவேண்டும்.

    இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×