search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடு"

    • 10 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி ரூ.8 ஆயிரம் முதல் விற்பனையானது.
    • 1 கிலோ எடை கொண்ட நாட்டுக்கோழி ரூ.500க்கு விற்பனையானது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு திண்டுக்கல் மட்டுமின்றி திருச்சி, கரூர் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் அதிக அளவில் ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை 3 மணி முதல் சந்தை வியாபாரம் தொடங்கியது. வழக்கமாக வரும் வியாபாரிகளை விட நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் வியாபாரிகள் வந்திருந்தனர்.

    10 கிலோ எடை கொண்ட ஆட்டுக்குட்டி ரூ.8 ஆயிரம் முதல் விற்பனையானது. சந்தைக்கு அதிக அளவில் செம்மறி ஆடுகள் வந்திருந்த நிலையில் வெள்ளாடுகள் குறைந்த அளவே வந்தன. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

    கடந்த வாரம் வரை ரூ.6500க்கு விற்கப்பட்ட ஆட்டுக்குட்டிகள் இன்று ரூ.8,000 மட்டும் அதற்கும் மேலும் விற்பனையாகியது. இதே போல் கிராமங்களில் தீபாவளி பண்டிகை சமயங்களில் வீடுகளுக்கு வரும் உறவினர்களுக்கு நாட்டுக்கோழி சமையல் சமைத்து விருந்தளிப்பது முக்கியமான ஒன்றாகும். இதனால் நாட்டுக் கோழிகளுக்கு நல்ல விலை கிடைத்தது.

    1 கிலோ எடை கொண்ட நாட்டுக்கோழி ரூ.500க்கு விற்பனையானது. கேட்ட விலைக்கு நாட்டுக்கோழிகள் விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இன்று மட்டும் ரூ.3 கோடிக்கு மேல் ஆடு, கோழிகள் விற்பனையானது.

    அய்யலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு முதலே விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இன்று காலையிலும் மழை தொடர்ந்த நிலையிலும் ஆட்டுச்சந்தையில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. சந்தை அமைந்துள்ள பகுதியில் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்பட்டால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாரம் தோறும் சந்தை நடைபெறும் நாளில் இது போன்ற சூழல் நிலவுவதால் இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

    கொளத்தூர் அருகே யானை தாக்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி படுகாயடைந்தார்.
    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சின்னதண்டா பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 55). 

    இவர் ஆடு மேய்க்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார். நேற்று லக்கம்பட்டி கிராமத்தை கிராமத்தைச் சேர்ந்த ரங்க போ என் கார்டு அருகே வனப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். மாலையில் வீடு திரும்பி வரும்போது ஒரு ஆண் யானை ஒன்று பின்பக்கமாக வந்து தந்தத்தால் கோவிந்தனை முதுகில் குத்தியது. 

    இதனால் மிரண்டு போன அவர் சுதாரித்துக்கொண்டு வனப்பகுதியில் இருந்து யானையிடம் தப்பி கிராமத்துக்கு வந்தார். கிராம மக்கள் ஆம்புலன்சை வரவழைத்து உடனடியாக கோவிந்தனை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    அங்கு அவருக்கு  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மேட்டூர் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாமக்கல் அன்பு நகரில் உல்லாச வாழ்க்கைக்காக ஆடு திருடிய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
    நாமக்கல்:

    நாமக்கல் அன்பு நகரில் போலீசார் வாகன தணிக்கையில்  ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் 2 சிறுவர்கள் ஆட்டு குட்டியை எடுத்து வந்தனர். போலீசாரை பார்த்ததும் ஆட்டுக்குட்டியை போட்டு விட்டு தப்பி ஓடினர். 

    அவர்களை துரத்தி பிடித்த போலீசார் விசாரணை செய்ததில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் நாமக்கல் இ.பி. காலனி, மற்றும் கொண்டிசெட்டிபட்டியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்கள் நாமக்கல் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பயின்று வந்தனர். 

    இந்த நிலையில் பள்ளியில் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு எஸ்.கே.நகரில் உள்ள ஒரு வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி கொண்டு துத்திக்குளம் பகுதியில் ஆட்டுக்குட்டியை திருடி சென்றுள்ளனர். மேலும் அவர்கள் உல்லாச வாழ்க்கைக்காக செலவிற்கு ஆடு திருடியதாக போலீசார் விசாரணையில் கூறியுள்ளனர்.

    மேலும் இந்த திருட்டு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட மற்றொரு இளைஞரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
    ×