search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worker"

    • பேச்சிமுத்துவிடம் குடிப்பழக்கத்தை நிறுத்தும்படி வீட்டில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
    • அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தூக்கில் தொங்கிய பேச்சிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    புதியம்புத்தூர் :

    புதியம்புத்தூர் ராஜம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 45). இவர் தனது மனைவி முருகம்மா ளுடன் அப்பகுதியில் வசித்து வந்துள்ளார்.

    இவர் கட்டிட தொழிலாளி யாக வேலை செய்து வந்துள்ளார். மேலும் இவரு க்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படு கிறது.

    குடிப்பழக்கத்தை நிறுத்தும்படி வீட்டில் உள்ள வர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பேச்சிமுத்து அவருக்கு சொந்தமான மேலமடம் ஓடை பகுதியில் உள்ள அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டுள்ளார். அக்கம்பக்கத்தில் உள்ள வர்கள் தூக்கில் தொங்கிய பேச்சிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்பு லன்ஸ் மூலம் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்து வர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    தொடர்ந்து பேச்சிமுத்து வின் உடல் பிரேத பரிசோ தனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழைய பஸ் நிலையத்தில் இருந்து வாழப்பாடிக்கு நேற்று மதியம் டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது.
    • அப்போது பயணம் செய்த நபர் ஒருவர் திடீரென பஸ்சில் இருந்து பாதியிலேயே கீழே இறங்கினார்.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வாழப்பாடிக்கு நேற்று மதியம் டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சில் கண்டக்டராக குப்பனூரை சேர்ந்த லட்சுமிகாந்தன் (வயது 36) என்பவர் பணியாற்றினார். 2-வது அக்ரஹாரம் ராஜகணபதி கோவில் அருகே பஸ் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது பயணம் செய்த நபர் ஒருவர் திடீரென பஸ்சில் இருந்து பாதியிலேயே கீழே இறங்கினார்.

    இதை பார்த்த கண்டக்டர் அந்த நபரிடம் ஏன் பயணச்சீட்டு எடுக்காமல் கீழே இறங்குகிறீர்கள்? என கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இது மோதலாக மாறியது. அப்போது ஆத்திரமடைந்த அந்த நபர் நடுரோட்டில் வைத்து லட்சுமிகாந்தனை தாக்கினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரம் வரை அணிவகுத்து நின்றன.

    தகவல் கிடைத்ததும் டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் கண்டக்டர் லட்சுமிகாந்தனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர்ந்து கண்டக்டருடன் தகராறு செய்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான சதீஷ் (52) என்பது தெரியவந்தது. மேலும் லட்சுமிகாந்தனை தாக்கியதுடன் அவரை அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததாக சதீசை போலீசார் கைது செய்தனர். இதை யடுத்து அவர் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டு, ஜெயிலில் அடைக் கப்பட்டார்.

    • சேலம் கொண்ட லாம்பட்டி பி.நாட்டாமங்க லம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தை கள் உள்ளனர்.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு குடல் இறக்கம் தொடர்பாக இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டி பி.நாட்டாமங்க லம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தை கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குடல் இறக்கம் தொடர்பாக இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் அவருக்கு உடல் பூரண குணமாகவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த அவர் கடந்த 4-ந் தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இன்று காலை சக்திவேல் பரிதாபமாக இருந்தார். இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அடையாளம் தெரியாத வாகனம் தொழிலாளி மீது மோதியது.
    • இதில் சம்பவ இடத்திலேயே சிவா பரிதாபமாக உயிரிழந்தார்.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் சிவா (வயது 56). கூலி தொழிலாளி.

    இவர் தினமும் அதிகாலை எழுந்து வீட்டில் இருந்து கிளம்பி கிழக்கு கடற்கரை சாலை வழியாக செம்படவன்காடு ரவுண்டா அருகே உள்ள டீ கடைக்கு நடந்து சென்று டீ குடித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

    அதேபோல், இன்றும் அதிகாலை எழுந்து வீட்டில் இருந்து புறப்பட்டு கடையில் டீ குடித்துள்ளார். பின்னர், கடையில் இருந்து திரும்பி வரும் வழியில் செம்படவன்காடு கோவில் ஆர்ச் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து வரும்போது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே சிவா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனை கண்ட அருகில் உள்ளவர்கள் முத்துப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், தொழிலாளி மீது மோதிச்சென்ற வாகனம் குறித்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பரமத்திவேலூர் பஸ் நிலையம் அருகே நேற்று பகல் 12 மணியளவில் 55 வயது மதிக்க நபர் ஒருவர், சாலையோரம் அமர்ந்திருந்தார்.
    • அவர் அங்கிருந்த கூர்மையான கற்களை எடுத்து தனது கை, கால்களை குத்தி கிழித்துக் கொண்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பஸ் நிலையம் அருகே நேற்று பகல் 12 மணியளவில் 55 வயது மதிக்க நபர் ஒருவர், சாலையோரம் அமர்ந்திருந்தார்.

    கூர்மையான கற்கள்

    அவர் அங்கிருந்த கூர்மையான கற்களை எடுத்து தனது கை, கால்களை குத்தி கிழித்துக் கொண்டார். இதனால் அவருக்கு ரத்தம் கொட்டியதை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள், அந்த நபரை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு காயங்களுக்கு மருந்து போட்டு, அவரை மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைத்தனர்.

    சாக்கடையில் குதித்தார்

    இதனிடையே மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அந்த நபர், அரசு மருத்துவமனை அருகே உள்ள சாக்கடையில் குதித்துள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.

    இதனால அங்கிருந்து வேறு பகுதிக்குச் சென்று விட்டார். இரவு சுமார் 9 மணியளவில் பரமத்திவேலூர் பஸ் நிலையம் மற்றும் போலீஸ் நிலையம் அருகே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள ஒரு பிரியாணி கடை இருக்கும் பகுதிக்கு வந்துள்ளார்.

    கொதிக்கும் எண்ணெய்

    அங்கு சில்லி சிக்கன் போடுவதற்காக அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணையை திடீரென எடுத்து தன் தலையில் ஊற்றிக் கொண்டார். யாரும் எதிர்பாராத நேரத்தில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் இருந்தவர்கள் தெரித்து ஓடினார்கள்.

    கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக்கொண்டதால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து அங்கு வந்த போலீசார் அவரை மீட்டு அருகாமையில் உள்ள பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மனநலம் பாதிப்பு

    இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர், திருச்செங்கோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி கருப்பண்ணன் (வயது 55) என்பது தெரிய வந்தது.

    மேலும் இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராக தெரிகிறது. அவர் குடிபோதையில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கடையின் வெளிப்பகுதியில் இதுபோன்று அடுப்பு வைத்து சமையல் செய்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை.
    • தேவேந்திரன் மதுவில் பூச்சிமருந்தை கலந்துகுடித்தார்.

    திருவாரூர்:

    வலங்கைமானை அடுத்த வடக்கு பட்டம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்தவர் தனபால்.

    இவரது மகன் தேவேந்திரன்(வயது34). விவசாயி கூலித்தொழிலாளி.

    இவரது மனைவி கிருஷ்ணவேனி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் விரக்தி அடைந்த தேவேந்்திரன் நேற்றுமுன்தினம் மதுவில் பூச்சிமருந்தை கலந்துகுடித்தார்.

    இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி தேவேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேலூர் அருகே தொழிலாளியை கொன்று கிணற்றில் பிணம் வீசப்பட்டது.
    • பிணமாக கிடந்தவர் நீல நிற சட்டை அணிந்திருந்தார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள பனங்காடி கிராமத்தில் உள்ள வட்டக்கிணற்றில் இன்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் மிதந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே மேலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் பழனியப்பன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கிணற்றில் மிதந்த வாலிபரை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பிணமாக கிடந்தவர் நீல நிற சட்டை அணிந்திருந்தார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் பிணமாக கிடந்தவர் அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது51) என தெரியவந்தது. தொழிலாளியான இவர் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார்.

    கடந்த 3 நாட்களாக மாயமாகி இருந்த மணிகண்டன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டுள் ளார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருமங்கலம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கூடக்கோவில் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தூம்பக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அஜித்குமார்(வயது24), கூலி தொழிலாளி.

    இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த காளீஸ்வரி என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.

    கடந்த 2-ந் தேதியும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்படவே, கணவனும், மனைவியும் தனித்தனி அறைகளில் தூங்க சென்றனர். நள்ளிரவு நேரத்தில் விழித்த அஜித்குமார் வாழ்க்கையில் விரக்தியடைந்து தூக்கில் தொங்கினார். பக்கத்து அறையில் சத்தம் கேட்டு காளீஸ்வரி வந்து பார்த்தபோது அஜித்குமார் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உறவினர்கள் உதவியுடன் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அஜித்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான ஒரு வருடத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • 2-வது முறையும் கடித்ததால் விஷம் உடலில் ஏறி இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.
    • ஜசாப்கானின் மரணத்திற்கு காரணமான பாம்பை அவரது குடும்பத்தினர் பிடித்து அடித்து கொன்றனர்.

    ஜெய்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள மெக்ரன்கர் கிராமத்தை சேர்ந்தவர் ஜசாப்கான் (வயது 44), தொழிலாளி.

    கடந்த 20-ந்தேதி இவரை பாம்பு ஒன்று கணுக்காலில் கடித்துள்ளது. இதற்காக பொக்ரானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 4 நாட்களாக அளித்த சிகிச்சையின் பலனாக அவர் பாம்பு கடியில் இருந்து உயிர் பிழைத்து வீடு திரும்பினார்.

    இந்நிலையில் மறுநாள் அவரை மீண்டும் ஒரு பாம்பு கடித்துள்ளது. இந்த முறை அவரது மற்றொரு காலில் பாம்பு கடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜோத்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    முதல் முறை பாம்பு கடியில் இருந்து ஜசாப்கான் மீண்ட நிலையில் 2-வது முறையும் கடித்ததால் விஷம் உடலில் ஏறி அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

    ராஜஸ்தானில் பாலைவன பகுதிகளில் அதிகமாக காணப்படும் வைபர் என்ற பாம்புகளின் துணை இனமான 'பாண்டி' என்று அழைக்கப்படும் பாம்புகள் தான் ஜசாப்கானை கடித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஜசாப்கானின் மரணத்திற்கு காரணமான பாம்பை அவரது குடும்பத்தினர் பிடித்து அடித்து கொன்றனர்.

    பலியான ஜசாப்புக்கு மனைவி மற்றும் 4 மகள்கள், 5 வயதில் ஒரு மகன் உள்ளனர். 

    • போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • 6 கிலோ கஞ்சா சாக்லேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அவினாசி:

    அவினாசி அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவினாசி போலீசார் அவினாசியை அடுத்து அணைப்புதூர் அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லட்சுமணபட்டேல் (வயது 42) என்பவர் கஞ்சா சாக்லேட் வைத்திருப்பது தெரிய வந்தது.

    எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 6 கிலோ கஞ்சா சாக்லேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சம்பவத்தன்று மாசானம் சிறுமளஞ்சி அருகே உள்ள ஆற்றின் கரையில் தனது மொபட்டை நிறுத்தி விட்டு, வயல் வேலைக்கு சென்றார்.
    • மர்ம நபர்கள் மொபட்டை திருடி சென்றதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து வடக்குத் தெருவை சேர்ந்தவர் மாசானம் (வயது55). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று மாசானம் சிறுமளஞ்சி அருகே உள்ள ஆற்றின் கரையில் தனது மொபட்டை நிறுத்தி விட்டு, வயல் வேலைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அவரது மொபட்டை காணவில்லை. மர்ம நபர்கள் மொபட்டை திருடி சென்றதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி அவர் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மொபட்டை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • நேற்று முன்தினம் காலையில், ரமேஷ் அவரது மோட்டார் சைக்கிளில் நாமகிரிப்பேட்டையில் தேங்காய் உரிப்பதற்காக சென்றார்.
    • ஆத்தூர் - ராசிபுரம் சாலையில் ஆயில்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள சில்லி கடை எதிரில் சென்றபோது, அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கமாக மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா தாண்டாக்கவுண்டம் பாளையம் அம்பேத்கார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 31). தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலையில், ரமேஷ் அவரது மோட்டார் சைக்கிளில் நாமகிரிப்பேட்டையில் தேங்காய் உரிப்பதற்காக சென்றார். வேலையை முடித்துவிட்டு இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    அவர் ஆத்தூர் - ராசிபுரம் சாலையில் ஆயில்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள சில்லி கடை எதிரில் சென்றபோது, அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கமாக மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது.

    இதில் ரமேஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த ரமேஷின் மனைவி தமிழரசி (28), ரமேஷின் தம்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த ரமேஷை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையொட்டி, விபத்தில் இறந்த ரமேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சவக்கிடங்கில் வைத்தனர்.

    விபத்து பற்றி ரமேஷின் மனைவி தமிழரசி ஆயில்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், ஆயில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சிவா ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் இறந்த ரமேஷுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    ×