கஞ்சா சாக்லேட் விற்ற வடமாநில தொழிலாளி கைது

போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 6 கிலோ கஞ்சா சாக்லேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட வடநாட்டு தொழிலாளி, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட்
கைது செய்யப்பட்ட வடநாட்டு தொழிலாளி, பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா சாக்லேட்
Published on

அவினாசி:

அவினாசி அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அவினாசி போலீசார் அவினாசியை அடுத்து அணைப்புதூர் அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லட்சுமணபட்டேல் (வயது 42) என்பவர் கஞ்சா சாக்லேட் வைத்திருப்பது தெரிய வந்தது.

எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 6 கிலோ கஞ்சா சாக்லேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com