search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனம்"

    • குழித்துறை பழைய பாலத்தின் மேற்பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு தயாராக அந்த வாகனம் நின்று கொண்டிருந்தது.
    • வாகனத்தை பொதுமக்கள் துரத்தி பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    குழித்துறை:

    கேரளா மாநிலத்தில் இருந்து இறைச்சி கழிவுகள், ஓட்டல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை வாகனங்களில் ஏற்றி கொண்டு வந்து குமரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள், சாலையோரங்கள் மற்றும் வேளாண் நிலங்களில் கொட்டப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

    கேரளாவில் இருந்து குமரி மாவட்ட சோதனை சாவடிகள் வழியாக கொண்டு வரப்படும் கழிவுகள், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் வீசிச்செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனை தடுத்து நிறுத்தும படி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதுடன், போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.

    ஆனால் கேரளாவில் இருந்து வாகனங்களில் கழிவுகள் கொண்டு வரப்பட்டு குமரி மாவட்டத்திற்குள் கொட்டப்படுவது நின்றபாடில்லை. இந்நிலையில் இன்று அதிகாலையில் குமரி மாவட்ட எல்லையில் உள்ள சோதனை சாவடி வழியாக கேரளா மாநிலத்திலிருந்து மருத்துவக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு கூண்டு வாகனம் ஒன்று வந்தது.

    படர்ந்தாலுமூடு பகுதியை தாண்டி சென்று கொண்டிருந்த அந்த வாகனத்தை பார்த்த பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் துரத்தி சென்றனர். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றுவிட்டது. இதனையடுத்து அவர்கள் அந்த பகுதி முழுவதுமாக கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்தை தேடினர்.

    அப்போது குழித்துறை பழைய பாலத்தின் மேற்பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு தயாராக அந்த வாகனம் நின்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்த பொதுமக்கள், அந்த வாகனத்தை சிறை பிடித்தனர். இதுகுறித்து குழித்துறை நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராம திலகம் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரி ராஜேஷ் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கழிவுகள் ஏற்றிவந்த அந்த வாகனத்துக்கு ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.மேலும் கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்தை குழித்துறை நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்அதை பொதுமக்கள் துரத்தி பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில் வாகனத்தில் வீடியோ காட்சி ஒளிப்பரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது.
    • மத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் நடந்த இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் கலைமகள் கல்லூரியில் இன்று மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை சந்தித்து உரையாடுதல் மற்றும் பத்தாண்டு கால சாதனைகள் , திட்டங்கள் குறித்து எடுத்து விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து மத்திய துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர் வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் வந்தார்.

    பின்னர் அவர் கண்காட்சியை பார்வையிட்டார். அதிகாரிகள் அவருக்கு விளக்கம் அளித்தனர்.

    அப்போது மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில் வாகனத்தில் வீடியோ காட்சி ஒளிப்பரப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் திடீரென விழிப்புணர்வு வாகனம் தீப்பற்றி எரிய தொடங்கியது. உடனே அருகில் இருந்த தீயணைப்பு துறையினர் கெமிக்கல் வாயுவை கொண்டு தீயை அணைத்தனர். இதனால் அங்கு பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது.

    மத்திய அமைச்சர் நிகழ்ச்சியில் நடந்த இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • குழந்தை அதன்யாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா மொளசி அருகே உள்ள முனியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி (30) கூலித்தொழிலாளி.

    இவரது மனைவி சசிகலா (25). இவர்களுக்கு இலக்கியா (9), அதன்யாஸ்ரீ (4 1/2), சபரீசன் (1 1/2) என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று காலை பரமத்திவேலூர் தாலுகா ஜமீன் இளம்பள்ளி அருகே உள்ள கள்ளுக்கடை மேடு பகுதிக்கு வேலைக்கு வந்த வேலுசாமி தனது மனைவி வருகைக்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். முனியப்பம்பாளையத்தில் இருந்து தனது குழந்தைகளுடன் கள்ளுக்கடை மேடு பஸ் நிறுத்தத்தில் வந்து சசிகலா இறங்கியுள்ளார்.

    அப்போது குழந்தை அதன்யாஸ்ரீ எதிர் திசையில் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த தனது தந்தையை பார்த்ததும் ஜேடர்பாளையம்- சோழசிராமணி சாலையை கடக்க வேகமாக ஓடியதாக கூறப்படுகிறது.

    அப்போது ஜேடர்பாளையத்தில் இருந்து பெருந்துறை நோக்கி சென்ற ஏ.டி.எம்.மிற்கு பணம் நிரப்பும் வாகனம் எதிர்பாராத விதமாக குழந்தை அதன்யாஸ்ரீ மீது மோதியது.

    இதில் குழந்தை அதன்யாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் பலியான குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று இவர் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதியில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    வேதாரண்யம்:

    வேதாரணியம் அருகே உள்ள சிறுதலை காடு கிராமத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 30).

    இவர் வேதாரண்யத்தில் உள்ள தனியார் வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் சம்பவதன்று கடையில் உள்ள வேலைகளை முடித்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் சிறுதலை காடுக்கு மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆதனூர் மானங்கொண்டனாரு பாலம் தூண்டிக்காரன் கோவில் அருகே சென்றபோது இவர் மீது அடையாளம் தெரியாத வாகன மோதியில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் உடலை கைப்பற்றி வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    மேலும் வேதாரண்யம் போலீஸ் சரக டி.எஸ்.பி. சுபாஷ் சந்திர போஸ் ஏற்பாட்டில் தனிப்படை போலீசாரம், வேதாரணிய போலீசாரும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • பஞ்சரான அந்த கார் நேராக தீயணைப்பு நிலைய காம்பவுண்ட் சுவர் மீதும் மோதி நின்றது
    • போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில், நவ.1-

    குமரி மாவட்ட இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியம் இன்று பகல் நாகர்கோவில் கட்டபொம்மன் சந்திப்பில் இருந்து ஒழுகின சேரி செல்லும் ரோட்டில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் ஓட்டினார்.

    பாலசுப்பிரமணியம் முன் இருக்கையில் அமர்ந்து இருந்தார். தீயணைப்பு நிலையம் அருகே கார் சென்ற போது எதிரே வந்த ஒரு கார் எதிர்பாராதவிதமாக மோதியது. அந்த கார் திடீரென பஞ்சரானதால் தாறு மாறாக ஓடி விபத்தை ஏற்படுத்தி உள்ளது.பால சுப்பிரமணியம் வந்த கார் மீது பயங்கரமாக மோதியதோடு மட்டுமல்லாது பஞ்சரான அந்த கார் நேராக தீயணைப்பு நிலைய காம்பவுண்ட் சுவர் மீதும் மோதி நின்றது.

    இந்த சம்பவத்தில் 2 கார்களும் பலத்த சேதம டைந்தன. ஆனால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து பஞ்சரான கார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அங்கிருந்து மீட்கப்பட்டது. இதனையடுத்து அங்கு போக்குவரத்து சீரானது. இது தொடர்பாக போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜே.சி.பி. வாகனம் வரவழைக்கப்பட்டு வாகனம் மீட்பு
    • யானை கூட்டத்தை அடர்ந்த வனத்திற்குள் விரட்டினர்

    கோவை,

    கோவை பேரூர் அருகே உள்ள பச்சாபாளையம் கிராமத்துக்குள் நேற்று இரவு 6 காட்டு யானைகள் நுழைந்தது.

    இதனை பார்த்த கிராம மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனச்சரகர் சவுந்தர்யா தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் பச்சாப்பாளையம்- கரடிமடை இடையே ஊருக்குள் புகுந்திருந்த யானைகளை காட்டிற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக வனத்துறையி னரின் வாகனம் சிறிய பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. உடனடி யாக ஜே.சி.பி. வாகனம் வரவழைக்கப்பட்டு, பள்ளத்தில் விழுந்த வனத்துறை வாகனம் மீட்கப்பட்டது.

    தொடர்ந்து வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு, யானை கூட்டத்தை அடர்ந்த வனத்திற்குள் விரட்டி விட்டனர்.

    • நரிக்குடி- திருச்சுழி பகுதிகளில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலியானார்.
    • மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள பட்ட மங்கலம் பகுதியை சேர்ந்த வர் ராஜேந்திரன். இவரது மகன் மாயாண்டி (வயது 30). இவர்கள் தற்போது குடும்பத்துடன் மானா மதுரையில் வசித்து வருகிறார். இவர் மாயாண்டி பார்த்திபனூரில் உள்ள ஹோட்டலில் பணி புரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை வீரசோழன் அருகேயுள்ள பாதனக்குறிச்சி பகுதியில் நடைபெற்ற கோவில் திரு விழாவிற்கு மாயாண்டி தனது டூவீலரில் சென்றார். அப்போது மானாச்சாலை அருகேயுள்ள சீனிக்கார னேந்தல் பஸ் நிறுத்தம் அருகேயுள்ள வளைவில் வந்த போது அடையாளம் தெரியாத டிப்பர் லாரி மாயாண்டி மீது மோதியதில் கால் முறிந்து படுகாயமடைந் தார்.

    இதனையடுத்து விபத்தில் படுகாயமடைந்த மாயாண் டியை 108 ஆம்புலன்ஸ் மூலமாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும் இந்த விபத்து குறித்து நரிக்குடி போலீசார் விசாரித்து வரு கின்றனர்.

    இதேபோல் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள மாணிக்கனேந்தல் பகுதியை சேர்ந்தவர் ராசு என்பவரது மகன் பாண்டி முருகன் (வயது 24). இவர் காரியாபட்டி அருகேயுள்ள எஸ். தோப்பூர் பகுதியிலுள்ள தனது உறவினரின் துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு மீண்டும் தனது சொந்த ஊரான மாணிக்கனேந்தல் கிராமத்திற்கு திரும்பிய நிலையில் திருச்சுழி- காரியாபட்டி சாலையில் தனது டூவீலரில் வந்து கொண்டி ருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது புலிக்குறிச்சி அருகே மூலக்கரைப்பட்டி சந்திப்பு பகுதியில் வந்த போது அடையாளம் தெரி யாத வாகனம் மோதியதில் பாண்டிமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்து திருச்சுழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்த பாண்டிமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மொத்தம் 7 மணி நேரம் சார்ஜ் செய்தால், 100 கிலோ மீட்டர் வரை பயன்படுத்தலாம்.
    • பேட்டரி வாகனம், 450 கிலோ வரை குப்பைகளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    பேரூர்,

    பேரூர் செட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில்குப்பைகளை அள்ளுவதற்காக, சிறுதுளி மற்றும் பிரிக்கால் நிறுவனம், பண்ணாரி அம்மன் சுகர்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து தலா ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய பேட்டரி வாகனங்களை வழங்கி உள்ளது.

    மொத்தம் 7 மணி நேரம் சார்ஜ் செய்தால், 100 கிலோ மீட்டர் வரை பயன்படுத்த கூடிய இந்த பேட்டரி வாகனம், 450 கிலோ வரை குப்பைகளை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    குறைந்தது 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இந்த புதிய பேட்டரி வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி பேரூர் செட்டிபாளையம் ஊராட்சியில் நடந்தது.

    இதில், சிறுதுளி தலைவர் டாக்டர் பாலசுப்ரமணியம், சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, புதிய பேட்டரி வாகனத்தின் சாவியை, ஊராட்சித் தலைவர் என்.பி. சாந்திபிரசாத் மற்றும் அன்னதான சேவகர் வி. பிரசாத் ஆகியோரிடம் வழங்கினர்.

    அப்போது, ஊராட்சி செயலர் மனோகர், தூய்மை பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

    • பள்ளி செல்லும் நேரங்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வரக்கூடாது.
    • பிடாரி வடக்கு வீதியில் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி நகரில் கொள்ளிட முக்கூட்டு, பழைய பேருந்து நிலையம், பிடாரி வடக்கு வீதி ,கடைவீதி கரிக்குளம் முக்கூட்டு, காமராஜர் வீதி , உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் சீர்காழி நகரில் போக்குவரத்துக்கு இடையூராக நின்ற வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

    மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தக்கூடாது என அறிவுரை வழங்கினர். மேலும் பள்ளி செல்லும் நேரங்களில் காலை 8 மணி முதல் 10 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வரக்கூடாது. இதே போல் மாலையில் 4 மணி முதல் 6 மணி வரை கனரக வாகனங்கள் வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கடைவீதியில் ஒரு வழி பாதையாக இருப்பதை முழுமையாக வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வலியுறுத்த ப்பட்டுள்ளது. இதுபோல் பிடாரி வடக்கு வீதியில் ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணியவும் போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • யார் அவர்? போலீசார் விசாரணை
    • மேலும் மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கோவ ளம் செல்லும் ரோட்டில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முதியவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரிய வில்லை. இது பற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு விரைந்து சென்று பிணத்தை கைப் பற்றி விசாரணை நடத்தி னார்கள். அதன் பிறகு அவரது உடல் அங்கு பரி சோதனை செய்யப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    • பார்வதிபுரம் களியங்காட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பஸ்சை நிறுத்தி உள்ளார்.
    • இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல் :

    தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மில்ரோடு திருவள்ளுவர் காலனியை சேர்ந்தவர் முருகையா (வயது 69). இவர் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் திசையன்விளையில் இருந்து கல்லூரி பஸ்சில் மாணவர்களை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தார். பின்னர் அவர்களை இறக்கி விட்டு விட்டு இரவு பார்வதிபுரம் களியங்காட்டில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பஸ்சை நிறுத்தி உள்ளார்.

    பின்னர் இரவு சாப்பிடுவதற்காக களியங்காடு தேசிய நெடுஞ்சாலையில் முருகையா நடந்து சென்றபோது பின்னால் வந்த லாரி மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகையா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகள் மஞ்சுளா (45) கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் பக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.
    • இருப்பினும் சிகிச்சை பலன்அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    கன்னியாகுமரி :

    காரக்குறிச்சி அருகே உள்ள கல்பாடி காருப்பாறை பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 70).

    இவர் நேற்று இரவு கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரம் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டி ருந்தார். அவர் "திடீர்"என்று ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று இவர் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.

    பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன்அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கன்னியா குமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    ×