search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Advertising"

    • கீழக்கரை வணிக வளாகங்களில் தமிழில் பெயர்ப்பலகை வைக்குமாறு பா.ம.க. பிரசாரம் நடந்தது.
    • இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர், தலைவர் பங்கேற்றனர்.

    கீழக்கரை

    கொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் ராமதாசின் ஆணைக்கிணங்க கீழக்கரையில் நகரச்செயலாளர் லோகநாதன் தலைமையில் வணிக வளாகங்களில் அதன் உரிமையாளர்களை சந்தித்து கடையின் பெயர் பலகை மற்றும் விளம்பர பதாகைகளில் தமிழில் பெயர் வைக்கக்கோரி துண்டு பிரசுரங்கள் கொடுத்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் அக்கீம், தலைவர் சந்தனதாஸ் பங்கேற்றனர். மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா, கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, மாவட்ட பசுமை தாயகத்தின் செயலாளர் கர்ண மகாராஜன், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் துல்கர், மாவட்ட மாணவர் சங்க செயலாளர் சந்தோஷ், தலைவர் செரிப், மண்டபம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மின் கம்பங்களில் தனியார் நிறுவனங்களின் கேபிள் வயர்கள் இழுத்துச் செல்லப்படுகிறது.
    • கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர தட்டிகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மின் வாரிய பொறியாளர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் மின் கம்பங்களில் தனியார் நிறுவனங்களின் கேபிள் வயர்கள் இழுத்துச் செல்ல ப்படுகிறது. மேலும் பலர் விளம்பர தட்டிகளையும் மின்கம்பிகளில், கம்பங்களில் கட்டி வைத்துள்ளனர்.

    இதுபோல் அமைக்கப்பட்டுள்ள கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர தட்டிகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். இல்லையேல் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து மிக்க சிறு தானிய பயிர் ஊக்குவிப்பு பிரசார வாகனத்தை பரமத்தி வட்டார அட்மா தலைவர் தனராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பரமத்தி வட்டாரத்தில் 24 வருவாய் கிராமங்களில் இந்த பிரசார வாகனங்கள் செல்ல உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து மிக்க சிறு தானிய பயிர் ஊக்குவிப்பு பிரசார வாகனத்தை பரமத்தி வட்டார அட்மா தலைவர் தனராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார். பரமத்தி வட்டாரத்தில் 24 வருவாய் கிராமங்களில் இந்த பிரசார வாகனங்கள் செல்ல உள்ளது.

    மக்களிடம் சிறு தானியங்கள் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பிரசார வாகனங்கள் இயக்கப்படுகிறது. இந்நிகழ்வில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர், வட்டார தொழில்நுட்ப மேலாளர், உதவி தொழில்நுட்ப மேலாளர் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • இணையதள விளம்பரத்தை நம்பி பட்டதாரி பெண் ரூ.1.21 லட்சத்தை இழந்தார்.
    • இன்ஸ்டாகிராமில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி நடந்துள்ளது.

    ராமநாதபுரம்

    ராமேசுவரம் சல்லிமலை தெருவைச் சோ்ந்தவர் முனியசாமி. இவரது மகள் சரண்யா (வயது27). இவா் பி.சி.ஏ. பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறாா்.

    இந்நிலையில் இவரது இன்ஸ்டாகிராமிற்கு கடந்த ஜூலை 26-ந் தேதி, இணையதளம் மூலம் பகுதி நேர வேலையில் சேர்ந்தால் வீட்டில் இருந்தபடியே ரூ.50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்ற விளம்பரம் வந்துள்ளது. இதை படித்தவர் அதில் இருந்த லிங்கை கிளிக்கை செய்த போது சரண்யாவின் செல்ேபானுக்கு ஏஞ்சலா என்ற பெயரில் குறுஞ்செய்தி வந்தது.

    அதில் வேலைக்கு சேர நுழைவுக்கட்டணமாக பணம் செலுத்த வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நம்பிய சரண்யா குறிப்பிட்ட வங்கி கணக்கில் பல்வேறு தவணைகளில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 904 வரை செலுத்தியுள்ளாா்.

    அதன் பிறகு சரண்யாவின் இணையதள கணக்கில் ரூ.1.86 லட்சம் இருப்பு இருப்பதாக காட்டியுள்ளது. இதனை நம்பி அந்தப் பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை.

    வேலைக்கு சேர நினைப்பவர்களை ஏமாற்றும் நோக்கத்தில் அந்த இருப்பு கணக்கை மோசடி நபர்கள் காட்டியுள்ளனர். இதனால் தான் ஏமாற்றதப்பட்டதை உணர்ந்த சரண்யா ராமநாதபுரம் சைபா் கிரைம் போலீசில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பொன்தேவி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

    ×