மின் கம்பங்களில் கட்டியுள்ள விளம்பர தட்டிகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை

மின் கம்பங்களில் தனியார் நிறுவனங்களின் கேபிள் வயர்கள் இழுத்துச் செல்லப்படுகிறது.கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர தட்டிகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்.
மின் கம்பங்களில் கட்டியுள்ள விளம்பர தட்டிகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை
Published on

திருவாரூர்:

திருவாரூர் மின் வாரிய பொறியாளர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் மின் கம்பங்களில் தனியார் நிறுவனங்களின் கேபிள் வயர்கள் இழுத்துச் செல்ல ப்படுகிறது. மேலும் பலர் விளம்பர தட்டிகளையும் மின்கம்பிகளில், கம்பங்களில் கட்டி வைத்துள்ளனர்.

இதுபோல் அமைக்கப்பட்டுள்ள கேபிள் வயர்கள் மற்றும் விளம்பர தட்டிகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். இல்லையேல் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com