search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "old man died"

    • இன்று காலை மேட்டங்காட்டு வலசில் உள்ள பால் சொசைட்டிக்கு பால் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
    • இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த முத்தூர் அருகே உள்ள மேட்டாங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 90). இவர் இன்று காலை மேட்டங்காட்டு வலசில் உள்ள பால் சொசைட்டிக்கு பால் கொண்டு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன், துரைசாமி மீது மோதியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு துரைசாமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது மதுரை நோக்கி வந்த லாரி பயங்கரமாக மோதியது.
    • தூக்கிவீசப்பட்ட முதியவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

    சின்னமனூர்:

    சின்னமனூர் அருகே கீழபூலானந்தபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார்(70). விவசாயி. இவர் சாலையை கடக்க முயன்றபோது கம்பத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த திராட்சை லாரி பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கிவீசப்பட்ட ஜெயக்குமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் லாரி டிரைவர் நாராயணதேவன்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவரை கைது செய்து மினிலாரியையும் பறிமுதல் செய்தனர்.

    • காயமடைந்தவரை சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • வேதாரண்யம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த செம்போடை தெற்கு பகுதியை சேர்ந்தவர் ராமையன் (வயது 82).

    இவர் தனது மகன் சுப்பிரமணி யனுடன் (53) மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி தெற்கு யாதவபுரம் பகுதிக்கு சென்ற போது மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்திருந்த ராமையன் மயக்கம் ஏற்பட்டு தவறி கீழே விழுந்து விட்டார்.

    இதில் காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி ராமையன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • துப்பாக்கி நடந்த இடத்தை தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன்உமேஷ் டோங்கரே, உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
    • ஏ.எஸ்.பி. விவேகானந்தன் உயிரிழந்த ஈஸ்வரன் குடும்பத்தினரிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்திற்கு ட்பட்ட லோயர்கேம்ப், கப்பாமடை பீட்டு, வண்ணாத்திப்பாறை, காப்புக்காடு, முடாரிசரகம் ஆகிய பகுதிகளில் ஒருசிலர் அனுமதியின்றி மின் வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு புகார்கள் வந்தன.

    இதனையடுத்து வனவர் திருமுருகன் தலைமையில் வனக்காப்பாளர் உள்ளிட்ட வனத்துறையினர் அப்பகுதியில் கடந்த மாதம் 29ந் தேதி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வனக்காவலரை தாக்க முயன்றதாக கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த ஈஸ்வரன் (52) என்பவர் மீது துப்பாக்கியால் சுட்டதில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் சாலை மறியல், போராட்டங்கள் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட எஸ்.பி. பிரவீன்உமேஷ் டோங்கரே, உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமநாதன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஈஸ்வரன் உடலில் எந்த இடத்தில் குண்டு பாய்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தியதுடன் பிரேத பரிசோதனை நடத்தவும் ஒத்துழைப்பு அளிக்க உறவினர்களிடம் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். இந்நிலையில் ஏ.எஸ்.பி. விவேகானந்தன் உயிரிழந்த ஈஸ்வரன் குடும்பத்தினரிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.

    மேலும் கூடலூர் போலீஸ் நிலையத்திலும் ஈஸ்வரன் இறப்பு குறித்து பதியப்பட்ட குற்றப்பத்திரிகை நகலை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து ஈஸ்வரன் இறந்து கிடந்த இடம் மற்றும் சம்மந்தப்பட்ட வனத்துறையினரிடமும் விசாரணை நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

    • இவர் நேற்று தனது விவசாய பூமிக்கு பாசனத்திற்காக கீழ்பவானி பாசன வாய்க்கால் மதகை பாசனத்திற்காக திறந்து விட்ட போது, தவறி வாய்க்காலில் விழுந்து விட்டதாக தெரிகிறது.
    • வெள்ளகோவில் அடுத்த முத்தூர் பக்கம் உள்ள வாலிபனங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60), விவசாயி.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அடுத்த முத்தூர் பக்கம் உள்ள வாலிபனங்காடு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 60), விவசாயி. இவர் நேற்று தனது விவசாய பூமிக்கு பாசனத்திற்காக கீழ்பவானி பாசன வாய்க்கால் மதகை பாசனத்திற்காக திறந்து விட்ட போது, தவறி வாய்க்காலில் விழுந்து விட்டதாக தெரிகிறது. இதனால் தலையில் பலத்த அடிபட்டு வாய்க்காலில் இருந்து மேலே எழுந்து வர முடியாமல் நீரில் மூழ்கி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் படுகாயமடைந்தார்.
    • அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    தேனி, அக்.19-

    தேனி மாவட்டம் நாகலா புரம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டி(65). இவரது மனைவி இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லாததால் உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயமடைந்தார். போடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிக்கண்ணா அரசு கல்லூரி அருகே 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீஸசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்

    திருப்பூர்:

    திருப்பூர் -வஞ்சிபாளையம் இடையே சிக்கண்ணா அரசு கல்லூரி அருகே 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடப்பதாக திருப்பூர் ரெயில்வே போலீஸசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லோகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்?எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • க.விலக்கு பிரிவு பகுதியில் வந்தபோது சரக்குவாகனம் பைக் மீது மோதியதில் முதியவர் படுகாயமடைந்தார்.
    • ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியிலேயே முதியவர் உயிரிழந்தார்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்தவர் சிவாஜி(62). தற்போது சுருளிபட்டியில் வசித்து வந்தார். இவர் தனது சகோதரர்உடன் 2 மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    சுருளிபட்டி- சுருளிதீர்த்தம் சாலையில் உள்ள க.விலக்கு பிரிவு பகுதியில் வந்தபோது சரக்குவாகனம் அதிவேகமாக வந்து பைக் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த சிவாஜியை அக்கம்பக்கத்தி னர் மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே சிவாஜி இறந்து விட்டதாக பரிசோதனை செய்த டாக்ட ர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து ராயப்ப ன்பட்டி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உறவினர்களை பார்க்க செல்வதாக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பழைய கரூர் சாலை செல்லமந்தாடி, ஜி.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டித்துரை (வயது70). இவரது மனைவி வாசுகி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 1 மகளும் உள்ளனர். பாண்டித்துரைக்கு காது சரிவர கேட்காது.

    இந்நிலையில் உறவினர்களை பார்க்க செல்வதாக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை தேடிப்பார்த்தபோது முள்ளிப்பாடி அருகே ரயில் மோதி இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாண்டித்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த காற்று வீசியதால் தூக்கிவீசப்பட்ட தகரத்தை எடுக்க முயன்றபோது மின்வயரில் எதிர்பாராமல் கைபட்டு தூக்கிவீசப்பட்டார்.
    • பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

    தேனி:

    தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் அழகர்சாமி(65). சம்பவத்தன்று அப்பகுதியில் பலத்த காற்று வீசியது. இதில் தூக்கிவீசப்பட்ட தகரத்தை எடுக்க முயன்றபோது மின்வயரில் எதிர்பாராமல் கைபட்டு தூக்கிவீசப்பட்டார்.

    மின்சாரம் தாக்கி உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்ட அவரை க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அழகர்சாமி உயிரிழந்தார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் முதியவர் மீது மோதிவிட்டு தப்பி சென்று விட்டார்.
    • போலீசார் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காங்கேயம்:

    காங்கேயம் அருகேயுள்ள நத்தக்காடையூர் கோவை - காங்கேயம் ரோட்டில் சம்பவத்தன்று இரவு அடையாளம் தெரியாத 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் முதியவர் மீது மோதிவிட்டு தப்பி சென்று விட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற நபரை பிடிக்க அந்த பகுதியில் உள்ள சி.சி.டிவி. கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    • மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
    • சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் மரணம் அடைந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கொரோனா 2-வது அலையில் ஈரோடு மாவட்ட த்தில் பாதிப்பு அதிகமாக இருந்தது. ஆயிரக்க ணக்கா னோர் பாதிக்கப்பட்டனர். ஆக்சிஜன் கட்டுப்பாடு ஏற்பட்டது.

    மாவட்டம் முழுவதும் ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. முதிய வர்கள் கொரோனா பாதிப்பால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்தனர்.

    இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டது. குறிப்பாக கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகப்படுத்த ப்பட்டது.

    முககவசம் அணிந்து செல்லுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகியவை கடுமையாக கடைபிடிக்க ப்பட்டது.

    இது போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரண மாக மாவட்டத்தில் கொரோ னா தாக்கம் குறைய தொடங்கியது. கடைசியாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 734 ஆக உயர்ந்தது. அதன் பிறகு பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிப்பு ஏற்பட்டாலும் உயிர் இழப்பு ஏற்படாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கியுள்ளன.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது நாளொன்றுக்கு சராசரியாக 8 பேர் முதல் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    இதனால் ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் இதுவரை கொரோ னாவால் பாதித்த வர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 824 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்த வர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 30 ஆக உயர்ந்துள்ளது.

    மாவட்ட முழுவதும் கொரோனா பாதிப்புடன் 59 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கொரோ னா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 735 ஆக உயர்ந்துள்ளது.

    89 வயதான அந்த முதியவர் கடந்த 20-ந் தேதி சளி, காய்ச்சல், மூச்சு திணறல் பாதிப்புடன் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக வந்தார்.

    அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 21-ந் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது.

    இதனையடுத்து அந்த முதியவர் கொரோனா தனிவார்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலை யில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

    இறந்த முதியவருக்கு கொரோனா பாதிப்பு டன் சில இணை நோய்களும் இருந்துள்ளன.

    ×