search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Papakudi"

    • கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
    • இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக இந்திய கம்யூனிஸ் கட்சியினர் கைவிட்டனர்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.

    சுடுகாட்டு சாலையை உரியவர்களிடம் பேசி இடத்தை பெற்று அளந்து கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து வலங்கைமானில் மண்டல வட்டாட்சியர் ஆனந்தன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

    இதில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை தற்காலிகமாக இந்திய கம்யூனிஸ் கட்சியினர் கைவிட்டனர்.

    இந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் முதல் நிலைக் காவலர் கல்யாணசுந்தரம், ஆலங்குடி ரெவின்யு இன்ஸ்பெக்டர் பிரபாகரன், கிராம நிர்வாக அலுவலர் நவீன், பாலசுப்ரமணியம் தாலுக்கா ஆபீஸ் அலுவலர், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாக குழு ராஜா , ரங்கராஜன், மாவட்ட தலைவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலங்கைமான் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 17-ந்தேதி குலதெய்வ கோவில் செல்வதற்காக பேட்டையில் இருந்து கடையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
    • இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரமசிவம் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

    முக்கூடல்:

    நெல்லையை அடுத்த பேட்டை காந்திமதி நகரை சேர்ந்த பரமசிவம் (வயது 81) என்பவருடைய மகன் சுப்பிரமணியன் (40).

    கார் கவிழ்நது விபத்து

    இவர் தனது மனைவி பேச்சியம்மாள் (36), மகள் பவித்ரா (13), மகன் மாதேஸ்வரன் (11) மற்றும் தந்தையுடன் கடந்த 17-ந்தேதி குலதெய்வ கோவில் செல்வதற்காக பேட்டையில் இருந்து கடையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

    காரை பரமசிவம் ஓட்டினார். பாப்பாக்குடி அருகே செங்குளம்- இடைகால் மெயின் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஓடைப்பாலம் அருகில் சென்ற போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

    இதனால் சாலை யோரத்தில் உள்ள பனை மரத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்ததும் மேல் சிகிச்சைக்காக நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    பிறந்தநாளில் பலி

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரமசிவம் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பரமசிவனுக்கு இன்று பிறந்த நாள் ஆகும். பிறந்த நாளன்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • பாப்பாக்குடி மின்வாரியத்தில் அலுமினிய மின் கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது
    • அலுமினிய கம்பிகளை பாப்பாக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த சுதாகர், குமாரசாமிபுரம் மாரியப்பன், பனையங்குறிச்சியைச் சேர்ந்த முருகன், பழைய இரும்பு வியாபாரி கணேசன் ஆகியோர் திருடியது தெரியவந்தது.

    முக்கூடல்:

    பாப்பாக்குடி மின்வாரியத்தில் அலுமினிய மின் கம்பிகள் வைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த ரூ. 80 ஆயிரம் மதிப்புள்ள கம்பிகள் சம்பவத்தன்று திருட்டு போனது.

    இது தொடர்பாக உதவி மின் பொறியாளர் பரிமளாதேவி பாப்பாக்குடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில் அலுமினிய கம்பிகளை பாப்பாக்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த சுதாகர், குமாரசாமிபுரம் மாரியப்பன், பனையங்குறிச்சியைச் சேர்ந்த முருகன், பழைய இரும்பு வியாபாரி கணேசன் ஆகியோர் திருடியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

    • பாப்பாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குமாரசாமியாபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • கால்நடை சுகாதார உதவி இயக்குனர் டாக்டர் தங்கராஜ் முகாமை பார்வையிட்டார்.

    முக்கூடல்:

    பாப்பாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குமாரசாமியாபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமை பாப்பாக்குடி பஞ்சாயத்து தலைவர் ஆனைக்குட்டி பாண்டியன் தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடைகள், கோழி ஆகியவற்றிற்கு சிறப்பு மருத்துவம் அளிக்கப்பட்டது. சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகளை மருத்துவத்திற்காக மக்கள் கொண்டு வந்தனர்.

    கால்நடை சுகாதார உதவி இயக்குனர் டாக்டர் தங்கராஜ் முகாமை பார்வையிட்டார். முக்கூடல் கால்நடை உதவி மருத்துவர் ஹேமாசாயி, அத்தாள நல்லூர் கால்நடை உதவி மருத்துவர் முயல்வி ஆகியோர் கால்நடைகளுக்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர். முகாம் ஏற்பாடுகளை உதவியாளர் தர்மலிங்கம் மற்றும் பஞ்சாயத்து கவுன்சிலர் பார்த்திபன் ஆகியோர் செய்திருந்தனர். 

    ×