பாப்பாக்குடி அருகே பனை மரத்தில் கார் மோதிய விபத்தில் முதியவர் பலி - பிறந்த நாளில் இறந்த சோகம்

கடந்த 17-ந்தேதி குலதெய்வ கோவில் செல்வதற்காக பேட்டையில் இருந்து கடையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரமசிவம் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
பாப்பாக்குடி அருகே பனை மரத்தில் கார் மோதிய விபத்தில் முதியவர் பலி - பிறந்த நாளில் இறந்த சோகம்
Published on

முக்கூடல்:

நெல்லையை அடுத்த பேட்டை காந்திமதி நகரை சேர்ந்த பரமசிவம் (வயது 81) என்பவருடைய மகன் சுப்பிரமணியன் (40).

கார் கவிழ்நது விபத்து

இவர் தனது மனைவி பேச்சியம்மாள் (36), மகள் பவித்ரா (13), மகன் மாதேஸ்வரன் (11) மற்றும் தந்தையுடன் கடந்த 17-ந்தேதி குலதெய்வ கோவில் செல்வதற்காக பேட்டையில் இருந்து கடையம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

காரை பரமசிவம் ஓட்டினார். பாப்பாக்குடி அருகே செங்குளம்- இடைகால் மெயின் ரோட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஓடைப்பாலம் அருகில் சென்ற போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் சாலை யோரத்தில் உள்ள பனை மரத்தில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்ததும் மேல் சிகிச்சைக்காக நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பிறந்தநாளில் பலி

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரமசிவம் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பரமசிவனுக்கு இன்று பிறந்த நாள் ஆகும். பிறந்த நாளன்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தது அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com