என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parking space"

    • மறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை சென்னை மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம் கிடையாது.
    • பொதுமக்கள் வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

    பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தத்திற்கான ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், மறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை சென்னை மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் கட்டணம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, பெருநகர சென்னை மாநகராட்சியின் இணை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூலுக்கான ஒப்பம் இன்றுடன் (20.07.2025) முடிவடைவதையொட்டி வாகன வசூலுக்கான மறு ஒப்பந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரை பொதுமக்கள் வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.

    பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூல் பணியானது தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தற்போது மேற்கண்ட நிறுவனத்துடனான ஒப்பந்தம் இன்றுடன் (20.07.2025) முடிவடைகிறது.

    இதனையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தத்திற்கான ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் சார்பில் மறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி நிறுத்திக் கொள்ளலாம்.

    இது தொடர்பான புகார்களுக்கு, பெருநகர சென்னை மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது."

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    • வளாகத்தைச் சுற்றி சிமெண்ட் சாலைகள் ரூ . 1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
    • ஐகோர்ட்டு நீதிபதிகள் சுந்தர்,ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைந்துள்ளது.இந்த வளா கத்தில் வழக்கறிஞர்கள், நீதிமன்றத்திற்கு வழக்கு சம்பந்தமாக வரும் வாதிகள் பிரதிவாதிகள் மற்றும்நீதிமன்ற பணியாளர்கள் தங்களின் நான்கு சக்கர வாகனம் மற்றும் இரு சக்கரம் வாகனம் நிறுத்த வசதி மற்றும் வளாகத்தைச் சுற்றி சிமெண்ட் சாலைகள் ரூ . 1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.வளாகத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை செடிகள் நடும் விழா இன்று விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது இவ் விழாவிற்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சுந்தர்,ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூரணிம்மா வரவேற்றார் சிறப்பு விருந்தினராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி தண்ட பாணி கலந்துகொண்டு நான்கு சக்கர வாகனம் மற்றும் இரண்டு சக்கர வாகன நிறுத்த வசதிகளை திறந்து வைத்து . கார் நிறுத்துவதற்கானமுதல் டோக்கனை விழுப்புரம் மாவட்ட அரசு வக்கீல் சுப்பிரமணியிடம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பயன் தரும் மரக்கன்றுகளையும் மூலிகை செடிகளையும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தண்டபாணி,சுந்தர்,ஆனந்த் வெங்கடேஷ் நட்டனர்.

    விழாவில் விழுப்புரம் மாவட்ட கிழமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி,விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி,விழுப்புரம் எஸ்.பி.சசாங் சாய், அரசு வக்கீல்கள் நாகராஜன் எம். எஸ். நட ராஜன்விழுப்புரத்தில் உள்ள அனைத்து வக்கீல்கள் சங்கங்களின் நிர்வாகிகள் தயானந்தம், காளிதாஸ்,சண்முகம்,பத்மநாபன்,மூத்த வழக்கறிஞர்கள் இள ங்கோவன், ராஜாராமன், ராதாகிருஷ்ணன், மற்றும் நீதிமன்ற அலுவலக அலுவலர்கள்,தலைமை எழுத்துகள் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    • வாகன நிறுத்தத்திற்கான மாதாந்திர பாஸ்கள் பிப்ரவரி 1ம் தேதி முதல் நிறுத்தம் செய்ய முடிவு.
    • மெட்ரோ ரெயில் நிலையங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாகனங்களுக்கு அனுமதி.

    சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகன நிறுத்தத்திற்கான மாதாந்திர பாஸ்கள் பிப்ரவரி 1ம் தேதி முதல் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாகனங்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் 01.02.2025 முதல் நிறுத்தம்

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடங்களுக்கான தேவை அதிகரித்து வருவதைக்கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 01.02.2025 முதல் வாகனம் நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது.

    அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாகனம் நிறுத்தும் இடங்கள் இனி பயன்படுத்தப்படும். பயணிகள் தங்களது நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்த இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளவும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு தங்கள் ஆதரவைத் தொடரவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    ஜனவரி 2025-ல் வாகனம் நிறுத்துவதற்காக ஏற்கனவே வாங்கப்பட்ட மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் அவற்றின் செல்லுபடியாகும் காலம் முடியும் வரை அனுமதிக்கப்படும்.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயண அட்டை ( Travel Card) விற்பனை மற்றும் ரீசார்ஜ் செய்யும் வசதி முதற்கட்டனாக 11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் நிறுத்தம்.

    மெட்ரோ ரெயிலில் பயணிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயண அட்டையுடன் கூடுதலாக 14.04.2023 முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டையை (சிங்கார சென்னை அட்டை) சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    01.04.2025 முதல் SBI வழங்கிய தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (சிங்கார சென்னை அட்டை) முழுமையாக மாற சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, 41 மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் படிப்படியாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது.

    முதல் கட்டமாக, புதிய வண்ணாரப்பேட்டை, காலடிப்பேட்டை, திருவொற்றியூர் தேரடி, திருவொற்றியூர், நந்தனம், சின்னமலை, OTA - நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம், எழும்பூர், கீழ்ப்பாக்கம் மற்றும் செனாய்நகர் ஆகிய 11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டை விற்பனை / ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது.

    அதன்படி, மேற்கூறிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயண அட்டையை ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டுள்ள பயணிகள், தங்களது பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கு அல்லது மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு பயன்படுத்திவிட்டு, மேலும் பயன்பாட்டிற்காக தேசிய பொது போக்குவரத்து அட்டையை (சிங்கார சென்னைஅட்டை) பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×