search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் முதல் நாளில் 317 வழக்குகள்  வாகன ஓட்டிகளுக்கு ரூ. 3 ½ லட்சம் அபராதம் விதிப்பு  மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர்களும் சிக்கினர்
    X

    குமரியில் முதல் நாளில் 317 வழக்குகள் வாகன ஓட்டிகளுக்கு ரூ. 3 ½ லட்சம் அபராதம் விதிப்பு மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர்களும் சிக்கினர்

    • மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 317 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர்.
    • நேற்று ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக விதிக்கப்பட்ட அபராத தொகைரூ. 3 லட்சத்து 17 ஆயிரம் ஆகும்.
    • மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 197 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.

    நாகர்கோவில், அக்.27-

    புதிய சட்டத்திருத்தத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று மாவட்டம் முழுவதும் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் அருண் தலைமையிலான போலீசார் செட்டிகுளம் கலெக்டர் அலுவலக சந்திப்பு, கோட்டார், வடசேரி பகுதிகளில் அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள்.

    அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். நாகர்கோவில் நகரில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் வந்ததாக 64 பேருக்கு போக்குவரத்து பிரிவு போலீசார் அபராதம் விதித்துள்ளனர் .இதன் மூலமாகரூ. 64 ஆயிரம் வசூல் ஆகியுள்ளது. இதே போல் கோட்டார், வடசேரி போலீசாரும் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப் டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் பலரும் சிக்கினார்கள் . பெண்களும் சிக்கி தவித்தனர்.

    மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 317 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்தவர்களுக்கும் போலீசார் அபராதம் விதித்தனர். நேற்று ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக விதிக்கப்பட்ட அபராத தொகைரூ. 3 லட்சத்து 17 ஆயிரம் ஆகும்.

    மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 197 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் இன்று காலையிலும் ஹெல்மெட் சோதனை நடந்தது. ‌ஹெல்மெட் அணியாமல் பின்னால் இருந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

    Next Story
    ×