search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Offender"

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
    • சம்பவம் நடந்த 10 மணி நேரத்திற்குள் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த சோழபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விளந்தகண்டம் பகுதியை சேர்ந்தவர் சொந்த வேலையின் காரணமாக வெளியூர் செல்ல திட்டமிட்டார். மேலும், வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு செல்வதால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சில தினங்களுக்கு முன்பு தகவலும் தெரிவித்திருந்தார்.

    அதன்படி, ரோந்து பணி செல்லும் போலீசார் தினமும் காலை, இரவு நேரங்களில் அவரது வீட்டை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை 4 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அருகில் இருந்த மற்றொரு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

    இதுகுறித்து சோழபுரம் போலீசுக்கு தகவல் அளித்ததன் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சற்குணன் தலைமையில், தலைமை காவலர்கள் ஜம்புலிங்கம், சரவணன் மற்றும் காவலர் காளீஸ்வரன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும், அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவை கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் திருட்டில் ஈடுபட்டது அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஓகை குமார் என்பது தெரியவந்தது.

    மேலும், இவர் கும்பகோணம் உள்பட பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு, பல்வேறு போலீஸ் நிலையங்களில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த குற்றவாளி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.திருட்டு சம்பவம் நடந்த 10 மணி நேரத்திற்குள் குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதுகுறித்து திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில்:-பொதுமக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றால் அது தொடர்பான தகவல்களை 81222 51764 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பலாம் என்றார்.

    • மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த அம்பேத்கர் நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகன் அருண்ராஜ் (வயது 24). இவர் நேற்று இரவு சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்த மர்மநபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டியும், கம்பியால் தாக்கியும் தப்பித்து சென்றுள்ளனர்.

    தலை மற்றும் உடலில் பலத்த வெட்டு காயங்களுடன் கீழே சரிந்த அருள்ராஜை அருகிலிருந்தவர்கள் மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    இது குறித்து சீர்காழி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவத்திற்கான காரணம் தெரிய வில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இளைஞரை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • கொலை முயற்சியில் தொடர்புடையவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிகப்பட்டார்.
    • மேற்கண்ட தகவலை தெற்குவாசல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துபிரேம்சந்த் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா, கோவிலாங்குளம் மு.வில்லேனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 34). இவர் மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 2014-ம் ஆண்டு ஊழியர்களை கட்டி போட்டு நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பும் போது போக்குவரத்து காவலர் ஜீவானந்தத்தை தாக்கி கொல்ல முயன்றார்.

    இந்த வழக்கில் முத்தராமலிங்கம் கைதாகி ஜாமீனில் வெளியே சென்றவர் கடந்த 8 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் கோர்ட்டில் ஆஜராகாததால் முத்துராமலிங்கத்தை தேடப்படும் குற்றவாளியாக மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நீதிபதி அறிவித்துள்ளார். இந்த வழக்கில் வாய்தாவிற்கு வருகிற 21-ந் தேதி முத்துராமலிங்கம் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    மேற்கண்ட தகவலை தெற்குவாசல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துபிரேம்சந்த் தெரிவித்துள்ளார்.

    • தனிப்படையினர் பல்வேறு இடங்களில் குற்றவாளியை தேடி வந்தனர்.
    • 17 பவுன் நகைகள், இருசக்கர வாகனம் பறிமுதல்.

    பட்டீஸ்வரம்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் தொடர்ந்து திருட்டு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின் படி, கும்பகோணம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு (பொ) ராஜ்குமார் மேற்பார்வையில் கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையிலான தனிப்படை காவலர்கள் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர்கள் ராஜா, செல்வகுமார், தலைமை காவலர்கள் பாலசுப்பிரமணியம், பார்த்திபன்நாதன், நாடிமுத்து , செந்தில், ஜனார்த்தனன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் பல்வேறு இடங்களில் குற்றவாளியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா அரசப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் கண்ணன் என்பவரை பிடித்து விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார்.

    இதையடுத்து விக்னேஷ் கண்ணனை கைது செய்து 17 பவுன் நகைகளையும், ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×