கொலை முயற்சியில் தொடர்புடையவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

கொலை முயற்சியில் தொடர்புடையவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிகப்பட்டார். மேற்கண்ட தகவலை தெற்குவாசல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துபிரேம்சந்த் தெரிவித்துள்ளார்.
கொலை முயற்சியில் தொடர்புடையவர்  தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
Published on

மதுரை

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா, கோவிலாங்குளம் மு.வில்லேனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 34). இவர் மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் 2014-ம் ஆண்டு ஊழியர்களை கட்டி போட்டு நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பும் போது போக்குவரத்து காவலர் ஜீவானந்தத்தை தாக்கி கொல்ல முயன்றார்.

இந்த வழக்கில் முத்தராமலிங்கம் கைதாகி ஜாமீனில் வெளியே சென்றவர் கடந்த 8 ஆண்டுகளாக வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் கோர்ட்டில் ஆஜராகாததால் முத்துராமலிங்கத்தை தேடப்படும் குற்றவாளியாக மதுரை மாவட்ட குற்றவியல் நீதித்துறை நீதிபதி அறிவித்துள்ளார். இந்த வழக்கில் வாய்தாவிற்கு வருகிற 21-ந் தேதி முத்துராமலிங்கம் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேற்கண்ட தகவலை தெற்குவாசல் காவல் நிலைய ஆய்வாளர் முத்துபிரேம்சந்த் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com