search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூட்டிய வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது
    X

    கைது செய்யப்பட்ட ஓகை குமார்.

    பூட்டிய வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது

    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
    • சம்பவம் நடந்த 10 மணி நேரத்திற்குள் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த சோழபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விளந்தகண்டம் பகுதியை சேர்ந்தவர் சொந்த வேலையின் காரணமாக வெளியூர் செல்ல திட்டமிட்டார். மேலும், வீட்டை பூட்டிவிட்டு ஊருக்கு செல்வதால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் சில தினங்களுக்கு முன்பு தகவலும் தெரிவித்திருந்தார்.

    அதன்படி, ரோந்து பணி செல்லும் போலீசார் தினமும் காலை, இரவு நேரங்களில் அவரது வீட்டை கண்காணித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை 4 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அருகில் இருந்த மற்றொரு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

    இதுகுறித்து சோழபுரம் போலீசுக்கு தகவல் அளித்ததன் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சற்குணன் தலைமையில், தலைமை காவலர்கள் ஜம்புலிங்கம், சரவணன் மற்றும் காவலர் காளீஸ்வரன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும், அங்குள்ள சி.சி.டி.வி. கேமிராவை கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் திருட்டில் ஈடுபட்டது அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த ஓகை குமார் என்பது தெரியவந்தது.

    மேலும், இவர் கும்பகோணம் உள்பட பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு, பல்வேறு போலீஸ் நிலையங்களில் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த குற்றவாளி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.திருட்டு சம்பவம் நடந்த 10 மணி நேரத்திற்குள் குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதுகுறித்து திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில்:-பொதுமக்கள் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றால் அது தொடர்பான தகவல்களை 81222 51764 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பலாம் என்றார்.

    Next Story
    ×