என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீசாருக்கு வாகனத்தின் வேகத்தை அளவீடும் கருவியை வழங்கினார்.
போலீசாருக்கு வாகனத்தின் வேகத்தை அளவீடும் கருவி
- அதிவேகமாக செல்வதால் அதிக அளவில் விபத்து ஏற்படுகின்றது.
- வாகனங்களின் பதிவு எண்களை படம் பிடித்து அவர்களுக்கு அபராத தொகை நகல் அவர்களின் செல்போனுக்கு அனுப்பப்படுகிறது.
நாகப்பட்டினம்:
சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வதால் அதிக அளவில் விபத்து ஏற்படுகின்றது.
இதனை தடுக்கும் பொருட்டு நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களுக்கு ரூபாய் 7.05 லட்சம் மதிப்பிலான (நகரும் பொருட்களின் வேகத்தை அளவிட பயன்படும் கருவி) யை வழங்கினார்.
இதன் மூலம் அதிவேகமாக செல்லும் வாகனங்களின் பதிவு எண்களை படம் பிடித்து அவர்களுக்கு அபராத தொகை நகல் அவர்களின் செல்போனுக்கு அனுப்பப்படுகிறது.
இதன் மூலம் விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
Next Story






