search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "High Speed"

    • அதிவேகமாக செல்வதால் அதிக அளவில் விபத்து ஏற்படுகின்றது.
    • வாகனங்களின் பதிவு எண்களை படம் பிடித்து அவர்களுக்கு அபராத தொகை நகல் அவர்களின் செல்போனுக்கு அனுப்பப்படுகிறது.

    நாகப்பட்டினம்:

    சாலைகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அதிவேகமாக செல்வதால் அதிக அளவில் விபத்து ஏற்படுகின்றது.

    இதனை தடுக்கும் பொருட்டு நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நெடுஞ்சாலை ரோந்து வாகனங்களுக்கு ரூபாய் 7.05 லட்சம் மதிப்பிலான (நகரும் பொருட்களின் வேகத்தை அளவிட பயன்படும் கருவி) யை வழங்கினார்.

    இதன் மூலம் அதிவேகமாக செல்லும் வாகனங்களின் பதிவு எண்களை படம் பிடித்து அவர்களுக்கு அபராத தொகை நகல் அவர்களின் செல்போனுக்கு அனுப்பப்படுகிறது.

    இதன் மூலம் விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

    • விழுப்புரத்தில் அதிரடி: அதி வேகமாக சென்ற கல்லூரி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • 5 தனியார் பஸ்களை போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டத்தில் அதி வேகமாக செல்லும் பஸ்கள் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார். அதன்படி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்த் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளார்.

    இதனை தொடர்ந்து இதன் விளைவாக அதி வேகமாகவும், ஏர்ஹாரன் அடித்து சென்ற 5 தனியார் பஸ்களை போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் 5 பஸ்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. இதுவரை 3 நாட்களில் 25 பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    ×