என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாராய கடத்தி கைதான வீரமணி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மூட்டைகள்.
சாராயம் கடத்தி வந்த வாலிபர் கைது
- கூடலூர் கிராமம் வழியாக சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்.
- 13 மூட்டைகள் கொண்ட சாராய பாக்கெட்டுகள் மற்றும் வாகனத்தையும் போலீசார் பறிமுதல்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அருகே செம்பனார்கோயில் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கூடலூர் கிராமம் வழியாக சாராயம் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் படி இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான காவலர்கள் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் சாக்கில் மறைத்து வைத்து கடத்தி வந்த சாராய 110 லிட்டர், 13 மூட்டைகள் கொண்ட சாராய பாக்கெட்டுகளையும் வாகனத்தையும்பரிமுதல் செய்து விசாரனை செய்தனர்.
காரைக்கால் நெடுங்காடு தெருமாங்வி லங்கை சிவன்கோயில் தெருவை சேர்ந்த பக்கிரிசாமி மகன் வீரமணி (வயது 26) என்பது தெரியவந்தது.
அவரை சாராய கடத்தல் வழக்கில் கைது செய்து பொறையார்கிளை சிறையில் அடைத்தனர்.
Next Story