search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Viduthalai chiruthaigal katchi"

    • பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய இளைஞர்களின் வாக்கு வங்கியை உருவாக்குவதற்கு வாய்ப்பில்லை.
    • தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க.வினர் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவளிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

    சென்னை:

    தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.

    இதன்படி சிதம்பரத்தில் 6-வது முறையாக அக்கட்சியின் தலைவரான தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்ட தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிதம்பரம், விழுப்புரம் 2 தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறோம். இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்று இந்த முறை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவோம். தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழகம்-புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

    சிதம்பரம் தொகுதியில் 6-வது முறையாக போட்டியிடுகிறேன். இந்த முறையும் பாராளுமன்றத்திற்கு மக்கள் அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கையோடு களம் காண்கிறேன்.

    அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக ராகுல் காந்தி மேற்கொண்ட 2 கட்ட இந்திய ஒற்றுமை பயணம் வெற்றி பெற்றுள்ளது. இந்த நாட்டை பாசிச சக்திகளிடமிருந்து காப்பாற்றுவதற்கான தேர்தலாக இது அமைந்துள்ளது. 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் கண்கூடாக எந்த வளர்ச்சியையும் காணவில்லை.

    மக்களை சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் பிளவுபடுத்தி அதனை நிலைப்படுத்த நினைக்கிறார்கள். அகில இந்திய அளவில் ஒரு அமைதிப் புரட்சி நிகழ இருக்கிறது. இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் இருக்கலாம். ஆனால் அது மக்களுக்கு அது பிரதானமான தேவையாக இல்லை.

    பா.ஜ.க.வை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதை மக்களின் வேட்கையாக இருக்கிறது. தேர்தல் யுத்தம் நடப்பது காங்கிரசுக்கும், பா.ஜ.க.விற்கும் அல்ல. மக்களுக்கும், சங்பரிவாருக்கும் நடக்கும் யுத்தம் தான் இந்த தேர்தல் என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையிலேயே தேர்தல் முடிவுகள் அமையும்.

    இ.வி.எம். மிஷினை தில்லுமுல்லு செய்து வெற்றி பெறலாம் என பா.ஜ.க. நினைக்கிறது. அதற்கு ஒரே தீர்வு 100 விழுக்காடு மக்கள் வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டில் எப்படியாவது பாரதிய ஜனதா 2-வது பெரிய சக்தியாக வந்துவிட வேண்டும் என்று பல்வேறு சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் காலூன்றி இங்கும் வட இந்திய மாநிலங்களில் இருப்பதைப் போன்ற வெறுப்பு அரசியலை விதைத்து மக்களை பிளவுபடுத்துவதற்கு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டின் தி.மு.க., அ.தி.மு.க. வேறு அணிகளில் தேர்தலை சந்தித்தாலும் சமூக நீதி என்று ஒரு புள்ளியில் அணி திரண்டு இருக்கிறோம்.

    இந்த மாபெரும் கருத்தியல் யுத்தத்தில் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். அகில இந்திய அளவில் நாட்டையும் அரசமைப்பு சட்டத்தையும் காப்பாற்ற வேண்டும்.

    இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு அவரவர் சின்னங்களில் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன். 2 தொகுதிகளில் போட்டியிட்டால் 40 தொகுதிகளும் சிறுத்தைகளின் தொகுதிகள் தான் என்ற அடிப்படையில் களப்பணியாற்றுவோம்.

    பா.ம.க. எப்பொழுதும் சாதிய மதவாத அரசியலில் திளைத்துக் கிடக்கிறார்கள், ஓ.பி.சி. , எம்.பி.சி. மக்களுக்கு எதிரான நிலைப்பாடாகவே பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்திருப்பதை பார்க்கிறேன்.

    ஓ.பி.சி., எம்.பி.சி. மக்களை பாட்டாளி மக்கள் கட்சி கைவிட்டாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம். நாளையில் இருந்து மனு தாக்கல் தொடங்குகிறது. ஆனால் இன்னும் பா.ஜ.க., அ.தி. மு.க. ஒரு கூட்டணியாக இன்னும் உருவாகவில்லை. தி.மு.க. ஏற்கனவே கூட்டணியை கட்டமைத்து தேர்தலுக்கு தயாராக உள்ளது.

    பா.ஜ.க. கூட்டணி தன்னோடு சேர்ந்த கட்சிகளில் ஊடுருவி அவர்களை நீர்த்துப்போக செய்வது அனைவரும் அறிவார்கள். இந்த நிலையில் பா.ஜ.க. வுடன் பா.ம.க. கூட்டணி சேர்ந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    கலைஞர், ஜெயலலிதா போன்ற கவர்ச்சிமிகு தலைவர்கள் இல்லை என்ற நம்பிக்கையில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்று பகிரங்க முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு இடம் கொடுக்க வாய்ப்பில்லை.

    பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய இளைஞர்களின் வாக்கு வங்கியை உருவாக்குவதற்கு வாய்ப்பில்லை. மோடி, அமித்ஷாவுடன் கருத்தியல் ரீதியாக முரண் ஏற்பட்டு கூட்டணியில் இருந்து பிரிந்து அ.தி.மு.க. தேர்தலை சந்திக்கவில்லை, உள்ளூர் தலைவர் அண்ணாமலையுடன் கருத்து முரண் ஏற்பட்டு தான் தேர்தலை தனித்தனியாக சந்திக்கின்றனர்.

    சிறுபான்மையினர் வாக்குகளை ஒட்டு மொத்தமாக தி.மு.க. அணி பெற்றுவிடாமல் தடுப்பதற்கு அ.தி.மு.க. பிரிந்து தேர்தலை சந்திக்கிறது. தேர்தல் முடிந்தவுடன் அ.தி.மு.க.வினர் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவளிப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதனை உணர்ந்து சிறுபான்மையின மக்கள் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • யாத்திரை இறுதி நிகழ்வை வெற்றி அடைய செய்ய எங்களுடன் இணைந்து கொள்ள அழைக்கிறேன்.
    • பிரதமர் மோடியின் சர்வாதிகார ஆட்சியை அகற்றுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பதால் பங்கு பெற வேண்டும்.

    சென்னை:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த மாதம் 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கினார். 15 மாநிலங்கள் மற்றும் 6700 கி.மீ. தூரத்திற்கு பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.

    ராகுலின் யாத்திரை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த யாத்திரையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்று வருகின்றனர். யாத்திரையின் போது சக்தி வாய்ந்த முழக்கங்களை காங்கிரஸ் எடுத்து செல்கிறது.

    ராகுலின் யாத்திரை வெற்றி அடைந்து வருகிற 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மும்பையை அடைகிறது.

    இதையொட்டி மும்பை சிவாஜி பூங்காவில் மாலை 7 மணிக்கு யாத்திரை நிறைவு விழா நடைபெறுகிறது.

    இந்தியா நீதி ஒற்றுமை யாத்திரை நிறைவு பெறும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.

    இதில் பங்கேற்க இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்களை அழைத்து யாத்திரையின் நோக்கம் வெற்றி அடைந்ததை விளக்கி பேசுகின்றனர்.

    யாத்திரை நிறைவு விழாவில் பங்கு பெற இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    யாத்திரை இறுதி நிகழ்வை வெற்றி அடைய செய்ய எங்களுடன் இணைந்து கொள்ள அழைக்கிறேன். பிரதமர் மோடியின் சர்வாதிகார ஆட்சியை அகற்றுவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பதால் பங்கு பெற வேண்டும். ஒரு மதச்சார்பற்ற வலுவான ஜனநாயகத்தை நிறுவுவதற்கு உதவும் என்று அக்கடிதத்தில் கார்கே கூறியுள்ளார்.

    கார்கேவின் அழைப்பை ஏற்ற திருமாவளவன் மும்பைக்கு செல்கிறார். யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்.

    • கால காலமாக உழைத்த முக்கிய பொறுப்பாளர்கள் தங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்க தொடங்கிவிட்டனர்.
    • வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறுவேன். வாய்ப்பு கொடுப்பதும், கொடுக்காததும் தலைவர் கையில் உள்ளது.

    சென்னை:

    விடுதலை சிறுத்தை கட்சிக்கு தி.மு.க. 2 தனி தொகுதிகளை ஒதுக்கி தொகுதி உடன்பாடு செய்துள்ளது. சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளை கடந்த முறை போல ஒதுக்கி இருப்பதால் அடிப்படையான தேர்தல் பணிகளை அங்கு தொடங்கிவிட்டனர்.

    சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். விழுப்புரம் தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    இந்த தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமார் மீண்டும் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சியில் மூத்த நிர்வாகிகள் சிலர் போட்டியிட ஆர்வம் காட்டுகிறார்கள்.

    கட்சியில் எந்த பிரதிபலனையும் எதிர் பார்க்காமல் கால காலமாக உழைத்த முக்கிய பொறுப்பாளர்கள் தங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்க தொடங்கிவிட்டனர்.

    இளைஞர் அணி மாநில செயலாளர் சங்கத் தமிழன் விழுப்புரம் தொகுதியில் தன்னை போட்டியிட அனு மதிக்க வேண்டும் என்று தலைவர் திருமாவளவனிடம் விருப்ப மனு கொடுத்துள்ளார்.

    அப்போது அவர் இந்த முறை இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். கட்டாயம் எனக்கு வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறுவேன் என்று கூறியுள்ளார்.

    ரவிக்குமார் ஒருமுறை எம்.எல்.ஏ., ஒருமுறை எம்.பி.யாக இருந்துவிட்டார். இந்த முறை இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் சிறப்பாக இருக்கும். எல்லோருக்கும் தேர்தலில் நிற்க ஆசை இருக்கிறது. வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறுவேன். வாய்ப்பு கொடுப்பதும், கொடுக்காததும் தலைவர் கையில் உள்ளது.

    விழுப்புரம் தொகுதி நன்கு அறிந்த தொகுதியாகும். வாய்ப்பு கொடுத்தால் வெற்றி பெறுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சங்கத்தமிழனை போல மேலும் சிலர் போட்டியிட மனு கொடுக்க தயாராக உள்ளனர். வக்கீல் எழில் கரோலினை நிறுத்த வேண்டும் என்று மகளிர் அணி சார்பில் வலியுறுத்தப்படுகிறது. விடுதலை சிறுத்தை கட்சியில் விருப்பமனு வாங்கும் நடைமுறை பாராளுமன்ற தேர்தலில் இதுவரை இருந்தது இல்லை. ஆனால் இந்த முறை கட்சி நிர்வாகிகள் சிலர் விருப்ப மனுக்களை தாங்களாகவே முன் வந்து கொடுக்கின்றனர்.

    இதனால் ரவிக்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? புதிதாக ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா? என்பது கட்சியின் உயர்நிலைக் குழுவில் தான் முடிவு செய்யப்படும்.

    எனவே விழுப்புரம் தொகுதி வி.சி.க. வேட்பாளர் யார்? என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • வி.சி.க துணை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்
    • ஆதவ் அர்ஜுனா வீட்டில் 2-வது நாளாக நடைபெற்று வந்த சோதனை இன்று முடிவுற்றது

    போயஸ்கார்டனில் வசித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜுனா வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    ஆதவ் அர்ஜுனா வீட்டில் 2-வது நாளாக நடைபெற்று வந்த சோதனை இன்று முடிவுற்றது.

    இது தொடர்பாக ஆதவ் அர்ஜுனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    எனது அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்த செய்தி ஊடகங்களில் பரவலாக வெளியாகியிருந்தது. நேற்று (09.03.2024) காலை தொடங்கி இன்று காலை வரை ஒருநாள் சோதனை நடத்தப்பட்டது.

    பொதுவாழ்வில் வெளிப்படைத்தன்மையோடு இருக்கவேண்டியதன் அவசியத்தை எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதனடிப்படையில் சோதனையின்போது அதிகாரிகள் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் நம் தரப்பில் உரிய முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டு சோதனை நிறைவுற்றது. இதற்கிடையில், சமூக வலைத்தளங்களில் வலம் வரும் வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும் யாரும் இடம் தரவேண்டாம்.

    என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் சமத்துவ சித்தாந்தத்தின் வழிநின்று உறுதியோடு எனது பயணம் தொடரும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடத்தப்படுகின்றன
    • நூறு விழுக்காடு ஒப்புகைச் சீட்டுடன் ( VVPAT) வாக்குப்பதிவு எந்திரங்களை இணைக்க வேண்டும்; ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்

    தேர்தல் ஆணையர் பொறுப்பிலிருந்து அருண் கோயல் அவர்கள் பதவி விலகியிருப்பது நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் நேர்மையான முறையில் நடக்குமா என்கிற அச்சத்தை எழுப்பி இருக்கிறது. எனவே, உச்ச நீதிமன்றம் இதில் உடனடியாகத் தலையிட்டுத் தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கு உறுதி செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இது தொடர்பாக அக்கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,

    இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடித்தளமாக இருப்பது தேர்தல் முறையாகும். சுமார் 140 கோடி மக்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நேர்மையான முறையில் நடத்தப்பட வேண்டும். அதற்கெனவே மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையம் இயங்கி வருகிறது.

    அது அரசமைப்புச் சட்டத்தின்படி தன்னாட்சி அதிகாரம் கொண்ட சுதந்திரமான அமைப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த அமைப்பைத் தம்முடைய கைப் பாவையாக ஆக்கிக் கொள்வதற்கு மோடி அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    ஒன்றிய அரசின் அதிகாரியாக 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய அருண் கோயல் அவர்கள் கடந்த 2022 நவம்பரில் விருப்ப ஓய்வு பெற்று 24 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையராக மோடி அரசால் நியமிக்கப்பட்டார். அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த நேரத்தில் தேர்தல் ஆணையர் நியமனம் குறித்த வழக்கு ஒன்றை விசாரித்துக் கொண்டிருந்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கையும் அத்துடன் சேர்த்து விசாரித்தது. தேர்தல் ஆணையம் தன்னாட்சி கொண்ட அமைப்பாகத் தொடர வேண்டுமென்றால் தேர்தல் ஆணையர் நியமனம் நேர்மையாக நடைபெற வேண்டும் எனத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுப்பதற்காக மூன்று பேர் கொண்ட குழு ஒன்றையும் அமைத்தது.

    பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகிய மூவரைக் கொண்ட குழு தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை செல்லாததாக ஆக்கும் நோக்கில் மோடி அரசு, அவசர அவசரமாக சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தது. அதாவது, பிரதமர், அவரால் நியமிக்கப்படும் ஒரு அமைச்சர், மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய மூவரைக் கொண்ட குழுவில் யாரேனும் இரண்டு பேர் என்ன முடிவெடுக்கிறார்களோ அதனடிப்படையில் தேர்தல் ஆணையர் நியமனம் நடைபெறும் என்று அந்த சட்டம் சொல்கிறது.

    இது ஆளுங்கட்சியின் கைப் பாவையாகத் தேர்தல் ஆணையத்தை மாற்றும் நடவடிக்கையே தவிர வேறல்ல. இந்த சட்டத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் எதிர்த்தோம். அதையும் மீறி மோடி அரசால் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு வெளிப்படையாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் புறக்கணித்துத் தேர்தல் ஆணையத்தைத் தன்னுடைய பிடிக்குள் கொண்டு வர மோடி அரசாங்கம் திட்டமிட்டுச் செயல்படுகிறது.

    மோடி அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்தப் பின்னணியில் தான் தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியிருக்கிறார். மூன்று உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் ஆணையத்தில் இப்போது தலைமைத் தேர்தல் ஆணையர் மட்டுமே இருக்கிறார். இரண்டு உறுப்பினர் பதவிகள் காலியாக இருக்கின்றன. அவற்றைத் தனது விருப்பம் போல இப்போது மோடி அரசு நிரப்பப் போகிறது. அதன் மூலம் தேர்தல் ஆணையத்தை ஒட்டுமொத்தமாகத் தனது பிடிக்குள் கொண்டு வரப் போகிறது.

    'வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் நடத்தப்படுகின்றன. எனவே, நூறு விழுக்காடு ஒப்புகைச் சீட்டுடன் ( VVPAT) வாக்குப்பதிவு எந்திரங்களை இணைக்க வேண்டும்; ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும்' என்று ஏற்கனவே இந்தியா கூட்டணி கட்சிகள் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகின்றன.

    அதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. 400 இடங்களுக்கு மேல் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று பிரதமரும், உள்துறை அமைச்சரும் பேசி வருகிறார்கள். அதற்கு ஏற்ப அவர்களது ஆதரவு ஊடகங்களில் கருத்துக் கணிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் இணைத்துப் பார்க்கும் போது வாக்குப் பதிவு எந்திரங்களில் மோசடி செய்து இந்தத் தேர்தலில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றுவதற்கு பாஜக சதித் திட்டம் தீட்டி இருக்கிறதோ என்ற சந்தேகம் வலுப்பெற்று வருகிறது.

    பாஜகவும் அதன் ஆதரவு சக்திகளும் தேர்தல் முறையை சீரழித்து, முறைகேடான முறையில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றன என்பதைத்தான் தேர்தல் ஆணையத்தில் நடக்கும் இந்த நாடகக் காட்சிகள் உணர்த்துகின்றன.

    எனவே, உச்ச நீதிமன்றம் இதனை வேடிக்கை பார்க்க கூடாது. தேர்தல் ஆணையர் நியமன சட்டத்தை எதிர்த்து தொடுக்கப்பட்டுள்ள வழக்கையும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான வழக்கையும் அவசர வழக்குகளாக விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டும்.

    இந்திய தலைமை நீதிபதியும் அங்கம் வகிக்கும் தேர்வுக்குழுவை நியமித்துக் காலியாகவுள்ள இரண்டு ஆணையர்களை நியமிக்க வேண்டும். அவர்களைக் கொண்டு எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலை நேர்மையான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து ' அரசியல் தலையீடுகளின்றி தேர்தல் நடக்கும்' என்கிற நம்பிக்கையை பொதுமக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் முறைகேடு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    சென்னை:

    சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 10 இடங்களில் சோதனை நடத்தினர். ரேசன் கடைகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்யும் அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் என்பவரது வீடு, வேப்பேரியில் உள்ள தொழில் அதிபர் இரானி உள்பட பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

    போயஸ்கார்டனில் வசித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    மற்ற இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ள நிலையில் போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜூன் வீட்டில் மட்டும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் முறைகேடு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.4,730 கோடி அளவுக்கு இதில் முறைகேடு மற்றும் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதும் தெரிய வந்திருந்தது.

    இதில் தொடர்புடைய மணல் ஒப்பந்ததாரர்கள் சிலரது வீடுகளிலும் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

    இந்த சோதனையிலும் பல்வேறு ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    • தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
    • கடந்த 2019 தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டு வென்றது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.

    இந்நிலையில் இன்று தி.மு.க.- விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை அடுத்து தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    கடந்த 2019 தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டு வென்றது. மீண்டும் அதே தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் போட்டியிடுகிறது.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், பிற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்த பின் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் இறுதி செய்யப்படும். கடந்த தேர்தலின் போது நடந்த பகிர்வு முறையை இந்த முறையும் விசிக ஏற்றுக்கொண்டது. தென்னிந்திய மாநிலங்களில் விசிக சார்பில் போட்டியிடுகிறோம். விசிக தனி சின்னத்தில் போட்டியிட தி.மு.க. உடன்பாடு. தேர்தல் ஆணையத்திடம் பானை சின்னம் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். உயர்நிலை கூட்டம் முடிந்த பிறகு வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றார்.

    தி.மு.க. கூட்டணியில் எல்லா கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு நிறைவடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு 2 தனி தொகுதிகளும், ஒரு பொது தொகுதி வேண்டும் என்பதில் தொடக்கம் முதலே உறுதியாக இருக்கிறது.
    • ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தி.மு.க. தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழகத்தில் இந்தியா கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையில் சந்திக்கிறது. அந்த கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்று உள்ளன.

    இதில் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இரு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் தலா இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அந்த தொகுதிகள் எவை என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 2019-ம் ஆண்டு தேர்தலில் தந்தது போல தங்களுக்கு 10 தொகுதிகள் வேண்டும் என்று கேட்கிறது. ஆனால் தி.மு.க. 8 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க இயலும் என்று கூறி வருகிறது. இதனால் தி.மு.க.-காங்கிரஸ் இடையே உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    அதுபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு 2 தனி தொகுதிகளும், ஒரு பொது தொகுதி வேண்டும் என்பதில் தொடக்கம் முதலே உறுதியாக இருக்கிறது. இதனால் விடுதலை சிறுத்தைகளுடன் தொகுதி பங்கீடு செய்வதில் இழுபறி நீடித்தது. அதுபோல ம.தி.மு.க.வும் 2 தொகுதிகள் கேட்டதால் முடிவு எட்டப்படாமல் இருந்தது.

    நேற்று ம.தி.மு.க. உயர் நிலைக் குழு கூட்டம் சென்னையில் கூடி இது தொடர்பாக ஆலோசனை நடத்தியது. அப்போது 2019-ம் ஆண்டு தேர்தலை போல ஒரே ஒரு தொகுதியை ஏற்றுக்கொள்வது என்றும் ஒரு மேல்சபை தொகுதியை கேட்டு பெறலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

    இந்த இழுபறிகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 தினங்களாக தி.மு.க. மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். 10-ந்தேதி வேட்பாளர் தேர்வை தொடங்க இருப்பதாகவும் வெள்ளி, சனி இரண்டு நாட்களுக்குள் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    அதன் பேரில் பேச்சு நடத்த வருமாறு ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தி.மு.க. தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதை ஏற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று காலை 10.30 மணிக்கு தலைமை செயலகத்துக்கு சென்றார்.

    அங்கு அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இருவரும் தொகுதி பங்கீடு குறித்து மனம் விட்டு பேசினார்கள். இதில் ஒருமித்த கருத்து உருவானதாக தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே வைகோவும் ஒரு தொகுதியை ஏற்க முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து அவர் அறிவாலயத்துக்கு வந்தார். அங்கு தொகுதி பங்கீடு குறித்து அவர் தி.மு.க. தலைவர்களுடன் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் போட்டியிடுவோம்.
    • தொகுதி பங்கீடு விவகாரத்தில் தேவைப்பட்டால் முதலமைச்சரை சந்திப்போம்.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் போட்டியிடுவோம்.

    * தெலுங்கானாவில் 10 இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும்.

    * ஆந்திராவில் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்பாளர்களை நிறுத்த உள்ளோம். ஆந்திராவில் கூட்டணியில் இணைவதற்கான சூழல் அமையாவிட்டால் தனித்து போட்டியிடுவோம்.

    * கர்நாடகாவில் 6 இடங்களிலும், கேரளாவில் 3 இடங்களிலும் போட்டியிட உள்ளோம்.

    * தொகுதி பங்கீடு விவகாரத்தில் தேவைப்பட்டால் முதலமைச்சரை சந்திப்போம் என்று அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். வரவில்லை என்றால் டோன்ட் கேர்.
    • மோடி வருகையால் எந்தவித மாற்றமும் தாக்கமும் ஏற்படப் போவதில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியில் தான் இருப்பேன் என தெரிவித்த கருத்து குறித்து கேட்டனர்.

    அதற்கு அவர் யாரையும் கெஞ்ச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை, எங்களுக்கான தனித்தன்மை இருக்கு. அதற்கான அடையாளம் இருக்கிறது. அதிமுக தனியாக நின்று கூட சாதனை படைத்திருக்கிறது என்றார். அவர் மேலும் கூறியதாவது:-

    2016, 2014 இரண்டு தேர்தல்களில் தனியாக நின்றோம். அதே நேரத்தில் ஒரு கட்சி கூட்டணிக்கு விரும்பினால் அதை எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும். அதைத்தான் நான் சொன்னேன்.

    எங்கள் கட்சியை பொறுத்தவரை வாங்க வாங்க என்று யாரையும் பத்திரிகை வைத்து அழைக்கவில்லை, அதற்கான அவசியமும் இல்லை. அப்படிப்பட்ட கட்சியும் இல்லை. யாராக இருந்தாலும் சரி அவர்கள் வருவதை கட்சி முடிவு செய்யும்.

    விடுதலை சிறுத்தைகள் குறித்து நான் சொன்ன கருத்தில் எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது. தி.மு.க. கூட்டணி குறித்து இழுபறி இழுபறி என தகவல் வருகிறது. அதைத்தான் நானும் சொன்னேன்.

    அதை நான் சொல்லக்கூடாதா இன்னும் அவர்கள் கூட்டணி இறுதி செயப்படவில்லை?

    திமுக வெறும் சில்லறை கட்சிகளுடன் மட்டுமே இப்போது இடங்களை முடித்துள்ளது. இன்னும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகளுக்கு இடங்கள் இறுதியாகவில்லை.

    கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். வரவில்லை என்றால் டோன்ட் கேர். அவர்கள் வந்தால் அவர்களுக்கு தான் அதிக இடம் கிடைக்கும். திமுகவில் ஒரு இடம் கிடைக்க போவதில்லை. எந்த வண்டி வேகமாக போகிறதோ அந்த வண்டியில் தான் ஏறுவார்கள்.

    பா.ஜ.க.வை, அதிமுக கழட்டிவிட்ட பிறகு திமுக அதற்கு முன்பு சர்வாதிகாரமாக இருந்தது. இப்போது திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் திமுகவை மிரட்டுகிறார்கள். உங்களுக்கு உரிய தொகுதியை கொடுங்கள் எங்களுக்குரிய இடங்களை கொடுங்கள் என்று மிரட்டுகிறார்கள். இல்லையென்றால் அண்ணா திமுகவுக்கு போய்விடும் என்று சொல்கிறார்கள்.

    கெஞ்சி கூத்தாடி கட்டிப்பிடித்து அனைத்து கூட்டணியை வைத்திருக்கிறது திமுக. அது எப்போது உடையும் என்று தெரியாது. பத்து நாள் இருக்கிறது பொறுத்திருந்து பாருங்கள்.

    மோடி வருகையால் எந்தவித மாற்றமும் தாக்கமும் ஏற்படப் போவதில்லை. அது வீண் முயற்சி ஏனெனில் இது திராவிட மண்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி தன்னை நம்பவில்லை. தன் செல்வாக்கை நம்பவில்லை.
    • அ.தி.மு.க. தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    தூத்துக்குடி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார். குறிப்பாக பல்லடத்தில் பேசிய பேச்சில் கடந்த 10 ஆண்டுகளில் அவர் மக்களுக்கு செய்தது என்ன என்பது பற்றி பெரிதாக குறிப்பிடவில்லை.

    10 ஆண்டுகளில் இந்த நாடு என்ன முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பதையும், என்ன வளர்ச்சி கண்டிருக்கிறது என்பது குறித்தும் அவர் குறிப்பிடவில்லை.

    குறிப்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை விமர்சிப்பது, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களை புகழ்ந்து பேசுவது என தனது உரையை அமைத்துக் கொண்டார்.

    தமிழ்நாட்டில் கொள்கைகளை பேசி தன்னுடைய கட்சிகளை வளர்க்க வேண்டும் என்று பா.ஜனதா, பிரதமர் மோடி, அமித்ஷா போன்றவர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இங்கு ஆட்சியில் இருக்கக்கூடிய தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை விமர்சிப்பது, அத்துடன் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்களின் புகழை பேசுவது போன்ற யுக்தியை அவர் கையில் எடுத்திருக்கிறார்.

    பிரதமர் மோடி தன்னை நம்பவில்லை. தன் செல்வாக்கை நம்பவில்லை. தன் மீது மக்கள் கொண்டிருக்கின்ற நன்மதிப்பை நம்பவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை நம்பித்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலைக்கு மோடி வந்து விட்டார் என்பதுதான் அவரது பல்லடம் உரை நமக்கு உணர்த்துகிறது.

    எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் புகழ்ந்தால் அ.தி.மு.க.வின் வாக்கை பெற முடியும் என நினைக்கிறார்கள். இதன் மூலம் அ.தி.மு.க.வை பலவீனப்படுத்த வேண்டும், அதன் வாக்கு சதவீதத்தை சரிய செய்ய வேண்டும் என பா.ஜனதா கணக்கு போடுகிறது என்று உணர முடிகிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளையும் எதிர்க்கிறோம் என்ற பெயரில் பா.ஜனதாவிற்கு வாக்களிக்க கூடிய நிலை வந்தால் தமிழ்நாட்டிற்கு பெரிய தீங்கு விளையும். இதை தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக அ.தி.மு.க. தொண்டர்கள் உணர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டி காட்டுகிறது. அ.தி.மு.க. தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    எத்தனை முறை பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்தாலும், சுற்றி சுழன்று வந்து பிரசாரம் மேற்கொண்டா லும் தமிழ்நாட்டு மக்கள் மோடி வித்தையை நம்ப மாட்டார்கள்.

    பா.ஜனதாவுக்கு பெரிய செல்வாக்கு உருவாகாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 வெற்றி பெறும். தொகுதி பங்கீடு குறித்து ஓரிரு நாட்களில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை கட்சித் தலைவர் திருமாவளவன் குழுவிடம் வழங்கினார்.
    • 2-வது கட்ட பேச்சுவார்த்தை கம்யூனிஸ்டு, ம.தி.மு.க.விடம் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை உறுதி செய்வதில் தீவிரமாக உள்ளன. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த முறை 2 தனி தொகுதிகளையும் ஒரு பொதுத் தொகுதியையும் ஒதுக்குமாறு வலியுறுத்தி வருகிறது.

    முதல் கட்ட பேச்சுவார்த்தையின் போது போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியலை கட்சித் தலைவர் திருமாவளவன் குழுவிடம் வழங்கினார்.

    2-வது கட்ட பேச்சுவார்த்தை கம்யூனிஸ்டு, ம.தி.மு.க.விடம் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் கடந்த தேர்தலைவிட கூடுதலாக தொகுதிகளை கேட்பதால் தி.மு.க.விற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. திருமாவளவனும் கடந்த முறையைவிட கூடுதலாக தொகுதிகளை கேட்டு பெறுவதில் உறுதியாக உள்ளார்.

    இந்த நிலையில் 2-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு தி.மு.க.விடம் இருந்து நாளை அழைப்பு வரும் என்று முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். நாளை நடக்கும் பேச்சு வார்த்தையின் போது எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது தி.மு. க. தரப்பில் வலியுறுத்தப்படும்.

    கடந்த முறை திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம், விழுப்புரம் தொகுதியை தவிர மேலும் ஒரு பொதுத் தொகுதி ஒதுக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்த உள்ளார்.

    ×