search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. கூட்டணியில் 2 தொகுதி... அதே தொகுதிகளில் போட்டியிடும் விசிக
    X

    தி.மு.க. கூட்டணியில் 2 தொகுதி... அதே தொகுதிகளில் போட்டியிடும் விசிக

    • தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
    • கடந்த 2019 தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டு வென்றது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.

    இந்நிலையில் இன்று தி.மு.க.- விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதை அடுத்து தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    கடந்த 2019 தேர்தலில் விழுப்புரம், சிதம்பரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டு வென்றது. மீண்டும் அதே தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் போட்டியிடுகிறது.

    இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், பிற கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடிந்த பின் ஒதுக்கப்பட்ட தொகுதிகள் இறுதி செய்யப்படும். கடந்த தேர்தலின் போது நடந்த பகிர்வு முறையை இந்த முறையும் விசிக ஏற்றுக்கொண்டது. தென்னிந்திய மாநிலங்களில் விசிக சார்பில் போட்டியிடுகிறோம். விசிக தனி சின்னத்தில் போட்டியிட தி.மு.க. உடன்பாடு. தேர்தல் ஆணையத்திடம் பானை சின்னம் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். உயர்நிலை கூட்டம் முடிந்த பிறகு வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றார்.

    தி.மு.க. கூட்டணியில் எல்லா கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு நிறைவடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×