search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதவ் அர்ஜூன்"

    • வி.சி.க துணை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்
    • ஆதவ் அர்ஜுனா வீட்டில் 2-வது நாளாக நடைபெற்று வந்த சோதனை இன்று முடிவுற்றது

    போயஸ்கார்டனில் வசித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜுனா வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    ஆதவ் அர்ஜுனா வீட்டில் 2-வது நாளாக நடைபெற்று வந்த சோதனை இன்று முடிவுற்றது.

    இது தொடர்பாக ஆதவ் அர்ஜுனா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    எனது அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்த செய்தி ஊடகங்களில் பரவலாக வெளியாகியிருந்தது. நேற்று (09.03.2024) காலை தொடங்கி இன்று காலை வரை ஒருநாள் சோதனை நடத்தப்பட்டது.

    பொதுவாழ்வில் வெளிப்படைத்தன்மையோடு இருக்கவேண்டியதன் அவசியத்தை எப்போதும் உணர்ந்திருக்கிறேன். அதனடிப்படையில் சோதனையின்போது அதிகாரிகள் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் நம் தரப்பில் உரிய முழுமையான விளக்கங்கள் அளிக்கப்பட்டு சோதனை நிறைவுற்றது. இதற்கிடையில், சமூக வலைத்தளங்களில் வலம் வரும் வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும் யாரும் இடம் தரவேண்டாம்.

    என் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோரின் சமத்துவ சித்தாந்தத்தின் வழிநின்று உறுதியோடு எனது பயணம் தொடரும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் முறைகேடு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    சென்னை:

    சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 10 இடங்களில் சோதனை நடத்தினர். ரேசன் கடைகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்யும் அரசு ஒப்பந்ததாரர் செல்வராஜ் என்பவரது வீடு, வேப்பேரியில் உள்ள தொழில் அதிபர் இரானி உள்பட பலரது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

    போயஸ்கார்டனில் வசித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜூன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    மற்ற இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றுள்ள நிலையில் போயஸ் கார்டன் கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ஆதவ் அர்ஜூன் வீட்டில் மட்டும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் முறைகேடு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.4,730 கோடி அளவுக்கு இதில் முறைகேடு மற்றும் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதும் தெரிய வந்திருந்தது.

    இதில் தொடர்புடைய மணல் ஒப்பந்ததாரர்கள் சிலரது வீடுகளிலும் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

    இந்த சோதனையிலும் பல்வேறு ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    ×