search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MGR"

    • தான் நடித்த திரைப்படங்கள் வாயிலாக, சமுதாயத்திற்குத் தேவையான கருத்துக்களை அழுத்தமாக முன்வைத்தவர்.
    • ஆறு முதல் அறுபது வயதான அத்தனை மக்களின் அன்புக்கும் பாத்தியப்பட்டவர்.

    சென்னை :

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "இவர் போல யாரென்று ஊர் சொல்ல வாழ்ந்த பொன்மனச் செம்மல், எம்.ஜி.ஆர்."

    தான் நடித்த திரைப்படங்கள் வாயிலாக, சமுதாயத்திற்குத் தேவையான கருத்துக்களை அழுத்தமாக முன்வைத்தவர். ஆறு முதல் அறுபது வயதான அத்தனை மக்களின் அன்புக்கும் பாத்தியப்பட்டவர்.

    "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்" என்ற அவரது பாடல் போல இன்னும் மக்கள் மனதில் ஆழமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தலைவர். எளிய மக்கள் அனைவராலும் "புரட்சித் தலைவர்" என்று அன்போடு அழைக்கப்பட்டவர், அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, மக்கள் நலனுக்காக பணி செய்தவர்.

    தமிழக முன்னாள் முதல்வர், பாரத ரத்னா, தெய்வத்திரு டாக்டர் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் பிறந்தநாளான இன்று, அவரைப் போற்றி வணங்குவோம்! என கூறியுள்ளார்.

    • மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.
    • அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்தனர். காலை 10.30 மணிக்கு எடப்பாடி பழனிசாமி காரில் அங்கு வந்து இறங்கினார். அப்போது தொண்டர்கள் வாழ்த்து கோஷமிட்டனர்.

    தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அவரை வரவேற்று அழைத்து சென்றனர். பின்னர் எம்.ஜி.ஆர். சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிலைக்கு அவர் மாலை அணிவித்தார்.

    பின்னர் அவர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். அதனையடுத்து 107 கிலோ எடை கொண்ட கேக் அங்கு தயார் செய்யப்பட்டிருந்தது. அதனை எடப்பாடி பழனிசாமி வெட்டி அனைவருக்கும் வழங்கினார். பின்னர் மகளிர்களுக்கு சேலை வழங்கினார்.

    மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் ஏற்பாட்டில் அன்னதானம் மற்றும் பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, பா.வளர்மதி, பா.பென்ஜமின், கோகுல இந்திரா, கடம்பூர் ராஜூ, வாலாஜாபாத் கணேசன், மாவட்ட செயலாளர்கள் டி.ஜெயக்குமார், நா.பால கங்கா, டி.ஜி.வெங்கடேஷ் பாபு, ஆதிராஜாராம், வி.என்.ரவி, தி.நகர் சத்யா, அசோக், ஆர்.எஸ்.ராஜேஷ், கே.பி.கந்தன்,

    சிறுபான்மை பிரிவு சேவியர், சிவராஜ், இலக்கிய அணி செயலாளர் இ.சி.சேகர், மாவட்ட துணை செயலாளர் வளசை டில்லி, பெரும்பாக்கம் ராஜசேகர், துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, முன்னாள் கவுன்சிலர் சின்னையன், டாக்டர் சுனில், வடபழனி சத்தியநாராயண மூர்த்தி, மதுரவாயல் வடக்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் முகப்பேர் இளஞ்செழியன், வேளச்சேரி மூர்த்திவேல் ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக எடப்பாடி பழனிசாமி கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னையில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தெருக்களிலும், மக்கள் சந்திக்கும் இடங்களிலும் எம்.ஜி.ஆர். படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் ஆங்காங்கே எம்.ஜி.ஆர். சினிமா பாடல் ஒலித்துக்கொண்டே இருந்தன.

    • எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு சிந்தனை உடைய தலைவராகவும் இருந்தார்.
    • எம்.ஜி.ஆரின் பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது என கூறியுள்ளார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் எம்.ஜி.ஆர் குறித்து பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை இன்று நினைவு கூர்ந்து கொண்டாடுகிறோம். எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு சிந்தனை உடைய தலைவராகவும் இருந்தார். தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்த அவர் தமிழகத்தின் வளர்ச்சியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது என கூறியுள்ளார்.

    • புரட்சித்தலைவர் தன் நடிப்பாலும் உழைப்பாலும் தன் வள்ளல் குணங்களாலும் மட்டுமே மக்கள் மனங்களை வென்று நிற்கிறார்.
    • ஆயிரமாண்டு கடந்தாலும் அவர்தான் ஆயிரத்தில் ஒருவர். அதை யாராலும் மாற்றவும் முடியாது!

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் கருணாநிதியால்தான் சினிமாவில் தொட முடியாத உயரம் சென்றதை போல முன்னணி நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் நேற்றுமுன்திளம் நடந்த விழாவில் உண்மைக்கு மாறாக பேசியுள்ளனர்.

    இனிவரும் காலங்களில் வரலாற்றை மறைக்காமல் பேசினால் நன்று!

    புரட்சித்தலைவர் தன் நடிப்பாலும் உழைப்பாலும் தன் வள்ளல் குணங்களாலும் மட்டுமே மக்கள் மனங்களை வென்று நிற்கிறார். ஆயிரமாண்டு கடந்தாலும் அவர்தான் ஆயிரத்தில் ஒருவர். அதை யாராலும் மாற்றவும் முடியாது! மறைக்கவும் முடியாது!

    அவரது உதவியால்தான் கருணாநிதியே முதலமைச்சரானார். சினிமா துறையை சிறைப்பிடித்து ஸ்கிரிப்டில் உள்ளதை மட்டும் படிக்க சொல்லி கட்டளையிடாமல் மக்கள் பக்கம் திரும்புங்கள் முதல்வரே?.

    இப்படி எல்லாம் நடக்கும் என தெரிந்தே இருபெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் ஆகியோர் விழாவை புறக்கணித்துள்ளனர். #TheGOATMGR

    இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

    • ஜெயலலிதா சினிமா மற்றும் அரசியலில் தடம் பதித்து இரண்டிலும் வெற்றி கண்டவர்.
    • சினிமா மற்றும் அரசியலில் தடம் பதித்து மிகக்குறைந்த நாட்களிலேயே எதிர்க்கட்சி தலைவராகியவர் விஜயகாந்த்.

    டிசம்பர் திக்.... திக்... திக்...

    தமிழகத்தில் டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே ஒன்று இயற்கை பேரழிவு, மற்றொன்று தலைவர்கள் மரணம் என்பது தொடர் கதையாகி வருவது இன்றளவும் தொடரத்தான் செய்கிறது. அந்த வகையில்தான் இன்று கேப்டன் விஜயகாந்த்தும் மறைந்துள்ளார்.

    தமிழக மக்களால் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டவர் எம்.ஜி.ராமச்சந்திரன் எனும் எம்.ஜி.ஆர். சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் தடம் பதித்து இரண்டிலும் உச்சத்திற்கு வந்த ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர். இவர் டிசம்பர் 24-ந்தேதி காலமானார்.

    அதேபோல் புரட்சித்தலைவி ஜெயலலிதா சினிமா மற்றும் அரசியலில் தடம் பதித்து இரண்டிலும் வெற்றி கண்டவர். அரசியலில் அவர் காட்டிய அதிரடிகள் ஏராளம். துணிச்சலின் அடையாளமாக கருதப்பட்ட அவரும் டிசம்பர் மாதம் 5-ந்தேதி காலமானார்.

    தே.மு.தி.க. நிறுவனரும் புரட்சிக்கலைஞர் என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்பட்டவருமான விஜயகாந்த் ஆக்ஷன் சண்டை காட்சிகளிலும், நெருப்பு பொறி பறக்க இவர் பேசும் வசனங்களும் மிகவும் பிரபலமானவை. அந்த வகையில் சினிமா மற்றும் அரசியலில் தடம் பதித்து மிகக் குறைந்த நாட்களிலேயே எதிர்க்கட்சி தலைவராகியவர்.

    கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து தி.மு.க.வை பின்னுக்கு தள்ளி 29 எம்.எல்.ஏ.க்களை பெற்று எதிர்க்கட்சி தலைவரானவர். பல்வேறு சிறப்பு பண்புகள் பெற்ற விஜயகாந்த் டிசம்பரில் காலமாகியுள்ளார். முன்னதாக சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கார், பெரியார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் டிசம்பர் மாதம் காலமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேமுதிகவின் வாக்கு வங்கி ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்து வருகிறது
    • முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு பிரேமலதா செல்லவில்லை

    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்ந்த விஜயகாந்த், தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகியவற்றிற்கு மாற்றாக கடந்த 2005 செப்டம்பர் 14 அன்று "தேசிய முற்போக்கு திராவிட கழகம்" (DMDK) எனும் புதிய கட்சியை தொடங்கினார். இக்கட்சிக்கு முரசு சின்னம், தேர்தல் சின்னமாக கிடைத்தது.

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இக்கட்சியின் வாக்கு வங்கி சதவீதம், 2006 (சட்டசபை) - 8.38, 2009 (பாராளுமன்றம்) - 10.08, 2011 (சட்டசபை) - 7.88, 2014 (பாராளுமன்றம்) - 5.19, 2016 (சட்டசபை) - 2.39, 2019 (பாராளுமன்றம்) - 2.19 என தேர்தலுக்கு தேர்தல் குறைந்தவாறு உள்ளது.

    2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 29 சட்டசபை இடங்களை கைப்பற்றிய தேமுதிக, பதிவான வாக்குகளில் 6 சதவீதத்துக்கும் குறைவாக பெற்று, தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் ஒரு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. அக்கட்சியின் சார்பில் வெற்றி பெறாததால் மாநில கட்சி அந்தஸ்தையும், முரசு சின்னத்தையும் இழக்கும் அபாய கட்டத்திற்கே வந்தது.

    சமீப சில வருடங்களாக அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், அக்கட்சியின் நிர்வாகிகளில் பலர் வேறு கட்சிகளுக்கு வெளியேறினர்; தொண்டர்களும் குறைய தொடங்கினர்.

    இந்நிலையில், டிசம்பர் 14 அன்று தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், பொது செயலாளராக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    தொடர்ந்து பிரேமலதா உரையாற்றும் போது, "பெண்களுக்கு அரசியல் ஒரு பெரும் சவால். ஜெயலலிதா சந்திக்காத சவால்களே இல்லை. விஜயகாந்திற்கு எம்.ஜி.ஆர்.தான் குரு; எனக்கு ஜெயலலிதாதான் ரோல் மாடல்" என குறிப்பிட்டார்.


    மேலும், மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு செல்லவில்லை. இந்த செயல் விமர்சகர்களால் முக்கியத்துவம் அளித்து பேசப்படுகிறது

    பல சவால்களை வெற்றிகரமாக எதிர் கொண்ட "இரும்பு பெண்மணி" என அழைக்கப்பட்ட மறைந்த அதிமுகவின் பொது செயலாளர் ஜெயலலிதா ஒரு ஆளுமை மிக்க தலைவராக கருதப்பட்டவர். தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் இடத்தை நிரப்பக் கூடிய பெண் அரசியல் தலைவர்கள் இன்னும் உருவாகவில்லை என்பதே அரசியல் விமர்சகர்களின் பார்வையாக உள்ளது.

    இப்பின்னணியில், பிரேமலதாவின் உரையும், மறைந்த அதிமுக தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதும், ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை நிரப்ப அவர் முன்னெடுக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

    அதிமுகவின் பெரும் தலைவர்களை நினைவுகூர்ந்த அவரது பேச்சிலும், நினைவகங்களுக்கு செல்வதில் திமுகவை புறந்தள்ளுவதை போல் நடந்து கொண்டதும் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளன.

    பா.ஜ.க.வை உதறி விட்டு தேர்தலை சந்திக்க உள்ள அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு தேமுதிக தயாராக உள்ளதாக அதிமுக தலைவர்களுக்கு மறைமுகமாக பிரேமலதா விடுக்கும் செய்தியாக சில விமர்சகர்கள் இதை கணிக்கின்றனர்.

    "கருப்பு எம்.ஜி.ஆர்." என ரசிகர்களால் அழைக்கப்பட்டு எம்.ஜி.ஆர். இடத்தை நிரப்ப விஜயகாந்த் முயன்றது போல், ஜெயலலிதாவிற்கு மாற்றாக தன்னை முன்னிறுத்தி அதிமுகவின் வாக்கு வங்கியின் ஒரு பகுதியை அறுவடை செய்ய பிரேமலதா நினைக்கலாம் என்பது சில விமர்சகர்களின் கணிப்பு.

    இப்பின்னணியில், வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக எதிர்நோக்கப்படுகிறது.


    ஸ்டாலினே முதல்வர் வேட்பாளராக நிற்பாரா அல்லது தனது மகன் உதயநிதியை முன்னிறுத்துவாரா என்பது தெரியவில்லை.

    2017ல் சசிகலாவால் தேர்வு செய்யப்பட்டு 2021 வரை முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தி களத்தில் இறங்க போகும் முதல் தேர்தல் இதுதான்.

    திமுகவையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து தொடர்ந்து பிரசாரம் செய்து வரும் பா.ஜ.க. இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் என்ன சேதாரத்தை ஏற்படுத்தும் என்பதும் தற்போது தெளிவாகவில்லை.

    இவர்களுக்கு நடுவே தேமுதிக பொது செயலாளரின் கணக்குகள் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    • டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் மூலம் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
    • இந்த வீடியோவிற்கு எதிராக பலர் குரல் கொடுத்தனர்.

    டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களில் ஒரு நபரின் உருவத்தில், வேறொரு நபரின் முகத்தை துல்லியமாக பதியச் செய்து போலியாக சித்தரிப்பதாகும்.


    சமீபத்தில் இந்த தொழில்நுட்பம் மூலமாக நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா கைஃப், கஜோல், ஆலியா பட் என பலரின் புகைப்படங்கள் ஆபாசமான முறையில் மார்பிங் செய்யப்பட்டு வெளியானது. இந்த வீடியோக்கள் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் பலர் இந்த டீப்ஃபேக் (Deepfake) வீடியோவிற்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர்.

    இதையடுத்து இது போன்ற போலி வீடியோக்களை வெளியிடுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.



    இந்நிலையில், பல குழப்பங்களை உருவாக்கிய டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் மூலம் தற்போது எம்.ஜி.ஆருக்கு உயிர் கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் எம்.ஜி.ஆர் 'பணம் படைத்தவன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்போன போக்கிலே' பாடலை பாடுகிறார். இந்த வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள் பல குழப்பங்களை செய்த டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் தற்போது தான் அருமையான ஒரு செயலை செய்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • தச்சை கணேசராஜா தலைமையில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராய ணன், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டிபாண்டியன், பகுதி செயலாளர்கள் திருத்து சின்னத்துரை, சிந்துமுருகன், ஜெனி, டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால்கண்ணன், கவுன்சிலர் சந்திரசேகர், வக்கீல் ஜெயபாலன், தச்சை மாதவன் மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    • 'லத்தி' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்தது.
    • நடிகர் விஷால் தற்போது 'மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்த திரைப்படம் 'லத்தி'. இதனை அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரித்திருந்தனர்.


    விஷால்

    'லத்தி' திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை குவித்தது. இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விஷால் தனது மார்பில் பிரபல நடிகரும் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வருமான எம்.ஜி.ஆரின் படத்தை டாட்டூவாக போட்டுள்ளார்.


    எம்.ஜி.ஆரின் டாட்டூ

    இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த டாட்டூ உண்மையானதா? அல்லது படத்திற்காக வரையப்பட்டாதா? என்ற அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

    • அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா நடந்தது.
    • சங்க துணை தலைவர் செய்யது காதர் முன்னிலை வகித்தனர் .

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி மற்றும் சாயல்குடியில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. கடலாடியில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த தின நிகழ்ச்சிக்கு கடலாடி ஒன்றிய குழு தலைவர் முத்துலட்சுமி முனியசாமி பாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர்கள் குமரையா, ஜெயச்சந்திரன், ராஜேந்திரன், சேது பாண்டியன், ஞானம்மாள் மோகன், ஊராட்சித் தலைவர்கள் கடுகு சந்தை காளிமுத்து, கடலாடி ராஜமாணிக்கம் லிங்கம், மேலச்செல்வனூர் மகரஜோதி கோபாலகிருஷ்ணன், முன்னிலை வகித்தனர்.

    கடலாடி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன் கொடி ஏற்றி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இதில் மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், நகர் செயலாளர் முருகேஷ் பாண்டியன், கிளைச் செயலாளர் கிழவன், அங்குசாமி, மாரிமுத்து, வில்வத்துரை, சண்முகராஜா, வீராசாமி, லிங்கம், பாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    இதேபோல் சாயல்குடி யில் அ.தி.மு.க. சார்பில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்த தின நிகழ்ச்சிக்கு சாயல்குடி ஒன்றிய செயலாளர் அந்தோணி ராஜ், நகர் செயலாளர் ஜெயபாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். அ.தி.மு.க. ஒன்றிய அவைத்தலைவர் பெரியசாமி, மாவட்ட பிரதிநிதி அமிர்த பாண்டியன், செவல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பால்பாண்டியன், பிள்ளையார்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவர் கதிரேசன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சந்திரன், முன்னாள் மீனவர் கூட்டுறவு சங்க துணை தலைவர் செய்யது காதர் முன்னிலை வகித்தனர் .

    சாயல்குடியில் எம்ஜிஆர் படத்திற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி ராஜ் மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் அதிபன் சக்கரவர்த்தி நிர்வாகிகள் மதி, அசோக், சவுந்தர்ராஜ், சண்முகராஜ், செல்வவேல், மாரியப்பன், ராஜகோபால், செல்லத்துரை, ஜெயசீலன் புல்லந்தை செந்தூர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
    • பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க சார்பில் எம்.ஜி.ஆரின் 35-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ராமசாமி ராஜா சாலையில் உள்ள அவரது சிலைக்கு நகர வடக்கு அ.தி.மு.க. செயலாளர் வக்கீல் துரைமுருகேசன், தெற்கு செயலாளர் பரமசிவம், மாவட்ட பேரவை செயலாளர் எம்.என்.கிருஷ்ணராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ். என். பாபுராஜ் தலைமையில் தெற்கு, மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.குருசாமி, நவரத்தினம் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

    தென்காசி சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. இணைச் செயலாளர் அழகுராணி, மாவட்ட இளைஞரணி இணைச்செயலாளர் வனராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் யோகசேகரன், மேலப்பாக்கம் கரிசல்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அழகாபுரியான், மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் சோலைமலை, முன்னாள் கவுன்சிலர் குருசாமி, சேத்தூர் பேரூர் செயலாளர் பொன்ராஜ் பாண்டியன், மகளிரணி நிர்வாகி ராதா கிருஷ்ணா ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பணியிலிருந்து ஓய்வு பெற்று, 15 ஆண்டு ஆகிறது.
    • போலீசில் புகார் மனு கொடுங்கள். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள்.

    திருப்பூர் :

    பொங்கலூர் ஒன்றியம், கேத்தனூர் - எட்டமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன், (வயது 73).பல்லடம் தாலுகா அலுவலகத்துக்கு தள்ளாடியபடி வந்த இவர் எனது பட்டாவை மீட்டு தாருங்கள் என அதிகாரிகளிடம் மனு அளித்தார்.

    இது குறித்து ஈஸ்வரன் கூறியதாவது:-

    ஈரோடு ரெயில் நிலையத்தில் கொடி அசைக்கும் வேலை பார்த்து வந்தேன். பணியிலிருந்து ஓய்வு பெற்று, 15 ஆண்டு ஆகிறது. மகள் திருமணமாகி தனியாக உள்ளார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., இருந்தபோது, எனக்கு கேத்தனூரில்15 சென்ட் இடம் கொடுத்தார்.அந்த இடத்தின் பட்டா எனது பெயரில் உள்ளது.

    மனைவியும் இல்லாததால் தனியாக வீடு கட்டி வசித்து வருவதை அறிந்த சிலர் இரண்டு ஆண்டுக்கு முன் எனது வீட்டில் புகுந்து பட்டா சான்றிதழை பறித்துகொண்டு, விரட்டி அடித்து விட்டனர். அதில் முறைகேடாக அவர்களது பெயரை சேர்த்துள்ளனர்.தற்போது வீடும் இல்லாமல், ஓய்வூதியத்தை கொண்டுஒரு நேரம் மட்டுமே சாப்பிட்டு வருகிறேன். எம்.ஜி.ஆர்., கொடுத்த பட்டாவை எனக்கு மீட்டு தாருங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.முதியவரிடம் விசாரித்த அதிகாரிகள், இது குறித்து போலீசில் புகார் மனு கொடுங்கள். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள்என கூறி அனுப்பி வைத்தனர்.

    ×