search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Oldman"

    • ஆசியாவிலேயே முதல் ஈரடுக்கு மேம்பாலமாக நெல்லை சந்திப்பு திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம் உள்ளது.
    • ஒப்பந்தக்காரர் மற்றும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    ஆசியாவிலேயே முதல் ஈரடுக்கு மேம்பாலமாக நெல்லை சந்திப்பு திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலம் உள்ளது.

    பக்கவாட்டு சுவர் இடிந்து விபத்து

    கடந்த 3-ந்தேதி கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் பால் பாக்கெட் வாங்குவதற்காக மொபட்டில் பாலத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது பாலத்தின் பக்கவாட்டு சுவரில் இருந்த பெரிய அளவிலான கல் ஒன்று அவர் மீது விழுந்தது.

    இதில் வேல்முருகன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர்.

    முதியவர் பலி

    இந்நிலையில் இன்று அதிகாலை வேல்முருகன் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதனை தொடர்ந்து அவரது மகன் மற்றும் உறவினர்கள் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் இந்த விபத்து தொடர்பாக ஒப்பந்தக்காரர் மற்றும் அதிகாரிகள் மீது அலட்சியத்தால் மரணத்தை உண்டாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை வாங்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் இருந்த அவரது உடலை சந்திப்பு போலீசார் கைப்பற்றி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    கடந்த மார்ச் மாதம் முதல் இந்த ஈரடுக்கு மேம்பாலத்தில் ரூ.2 கோடியே 83 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • நடராஜன் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர்.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அவினாசி

    அவினாசியை அடுத்துள்ள நடுவச்சேரியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 68). இவர் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். பல வருடங்களாக மனைவியை பிரிந்து தனித்து வாழ்ந்துவந்தார். இந்த நிலையில் இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்த அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • வாலிபர் முதியவருக்கு போன் செய்து தனது உறவினர் ஒருவருக்கு பெண் பார்க்க வேண்டும் என கேட்டு உள்ளார்.
    • பொங்கலூர் லேஅவுட் வாய்க்கால் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது வாலிபர் கல்லை எடுத்து முதியவரை சரமாரியாக தாக்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த அவினாசிபாளையம் பெருந்தொழுவு பகுதியில் வசித்து வருபவர் கருப்பு (வயது 70). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கிளீனர் மற்றும் தோட்டத்து வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று கருப்பு புதிய ஆடை வாங்குவதற்காக திருப்பூர் வந்துள்ளார். அப்போது பழைய பஸ் நிலையம் அருகில் வைத்து 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் முதியவரிடம் அறிமுகமாகியுள்ளார்.பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் போன் நம்பரை பரிமாறிக் கொண்டு நண்பர்கள் ஆகினர்.

    இந்தநிலையில் அந்த வாலிபர் முதியவருக்கு போன் செய்து தனது உறவினர் ஒருவருக்கு பெண் பார்க்க வேண்டும் பெண் ஏதாவது இருக்கிறதா? என கேட்டு உள்ளார். அவரும் எனக்கு தெரிந்த பெண் ஒருவர் இருப்பதாகவும் பார்க்க செல்லலாம் என்று கூறியுள்ளார்.

    இதனையடுத்து அந்த வாலிபர் முதியவரை அழைத்துக் கொண்டு பெண்பார்க்க சென்றுள்ளார். இரவு 8 மணி அளவில் பொங்கலூர் லேஅவுட் வாய்க்கால் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த வாலிபர் கல்லை எடுத்து முதியவரை சரமாரியாக தாக்கினார். இதில் முதியவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

    இதனையடுத்து அந்த வாலிபர் கருப்புவிடம் இருந்த பணம், செல்போன் மற்றும் தங்க மோதிரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கருப்புவை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பான புகாரின் பேரில் அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் முதியவரை தாக்கி பணம் -நகையை பறித்தது தேனி மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் (43) என்பதும் கட்டிட தொழிலாளி என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த நகை, பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து செய்தனர்.

    • ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த மின்னல் நாகராஜ் குடிபோதையில் வந்து தகராறு செய்தார்.

    கோவை:

    கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் மின்னல் நாகராஜ் (வயது 53). இவர் மீது ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை நீதி மன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த மின்னல் நாகராஜ் குடிபோதையில் வந்து தகராறு செய்தார். இது குறித்து கோர்ட் வரவேற்பு அதிகாரி ரங்கநாதன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார்.

    உடனடியாக போலீசார் கோர்ட்டுக்கு விரைந்து சென்று மின்னல் நாகராஜை கைது செய்து ெஜயிலில் அடைத்தனர். 

    • டிராக்டர் மூலம் கயிறு கட்டி மோட்டாரை வெளியே எடுக்க முயற்சி செய்தார். அப்போது கயிறு அறுந்து எதிர்பாராத விதமாக கருப்பசாமி தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.
    • தீயணைப்பாளர்கள் விரைந்து சென்றுஅவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் அதற்குள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    குனியமுத்தூர்:

    கோவை வெள்ளலூர் அண்ணாமலை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி(81). இவரது வீட்டின் உள்ள கிணற்றில் மோட்டார் பழுதடைந்தது. இதனையடுத்து நேற்று டிராக்டர் மூலம் கயிறு கட்டி மோட்டாரை வெளியே எடுக்க முயற்சி செய்தார். அப்போது கயிறு அறுந்து எதிர்பாராத விதமாக கருப்பசாமி தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.

    இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பாளர்கள் விரைந்து சென்றுஅவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் அதற்குள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோவை அனுப்பர்பாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்(43). கேட்டரிங் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதன் காரணமாக ராஜ்குமார் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்தவர் விஷம் குடித்தார்.

    இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் குடும்பத்தினர் ராஜ்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பணியிலிருந்து ஓய்வு பெற்று, 15 ஆண்டு ஆகிறது.
    • போலீசில் புகார் மனு கொடுங்கள். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள்.

    திருப்பூர் :

    பொங்கலூர் ஒன்றியம், கேத்தனூர் - எட்டமநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன், (வயது 73).பல்லடம் தாலுகா அலுவலகத்துக்கு தள்ளாடியபடி வந்த இவர் எனது பட்டாவை மீட்டு தாருங்கள் என அதிகாரிகளிடம் மனு அளித்தார்.

    இது குறித்து ஈஸ்வரன் கூறியதாவது:-

    ஈரோடு ரெயில் நிலையத்தில் கொடி அசைக்கும் வேலை பார்த்து வந்தேன். பணியிலிருந்து ஓய்வு பெற்று, 15 ஆண்டு ஆகிறது. மகள் திருமணமாகி தனியாக உள்ளார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., இருந்தபோது, எனக்கு கேத்தனூரில்15 சென்ட் இடம் கொடுத்தார்.அந்த இடத்தின் பட்டா எனது பெயரில் உள்ளது.

    மனைவியும் இல்லாததால் தனியாக வீடு கட்டி வசித்து வருவதை அறிந்த சிலர் இரண்டு ஆண்டுக்கு முன் எனது வீட்டில் புகுந்து பட்டா சான்றிதழை பறித்துகொண்டு, விரட்டி அடித்து விட்டனர். அதில் முறைகேடாக அவர்களது பெயரை சேர்த்துள்ளனர்.தற்போது வீடும் இல்லாமல், ஓய்வூதியத்தை கொண்டுஒரு நேரம் மட்டுமே சாப்பிட்டு வருகிறேன். எம்.ஜி.ஆர்., கொடுத்த பட்டாவை எனக்கு மீட்டு தாருங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.முதியவரிடம் விசாரித்த அதிகாரிகள், இது குறித்து போலீசில் புகார் மனு கொடுங்கள். நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள்என கூறி அனுப்பி வைத்தனர்.

    ×