என் மலர்
நீங்கள் தேடியது "construction worker"
விழுப்புரம்:
விழுப்புரத்தில் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வை கண்டித்து தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொது நல மத்திய முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநிலத் தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் மணிகண்டன் ஆர்பாட்டத்தை தொடக்கி வைத்தார். நிர்வாகிகள் ஆறுமுகம், முனுசாமி, கோமதி, சக்திவேல், பழனிச்சாமி, பேச்சியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- மோட்டார் சைக்கிள் விபத்தில் கட்டிட தொழிலாளி பலியானார்.
- இவருக்கு சுமதி என்ற மனைவியும், விஜயக்குமரன் என்ற மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை சாலை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஸ்டியான் (55) கட்டிட தொழிலாளி. இவருக்கு சுமதி என்ற மனைவியும், விஜயக்குமரன் என்ற மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.
கிருஸ்டியான் மோட்டார் சைக்கிளில் லாஸ்பேட்டைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். கருவடிக்குப்பம் சாலையில் ஒரு கோழி இறைச்சி கடை அருகே வந்த போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் திடீரென கிருஸ்டியான் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது அதிவேகமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கிருஸ்டியான் தலையில் பலத்த காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிருஸ்டியான் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் விஜயகுமரன் கொடுத்த புகாரின் பேரில் புதுவை வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.