search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corpse recovery"

    • பார்த்திபன் நாமக்கல்லில் உள்ள இ-சேவை மையத்தில் வேலை பார்த்து வந்தார்.
    • கடந்த 24-ந் தேதி மதியம் 2 மணி அளவில் பார்த்திபன் கரூரில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றார். ஆனால் இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் பெரியசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் என்கிற சத்யா(37). இவரது மனைவி மாதேஸ்வரி(35). இவர்களுக்கு 2 பெண் குழந்தை மற்றும் 1 ஆண் குழந்தை உள்ளது. பார்த்திபன் நாமக்கல்லில் உள்ள இ-சேவை மையத்தில் வேலை பார்த்து வந்தார்.

    காணவில்லை

    இந்நிலையில் கடந்த 24-ந் தேதி மதியம் 2 மணி அளவில் பார்த்திபன் கரூரில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக சொல்லிவிட்டு சென்றார். ஆனால் இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. அவரது மனைவி மாதேஸ்வரி பார்த்திபனுக்கு இரவு முழுவதும் போன் செய்தபோது போன் சுவிட்ச் ஆப்பில் இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மாதேஸ்வரி பல்வேறு இடங்களில் கணவரை தேடிப்பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    கிணற்றில் பிணமாக மீட்பு

    இந்நிலையில் நேற்று பார்த்திபன் மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கிணற்றுக்குள் பிணமாக கிடப்பதாக அவரது உறவினர் மாதேஸ்வரிடம் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற மாதேஸ்வரி கணவன் உடலை பார்த்து கதறி அழுதார்.

    மேலும் இது குறித்து மோகனூர் போலீசில் மாதேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பார்த்திபன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அவர் எப்படி கிணற்றுக்குள் விழுந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தற்கொலையா? போலீசார் விசாரணை
    • யார், எந்த ஊரை சேர்ந்தவர் என அடையாளம் தெரியவில்லை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் அடுத்த பாகவெளி ஜங்ஷன் அருகே உள்ள பக்கிரிமலை பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

    இதுகுறித்து காவேரிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர். மது அதிகமாக குடித்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்
    • 60 அடி ஆழத்தில் இறங்கி உடலை மீட்டனர்

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி அடுத்த வெப்பாளம்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது 50).கட்டிடம் மேஸ்திரி. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.

    முதல் மனைவிக்கு ஒரு மகன், மகளும், 2-வது மனைவிக்கு 2 மகள்களும் உள்ளனர்.

    முதல் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். கடந்த 15-ந் தேதி வெளியே சென்று வருவதாக குடும்பத்தினரிடம் செல்வம் கூறிவிட்டு சென்றார்.

    இன்று காலை அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் கிணற்றின் அருகே சென்று பார்த்தனர். அப்போது செல்வம் பிணமாக மிதந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வாணியம்பாடி தாலுகா போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 60 அடி ஆழ கிணற்றில் இறங்கி செல்வம் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்திலிருந்து வாணாபாடி கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் பழமை வாய்ந்த கிணறு உள்ளது.

    ஆழமான இந்த கிணற்றில் தற்போது பெருமளவிற்கு நீர் நிரம்பி உள்ளது . இந்த நிலையில் இன்று காலை கிணற்றில் ஆண் பிணம் மிதப்பது குறித்து அப்பகுதி பொது மக்கள் ராணிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு கிணற்றில் மிதந்த ஆண் பிணத்தை மீட்டனர்.

    கிணற்றில் பிணமாக மிதந்த நபர் சுமார் 50. வயது மதிக்கத்தக்க நபர் ஆவார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? இங்கு எப்படி வந்தார் என்ற விவரம் தெரியவில்லை.

    இதை தொடர்ந்து ராணிப்பேட்டை போலீசார் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கிணற்றில் பிணமாக மிதந்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா, தவறி விழுந்து இறந்து விட்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொலையா? போலீசார் விசாரணை
    • கழுத்தில் பச்சை துண்டு அணிந்திருந்தார்

    வாணாபுரம்:

    திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த தென்கரும்பலூர் ஊராட்சிக்குட்பட்ட பூ மலைகாடு வனப்பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடப்பதாக அப்பகுதியில் விறகு வெட்ட சென்றவர்கள் வாணாபுரம் போலீசுக்கு நேற்று தகவல் தெரிவித்தனர்.

    அதனடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று வனப்பகுதியில் உள்ள உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எதற்காக வனப்பகுதிக்கு வந்தார்? வனவிலங்குகளை வேட்டையாட வந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இறந்தவர் ட்ரவுசர், டிசர்ட் அணிந்திருந்தார். அவர் வைத்திருந்த பையில் செல் போன், தலையில் பொருத்தும் சிறிய ரக லைட் மற்றும் கழுத்தில் பச்சை துண்டு அணிந்திருந்தார்.

    இதனால் அவர் முயல் வேட்டைக்கு சென்ற போது, உடன் வந்தவர் களுடன் தகராறு ஏற் பட்டு அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என் பது உள்ளிட்ட கோணங்க ளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரேத பரி சோதனை அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத் தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வீட்டிலிருந்து வெளியே போனவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    பனப்பாக்கம் அருகே மேலபுலம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 59)கூலி தொழிலாளி. இவரது மனைவி ராணி (55). இவர் கடந்த 5 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சர்க்கரை நோய்க்கு மாத்திரைகள் வாங்க கணவரிடம் பணம் கேட்டதாகவும் அதற்கு அவர் இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த ராணி நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே போனவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடினர். இந்த நிலையில் ராமாபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் ராணி பிணமாக மிதந்ததை கண்ட அப்பகுதியினர் அவளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆத்தூர் காட்டு கொட்டாய் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 65 வயது மதிக்க தக்க ஆண் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார்.
    • இதனை பார்த்த அந்த கிராம நிர்வாக அதிகாரி முனியப்பன் ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சேலம்:

    சேலம்-சென்னை மெயின்ரோட்டில் ஆத்தூர் காட்டு கொட்டாய் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் 65 வயது மதிக்க தக்க ஆண் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார், இதனை பார்த்த அந்த கிராம நிர்வாக அதிகாரி முனியப்பன் ஆத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து விச ாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அருகே பையூர் ஊராட்சிக்குட்பட்ட எத்திராஜ் நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 65). இவர் கடந்த ஒரு வருட காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் மனமுடைந்த சங்கர் அவருடைய மகள் கீதாவிடம் ரூ.1000 வாங்கிக் கொண்டு கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். 2 நாட்களாகியும் அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை பையூர் பாறைக்குளத்தில் இறந்த நிலையில் அவரது உடல் கரை ஒதுங்கியது.

    உடனடியாக ஆரணி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீவட்டிப்பட்டி அடுத்த மோர் பகுதியை சேர்ந்தவர் கணேசன்.
    • இவருடைய விவசாய கிணற்றில் பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாக தீவட்டிப்பட்டி போலீசார் மற்றும் காடையாம்பட்டி தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த மோர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய விவசாய கிணற்றில் பெண் ஒருவர் பிணமாக மிதப்பதாக தீவட்டிப்பட்டி போலீசார் மற்றும் காடையாம்பட்டி தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நிலைய அலுவலர் ராஜசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பிணத்தை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் கிணற்றில் பிணமாக மிதந்தவர் அதே பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவரது மனைவி மாரி (75) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • போலீசார் விசாரணை
    • பிணம் தண்ணீரில் மிதந்து கிடந்தது

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூர் கட்டவாரப்பள்ளியை சேர்ந்தவர் மணிமாறன். இவரது மனைவி நித்யா (வயது 28).

    நேற்று மாலை வீட்டில் அருகில் உள்ள கிணற்றில் நித்யாவின் பிணம் தண்ணீரில் மிதந்து கிடந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விருந்து சென்று போலீசார் நித்தியாவின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து நித்யா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதே போல மாதனூர் அடுத்த பெரியாங்குப்பம் சேர்ந்த தமிழரசி (60), என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்து கிடந்தார்.

    இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா?
    • போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    குடியாத்தத்தை அடுத்த மேல்பட்டி ரெயில் நிலைய யார் டில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் காட்பாடி- ஜோலார்பேட்டை செல்லும் மார்க்கத்தில் தண்டவாளத் தில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டனர். பிண மாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

    முதல் கட்ட விசாரணைக்கு பிறகு உடலை பிரேத பரி சோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனைதொடர்ந்து இறந்த வர் யார்? என்பது குறித்தும் படிக்கட்டில் பயணம் செய்த போது தவறி விழுந்து இறந் தாரா? அல்லது தண்டவா ளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாரா? என்பது குறித்தும் போலீசார் பல் வேறு கோணங்களில் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • யார்? என அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த சின்னகுமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பாற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.

    இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×