ஆண் சடலம் மீட்பு

யார்? என அடையாளம் தெரியவில்லை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆண் சடலம் மீட்பு
Published on: 

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த சின்னகுமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.

இது குறித்து அந்த பகுதி மக்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பாற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.

இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com