அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு

அருப்புக்கோட்டை அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்கப்பட்டது. அவரை மர்ம நபர்கள் கொலை செய்து புதைத்து விட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு
Published on

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம் நான்கு வழி சாலை பகுதியில் உள்ள கொண்டுசெட்டி ஊரணியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அந்தப்பகுதி மக்கள் அருப்புக்கோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த ஆண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிணமாக கிடந்தவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. அவரை மர்ம நபர்கள் கொலை செய்து புதைத்து விட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com