என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் கிணற்றுக்குள் தவறி விழுந்த முதியவர் பலி

- டிராக்டர் மூலம் கயிறு கட்டி மோட்டாரை வெளியே எடுக்க முயற்சி செய்தார். அப்போது கயிறு அறுந்து எதிர்பாராத விதமாக கருப்பசாமி தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.
- தீயணைப்பாளர்கள் விரைந்து சென்றுஅவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் அதற்குள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
குனியமுத்தூர்:
கோவை வெள்ளலூர் அண்ணாமலை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி(81). இவரது வீட்டின் உள்ள கிணற்றில் மோட்டார் பழுதடைந்தது. இதனையடுத்து நேற்று டிராக்டர் மூலம் கயிறு கட்டி மோட்டாரை வெளியே எடுக்க முயற்சி செய்தார். அப்போது கயிறு அறுந்து எதிர்பாராத விதமாக கருப்பசாமி தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பாளர்கள் விரைந்து சென்றுஅவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் அதற்குள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை அனுப்பர்பாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார்(43). கேட்டரிங் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதன் காரணமாக ராஜ்குமார் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்தவர் விஷம் குடித்தார்.
இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் குடும்பத்தினர் ராஜ்குமாரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.