search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை
    X

    எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை

    • மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.
    • அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனால் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்தனர். காலை 10.30 மணிக்கு எடப்பாடி பழனிசாமி காரில் அங்கு வந்து இறங்கினார். அப்போது தொண்டர்கள் வாழ்த்து கோஷமிட்டனர்.

    தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அவரை வரவேற்று அழைத்து சென்றனர். பின்னர் எம்.ஜி.ஆர். சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிலைக்கு அவர் மாலை அணிவித்தார்.

    பின்னர் அவர் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். அதனையடுத்து 107 கிலோ எடை கொண்ட கேக் அங்கு தயார் செய்யப்பட்டிருந்தது. அதனை எடப்பாடி பழனிசாமி வெட்டி அனைவருக்கும் வழங்கினார். பின்னர் மகளிர்களுக்கு சேலை வழங்கினார்.

    மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் ஏற்பாட்டில் அன்னதானம் மற்றும் பெண்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, பா.வளர்மதி, பா.பென்ஜமின், கோகுல இந்திரா, கடம்பூர் ராஜூ, வாலாஜாபாத் கணேசன், மாவட்ட செயலாளர்கள் டி.ஜெயக்குமார், நா.பால கங்கா, டி.ஜி.வெங்கடேஷ் பாபு, ஆதிராஜாராம், வி.என்.ரவி, தி.நகர் சத்யா, அசோக், ஆர்.எஸ்.ராஜேஷ், கே.பி.கந்தன்,

    சிறுபான்மை பிரிவு சேவியர், சிவராஜ், இலக்கிய அணி செயலாளர் இ.சி.சேகர், மாவட்ட துணை செயலாளர் வளசை டில்லி, பெரும்பாக்கம் ராஜசேகர், துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, முன்னாள் கவுன்சிலர் சின்னையன், டாக்டர் சுனில், வடபழனி சத்தியநாராயண மூர்த்தி, மதுரவாயல் வடக்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் முகப்பேர் இளஞ்செழியன், வேளச்சேரி மூர்த்திவேல் ஆதித்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக எடப்பாடி பழனிசாமி கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னையில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தெருக்களிலும், மக்கள் சந்திக்கும் இடங்களிலும் எம்.ஜி.ஆர். படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தன. பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் ஆங்காங்கே எம்.ஜி.ஆர். சினிமா பாடல் ஒலித்துக்கொண்டே இருந்தன.

    Next Story
    ×