search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கத்ரீனா கைஃப்"

    • சமீபத்தில் சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் உரிமையைப் பெற்றது.
    • சிஎஸ்கே அணியின் பிராண்டு அம்பாசிடராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் லீக் வருகிற மார்ச் மற்றும் மே மாதங்களில் நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். போட்டியை மார்ச் 22-ந்தேதி தொடங்கி மே இறுதி வரை நடத்த ஐ.பி.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஆனால் உறுதியாக இன்னும் தேதி அறிவிக்கப்படவில்லை.

    இந்நிலையில் ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்த முக்கியமான தகவல்கள் அடுத்ததுடத்து வெளிவருகின்றன. சமீபத்தில் சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் உரிமையைப் பெற்றது. தற்போது மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

    அது என்னவென்றால், அணியின் பிராண்டு அம்பாசிடராக பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    எனவே எதிர்வரும் சீசனில் சிஎஸ்கே அணி வீரர்கள் பங்கேற்கும் அனைத்து விளம்பரங்களிலும் கத்ரினா கைப்பும் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று போட்டிகளையும் நேரில் கண்டுகளித்து அணியை ஊக்கப்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் மூலம் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
    • இந்த வீடியோவிற்கு எதிராக பலர் குரல் கொடுத்தனர்.

    டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ மற்றும் புகைப்படங்களில் ஒரு நபரின் உருவத்தில், வேறொரு நபரின் முகத்தை துல்லியமாக பதியச் செய்து போலியாக சித்தரிப்பதாகும்.


    சமீபத்தில் இந்த தொழில்நுட்பம் மூலமாக நடிகைகள் ராஷ்மிகா, கத்ரீனா கைஃப், கஜோல், ஆலியா பட் என பலரின் புகைப்படங்கள் ஆபாசமான முறையில் மார்பிங் செய்யப்பட்டு வெளியானது. இந்த வீடியோக்கள் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் பலர் இந்த டீப்ஃபேக் (Deepfake) வீடியோவிற்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர்.

    இதையடுத்து இது போன்ற போலி வீடியோக்களை வெளியிடுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.



    இந்நிலையில், பல குழப்பங்களை உருவாக்கிய டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் மூலம் தற்போது எம்.ஜி.ஆருக்கு உயிர் கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் எம்.ஜி.ஆர் 'பணம் படைத்தவன்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்போன போக்கிலே' பாடலை பாடுகிறார். இந்த வீடியோவை வைரலாக்கும் ரசிகர்கள் பல குழப்பங்களை செய்த டீப்ஃபேக் (Deepfake) தொழில்நுட்பம் தற்போது தான் அருமையான ஒரு செயலை செய்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • நடிகை ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்டில் செல்வது போன்ற வீடியோ வெளியானது.
    • அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஏராளமான மோசடிகள் நடக்கின்றன. சமீபத்தில் முன்னணி நடிகையான ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்டில் செல்வது போன்ற வீடியோ வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.


    இதைத்தொடர்ந்து நடிகை ராஷ்மிகா 'தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது' என்று வேதனையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து deep fake மூலம் 'டைகர் 3' திரைப்படத்தில் நடிகை கத்ரீனா கைஃப்யின் சண்டை காட்சி மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்துடன் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பாலிவுட் நடிகை கஜோல் உடை மாற்றுவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால், அந்த வீடியோ deep fake மூலம் போலியாக உருவாக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்களில் பிரபலமான ரோஸி பிரீனின் வீடியோவில் அவரது முகத்திற்கு பதிலாக கஜோலின் முகத்தை வைத்து இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ×