என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தல்"

    • தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும்.
    • ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வெளியே மொபைல் டெபாசிட் மையம் அமைக்கப்படும்.

    திமுக வேட்பாளர்கள் நேர்காணல் வரும் 17ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களுக்கு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    மேலும், தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் 5 வாக்காளரகளுக்காக ஒரு வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படுகிறது.

    தேர்தல் அதிகாரிகள் 3 மணி நேரம் பயணம் செய்து வெள்ளிமலை பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்க உள்ளனர்.

    ஒவ்வொரு வாக்குச்சாவடியின் வெளியே மொபைல் டெபாசிட் மையம் அமைக்கப்படும். வாக்களிக்க வருபவர்கள் தங்கள் செல்போனை பத்திரமாக வாக்குச்சாவடிக்கு வெளியே வைத்துச்செல்ல ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

    அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

    • தமிழகத்திற்கு வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு.
    • மே 4ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

    தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு இன்று மாலை 4 மணியளவில், டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்தார்.

    அதன்படி, தமிழகத்திற்கு வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக 234 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும், மே 4ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார்.

    இதேபோல், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30ம் தேதி தொடங்கும் என தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

    ஏப்ரல் 6ம் தேதியுடன் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் ஏப்ரல் 7ம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது.

    வேட்புபமனுக்களை திரும்பப்பெற ஏப்ரல் 9ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த வாரம் புதுச்சேரி மற்றும் திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.
    • பொதுக்கூட்டம் மாலை 6.30 மணி முதல், மாலை 7.30 மணி வரை நடைபெறுகிறது.

    திருச்சி:

    2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற பரபரப்பான சூழலில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அ.தி.மு.க.-பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியினர், ஆளும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை தோற்கடித்து ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிர களப் பணியை தொடங்கியுள்ளனர்.

    பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தொடர்ந்து தமிழகத்திற்கு வருகை தந்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த வாரம் புதுச்சேரி மற்றும் திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.

    அந்த வகையில் மீண்டும் வருகிற 11-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற உள்ள அரசு விழா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

    அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் பஞ்சப்பூரில் விழா நடைபெறும் பகுதிக்கு செல்கிறார். முதலில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு நிறைவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பேசுகிறார்.

    அதன் பின்னர் அதே பகுதியின் மறுபக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசுகிறார். இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இந்த பொதுக்கூட்டம் மாலை 6.30 மணி முதல், மாலை 7.30 மணி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு எடமலைப்பட்டி புதூர் வழியாக காரில் திருச்சி விமான நிலையம் செல்லும் மோடி அங்கிருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, மாநகர பொறியாளர் சிவபாதம், பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிரதமர் வருகை, பாதுகாப்பு, பொதுமக்கள், கட்சியினர் கலந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி திருச்சியில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளது பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தவெக கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டதை குறிக்கும் வகையில் பதிவு.
    • ஏற்கனவே விஜயுடன் சந்திப்பு, ஆதரவுக் கருத்து என சர்ச்சை கிளப்பியவர் பிரவீன் சக்கரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

    விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வத் தேர்தல் சின்னமாக விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

    இந்நிலையில், தவெக கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்படடு விட்டதை குறிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் தரவுப் பகுப்பாய்வுப் பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் தள பக்கத்தில்,"

    தமிழ்நாடு 2026 தேர்தலுக்கான விசில் ஊதப்பட்டு விட்டது.

    இப்போது அனைத்துக் கட்சிகளும் தேர்தல் ஓட்டத்திற்கு தயாராி விட்டன" என ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.

    ஏற்கனவே விஜயுடன் சந்திப்பு, ஆதரவுக் கருத்து என சர்ச்சை கிளப்பியவர் பிரவீன் சக்கரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்திற்கான சிறப்புப் பார்வையாளர்களை (Special Observers) நியமித்துள்ளது.
    • கூட்டணியில் வலுவான இடத்தைப் பிடிக்கவும் இந்த நியமனங்கள் முக்கியம்.

    2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) தமிழகத்திற்கான சிறப்புப் பார்வையாளர்களை (Special Observers) நியமித்துள்ளது.

    இந்நிலையில், முகுல் வாஸ்னிக், உத்தம் குமார் ரெட்டி, முகமது நிஜாமுதீன் ஆகியோரை சிறப்பு பார்வையாளர்களாக காங்கிரஸ் நியமித்தது.

    முகுல் வாஸ்னிக் : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர்.

    உத்தம் குமார் ரெட்டி: தெலுங்கானா மாநில அமைச்சர் மற்றும் முன்னாள் பி.சி.சி தலைவர்.

    முகமது நிஜாமுதீன் : பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த தலைவர்.

    2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) போன்ற புதிய கட்சிகளின் வருகையால், காங்கிரஸ் தனது வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ளவும், கூட்டணியில் வலுவான இடத்தைப் பிடிக்கவும் இந்த நியமனங்கள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றன.

    ஏற்கனவே கிரிஷ் சோடங்கர் (Girish Chodankar) தமிழக காங்கிரஸ் மேலிடப் பார்வையாளராக இருக்கும் நிலையில், இந்த மூவர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தால் கடுமையான போட்டியாக அமையும்.
    • 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தான் செல்லும்.

    சென்னை அடையாறில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக- தவெக இடையே தான் போட்டி.

    2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தான் செல்லும்.

    விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தால் கடுமையான போட்டியாக அமையும்.

    மனோஜ் பாண்டியன் திமுகவிற்கு சென்றது வருத்தமளிக்கிறது. இருப்பினும், மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம்.

    பல கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடக்க கட்டத்தில் உள்ளது. இறுதி முடிவு எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேமுதிகவின் வாக்கு வங்கி ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்து வருகிறது
    • முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு பிரேமலதா செல்லவில்லை

    தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்ந்த விஜயகாந்த், தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகியவற்றிற்கு மாற்றாக கடந்த 2005 செப்டம்பர் 14 அன்று "தேசிய முற்போக்கு திராவிட கழகம்" (DMDK) எனும் புதிய கட்சியை தொடங்கினார். இக்கட்சிக்கு முரசு சின்னம், தேர்தல் சின்னமாக கிடைத்தது.

    மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இக்கட்சியின் வாக்கு வங்கி சதவீதம், 2006 (சட்டசபை) - 8.38, 2009 (பாராளுமன்றம்) - 10.08, 2011 (சட்டசபை) - 7.88, 2014 (பாராளுமன்றம்) - 5.19, 2016 (சட்டசபை) - 2.39, 2019 (பாராளுமன்றம்) - 2.19 என தேர்தலுக்கு தேர்தல் குறைந்தவாறு உள்ளது.

    2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 29 சட்டசபை இடங்களை கைப்பற்றிய தேமுதிக, பதிவான வாக்குகளில் 6 சதவீதத்துக்கும் குறைவாக பெற்று, தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் ஒரு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. அக்கட்சியின் சார்பில் வெற்றி பெறாததால் மாநில கட்சி அந்தஸ்தையும், முரசு சின்னத்தையும் இழக்கும் அபாய கட்டத்திற்கே வந்தது.

    சமீப சில வருடங்களாக அக்கட்சியின் நிறுவனரும், தலைவருமான விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், அக்கட்சியின் நிர்வாகிகளில் பலர் வேறு கட்சிகளுக்கு வெளியேறினர்; தொண்டர்களும் குறைய தொடங்கினர்.

    இந்நிலையில், டிசம்பர் 14 அன்று தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில், பொது செயலாளராக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.

    தொடர்ந்து பிரேமலதா உரையாற்றும் போது, "பெண்களுக்கு அரசியல் ஒரு பெரும் சவால். ஜெயலலிதா சந்திக்காத சவால்களே இல்லை. விஜயகாந்திற்கு எம்.ஜி.ஆர்.தான் குரு; எனக்கு ஜெயலலிதாதான் ரோல் மாடல்" என குறிப்பிட்டார்.


    மேலும், மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்திய அவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு செல்லவில்லை. இந்த செயல் விமர்சகர்களால் முக்கியத்துவம் அளித்து பேசப்படுகிறது

    பல சவால்களை வெற்றிகரமாக எதிர் கொண்ட "இரும்பு பெண்மணி" என அழைக்கப்பட்ட மறைந்த அதிமுகவின் பொது செயலாளர் ஜெயலலிதா ஒரு ஆளுமை மிக்க தலைவராக கருதப்பட்டவர். தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் இடத்தை நிரப்பக் கூடிய பெண் அரசியல் தலைவர்கள் இன்னும் உருவாகவில்லை என்பதே அரசியல் விமர்சகர்களின் பார்வையாக உள்ளது.

    இப்பின்னணியில், பிரேமலதாவின் உரையும், மறைந்த அதிமுக தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதும், ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை நிரப்ப அவர் முன்னெடுக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

    அதிமுகவின் பெரும் தலைவர்களை நினைவுகூர்ந்த அவரது பேச்சிலும், நினைவகங்களுக்கு செல்வதில் திமுகவை புறந்தள்ளுவதை போல் நடந்து கொண்டதும் பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளன.

    பா.ஜ.க.வை உதறி விட்டு தேர்தலை சந்திக்க உள்ள அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு தேமுதிக தயாராக உள்ளதாக அதிமுக தலைவர்களுக்கு மறைமுகமாக பிரேமலதா விடுக்கும் செய்தியாக சில விமர்சகர்கள் இதை கணிக்கின்றனர்.

    "கருப்பு எம்.ஜி.ஆர்." என ரசிகர்களால் அழைக்கப்பட்டு எம்.ஜி.ஆர். இடத்தை நிரப்ப விஜயகாந்த் முயன்றது போல், ஜெயலலிதாவிற்கு மாற்றாக தன்னை முன்னிறுத்தி அதிமுகவின் வாக்கு வங்கியின் ஒரு பகுதியை அறுவடை செய்ய பிரேமலதா நினைக்கலாம் என்பது சில விமர்சகர்களின் கணிப்பு.

    இப்பின்னணியில், வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தல் மிக முக்கியமான தேர்தலாக எதிர்நோக்கப்படுகிறது.


    ஸ்டாலினே முதல்வர் வேட்பாளராக நிற்பாரா அல்லது தனது மகன் உதயநிதியை முன்னிறுத்துவாரா என்பது தெரியவில்லை.

    2017ல் சசிகலாவால் தேர்வு செய்யப்பட்டு 2021 வரை முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தி களத்தில் இறங்க போகும் முதல் தேர்தல் இதுதான்.

    திமுகவையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து தொடர்ந்து பிரசாரம் செய்து வரும் பா.ஜ.க. இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் என்ன சேதாரத்தை ஏற்படுத்தும் என்பதும் தற்போது தெளிவாகவில்லை.

    இவர்களுக்கு நடுவே தேமுதிக பொது செயலாளரின் கணக்குகள் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    ×